1. {நாடு இடருற்றபோது பாடியது[BR](எஸ்ராகியரான ஏத்தானின் அறப்பாடல்)} [PS] [QS][SS] ஆண்டவரின் பேரன்பைப்பற்றி[SE][SS] நான் என்றும் பாடுவேன்;[SE][SS] நீர் உண்மையுள்ளவர் எனத்[SE][SS] தலைமுறைதோறும்[SE][SS] என் நாவால் அறிவிப்பேன்.[SE][QE]
2. [QS][SS] உமது பேரன்பு[SE][SS] என்றென்றும் நிலைத்துள்ளது என்று[SE][SS] அறிவிப்பேன்;[SE][SS] உமது உண்மை வானைப்போல்[SE][SS] உறுதியானது.[SE][QE]
3. [QS][SS] நீர் உரைத்தது:[SE][SS] ‛நான் தேர்ந்துகொண்டவனோடு[SE][SS] உடன்படிக்கை செய்துகொண்டேன்;[SE][SS] என் ஊழியன் தாவீதுக்கு[SE][SS] ஆணையிட்டு நான் கூறியது:[SE][QE]
4. [QS][SS] உன் வழிமரபை[SE][SS] என்றென்றும் நிலைக்கச் செய்வேன்;[SE][SS] உன் அரியணையைத்[SE][SS] தலைமுறை தலைமுறையாக[SE][SS] நிலைத்திருக்கச் செய்வேன்’ (சேலா)[SE][QE]
5. [QS][SS] ஆண்டவரே, வானங்கள்[SE][SS] உம் வியத்தகு செயல்களைப் [BR] புகழ்கின்றன;[SE][SS] தூயவர் குழுவினில்[SE][SS] உமது உண்மை விளங்கும். [* 2 சாமு 7:12-16; 1 குறி 17:11-14; திபா 132:11; திப 2:30 ] [SE][QE]
6. [QS][SS] வான்வெளியில்[SE][SS] ஆண்டவருக்கு நிகரானவர் யார்?[SE][SS] தெய்வ மைந்தர் குழுவில்[SE][SS] ஆண்டவருக்கு இணையானவர் யார்?[SE][QE]
7. [QS][SS] தூயவர் குழுவில்[SE][SS] அவர் அஞ்சுதற்குரிய இறைவன்;[SE][SS] அவரைச் சூழ்ந்துள்ள அனைவருக்கும்[SE][SS] மேலாக அஞ்சுதற்கு உரியவர்.[SE][QE]
8. [QS][SS] படைகளின் கடவுளாகிய ஆண்டவரே![SE][SS] உம்மைப்போல் ஆற்றல் மிக்கவர் யார்?[SE][SS] ஆண்டவரே! உம் உண்மை[SE][SS] உம்மைச் சூழ்ந்துள்ளது.[SE][QE]
9. [QS][SS] கொந்தளிக்கும் கடல்மீது[SE][SS] நீர் ஆட்சி செலுத்துகின்றீர்;[SE][SS] பொங்கியெழும் அதன் அலைகளை[SE][SS] அடக்குகின்றீர்.[SE][QE]
10. [QS][SS] இராகாபைப் பிணமென நசுக்கினீர்;[SE][SS] உம் எதிரிகளை[SE][SS] உம் வலிய புயத்தால் சிதறடித்தீர்.[SE][QE]
11. [QS][SS] வானமும் உமதே! வையமும் உமதே![SE][SS] பூவுலகையும் அதில் நிறைந்துள்ள[SE][SS] அனைத்தையும்[SE][SS] நிலைநிறுத்தியவர் நீரே![SE][QE]
12. [QS][SS] வடக்கையும் தெற்கையும் படைத்தவர் நீரே![SE][SS] தாபோரும் எர்மோனும் உம் பெயரைக்[SE][SS] களிப்புடன் புகழ்கின்றன.[SE][QE]
13. [QS][SS] வன்மைமிக்கது உமது புயம்;[SE][SS] வலிமைகொண்டது உமது கை;[SE][SS] உயர்ந்து நிற்பது உம் வலக்கை;[SE][QE]
14. [QS][SS] நீதியும் நேர்மையும்[SE][SS] உம் அரியணைக்கு அடித்தளம்;[SE][SS] பேரன்பும் உண்மையும்[SE][SS] உமக்கு முன்னே செல்லும்.[SE][QE]
15. [QS][SS] விழாவின் பேரொலியை[SE][SS] அறிந்த மக்கள் பேறுபெற்றோர்;[SE][SS] ஆண்டவரே! உம் முகத்தின் ஒளியில்[SE][SS] அவர்கள் நடப்பார்கள்.[SE][QE]
16. [QS][SS] அவர்கள் நாள்முழுவதும்[SE][SS] உம் பெயரில் களிகூர்வார்கள்;[SE][SS] உமது நீதியால்[SE][SS] அவர்கள் மேன்மை அடைவார்கள்.[SE][QE]
