1. ஆண்டவரின் பேரன்பைப்பற்றி நான் என்றும் பாடுவேன்; நீர் உண்மையுள்ளவர் எனத் தலைமுறைதோறும் என் நாவால் அறிவிப்பேன்.
|
3. நீர் உரைத்தது; 'நான் தேர்ந்து கொண்டவனோடு உடன்படிக்கை செய்துகொண்டேன்; என் ஊழியன் தாவீதுக்கு ஆணையிட்டு நான் கூறியது;
|
4. உன் வழிமரபை என்றென்றும் நிலைக்கச் செய்வேன்; உன் அரியணையைத் தலைமுறை தலைமுறையாக நிலைத்திருக்கச் செய்வேன்' (சேலா)
|
7. தூயவர் குழுவில் அவர் அஞ்சுதற்குரிய இறைவன்; அவரைச் சூழ்ந்துள்ள அனைவருக்கும் மேலாக அஞ்சுதற்கு உரியவர்.
|
8. படைகளின் கடவுளாகிய ஆண்டவரே! உம்மைப்போல் ஆற்றல் மிக்கவர் யார்? ஆண்டவரே! உம் உண்மை உம்மைச் சூழ்ந்துள்ளது.
|
15. விழாவின் பேரொலியை அறிந்த மக்கள் பேறுபெற்றோர்; ஆண்டவரே! உம் முகத்தின் ஒளியில் அவர்கள் நடப்பார்கள்.
|
19. முற்காலத்தில் உம் பற்றுமிகு அடியார்க்கு நீர் காட்சி தந்து கூறியது; "வீரன் ஒருவனுக்கு வலிமை அளித்தேன்; மக்களினின்று தேர்ந்தெடுக்கப்பட்டவனை உயர்த்தினேன்.
|
28. அவன்மீது கொண்ட பேரன்பு என்றும் நிலைக்குமாறு செய்வேன்; அவனோடு நான் செய்துகொண்ட உடன்படிக்கையும் எப்பொழுதும் நிலைத்திருக்கும்.
|
32. அவர்களது குற்றத்திற்காக அவர்களைப் பிரம்பினால் தண்டிப்பேன்; அவர்களின் தீச்செயலுக்காக அவர்களைக் கசையால் அடிப்பேன்;
|
35. ஒரே முறையாய் என் புனிதத்தின் மீது ஆணையிட்டுக் கூறினேன்; ஒருபோதும் அவனுக்கு நான் பொய் உரைக்கமாட்டேன்.
|
38. ஆயினும், திருப்பொழிவு பெற்றவரை இப்போது நீர் புறக்கணித்துத் தள்ளிவிட்டீர்; அவர்மீது கடுஞ்சினம் கொண்டுள்ளீர்.
|
39. உம் ஊழியருடன் செய்துகொண்ட உடன்படிக்கையை வெறுத்து ஒதுக்கினீர்; அவரது மணிமுடியைப் புழுதில் தள்ளி இழிவுபடுத்தினீர்.
|
46. எவ்வளவு காலம் மறைந்திருப்பீர் ஆண்டவரே! என்றென்றுமா? எவ்வளவு காலம் உமது சினம் நெருப்பென எரிந்து கொண்டிருக்கும்?
|
48. என்றும் சாவைக் காணாமல் இருப்பவர் எவர்? பாதாளத்தின் பிடியினின்று தன்னைக் காத்துக் கொள்பவர் எவர்? (சேலா)
|
49. என் தலைவரே! தொடக்க காலத்தில் நீர் காட்டிய பேரன்பு எங்கே? தாவீதுக்கு உமது வாக்குப் பிறாழாமையை முன்னிட்டு உறுதியாகக் கூறியது எங்கே?
|
50. என் தலைவரே! உம் ஊழியர்மீது சுமத்தப்படும் பழியை நினைத்துப்பாரும்; மக்களினங்களின் பழிச்சொற்கள் அனைத்தையும் என் நெஞ்சில் தாங்குகிறேன்.
|
51. ஆண்டவரே! உம் எதிரிகள் அவர் மேல் பழி சுமத்துகின்றனர்; அவர்கள் உம்மால் திருப்பொழிவு பெற்றவரைச் சென்றவிடமெல்லாம் தூற்றுகின்றனர்.
|