17. [QS][SS] ஏனெனில், நீரே அவர்களது[SE][SS] ஆற்றலின் மேன்மை;[SE][SS] உமது தயவால் எங்கள் வலிமை[SE][SS] உயர்த்தப்பட்டுள்ளது.[SE][QE]
18. [QS][SS] நம் கேடயம் ஆண்டவருக்கு உரியது;[SE][SS] நம் அரசர் இஸ்ரயேலின் தூயவருக்கு உரியவர்.[SE][PE][QE]
19. {கடவுள் தாவீதுக்கு அளித்த வாக்குறுதி} [PS] [QS][SS] முற்காலத்தில் உம் பற்றுமிகு அடியார்க்கு[SE][SS] நீர் காட்சி தந்து கூறியது:[SE][SS] “வீரன் ஒருவனுக்கு வலிமை அளித்தேன்;[SE][SS] மக்களினின்று தேர்ந்தெடுக்கப்பட்டவனை [BR] உயர்த்தினேன்.[SE][QE]
20. [QS][SS] என் ஊழியன் தாவீதைக்[SE][SS] கண்டுபிடித்தேன்;[SE][SS] என் திருத்தைலத்தால் அவனுக்குத்[SE][SS] திருப்பொழிவு செய்தேன்.[SE][QE]
21. [QS][SS] என் கை எப்பொழுதும்[SE][SS] அவனோடு இருக்கும்;[SE][SS] என் புயம் உண்மையாகவே[SE][SS] அவனை வலிமைப்படுத்தும். [* 1 சாமு 13:14; 16:12; திப 13:22 ] [SE][QE]
22. [QS][SS] எதிரி எவனாலும்[SE][SS] அவனை வஞ்சிக்க முடியாது;[SE][SS] தீயவன் எவனாலும்[SE][SS] அவனை ஒடுக்க இயலாது.[SE][QE]
23. [QS][SS] அவனுடைய எதிரிகளை[SE][SS] அவன் கண்முன் நசுக்குவேன்;[SE][SS] அவனை வெறுப்போரை[SE][SS] வெட்டிக் கொல்வேன்.[SE][QE]
24. [QS][SS] என் வாக்குப் பிறழாமையும் பேரன்பும்[SE][SS] அவனோடு இருக்கும்;[SE][SS] என் பெயரால் அவனது வலிமை[SE][SS] உயர்த்தப்படும்.[SE][QE]
25. [QS][SS] அவன் கையைக் கடல்வரைக்கும்[SE][SS] அவன் வலக்கையை ஆறுகள் வரைக்கும்[SE][SS] எட்டச் செய்வேன்.[SE][QE]
26. [QS][SS] ‛நீரே என் தந்தை, என் இறைவன்,[SE][SS] என் மீட்பின் பாறை’ என்று[SE][SS] அவன் என்னை அழைப்பான்.[SE][QE]
27. [QS][SS] நான் அவனை[SE][SS] என் தலைப்பேறு ஆக்குவேன்;[SE][SS] மண்ணகத்தின் மாபெரும்[SE][SS] மன்னன் ஆக்குவேன்.[SE][QE]
28. [QS][SS] அவன்மீது கொண்ட பேரன்பு[SE][SS] என்றும் நிலைக்குமாறு செய்வேன்;[SE][SS] அவனோடு நான் செய்துகொண்ட[SE][SS] உடன்படிக்கையும்[SE][SS] எப்பொழுதும் நிலைத்திருக்கும். [* திவெ 1:5 ] [SE][QE]
29. [QS][SS] அவனது வழிமரபை[SE][SS] என்றென்றும் நிலைநிறுத்துவேன்;[SE][SS] அவனது அரியணையை[SE][SS] வான்வெளி உள்ளவரை[SE][SS] நிலைக்கச் செய்வேன்.[SE][QE]
30. [QS][SS] அவன் புதல்வர்[SE][SS] என் திருச்சட்டத்தைக் கைவிட்டாலோ,[SE][SS] என் நீதிநெறிகளின்படி நடக்காவிடிலோ,[SE][QE]
31. [QS][SS] என் விதிகளை மீறினாலோ,[SE][SS] என் கட்டளைகளைக்[SE][SS] கடைப்பிடிக்காவிடிலோ,[SE][QE]
32. [QS][SS] அவர்களது குற்றத்திற்காக[SE][SS] அவர்களைப் பிரம்பினால் தண்டிப்பேன்;[SE][SS] அவர்களின் தீச்செயலுக்காக[SE][SS] அவர்களைக் கசையால் அடிப்பேன்;[SE][QE]
33. [QS][SS] ஆயினும், என் பேரன்பை[SE][SS] தாவீதைவிட்டு விலக்கமாட்டேன்;[SE][SS] என் வாக்குப்பிறாழாமையினின்று[SE][SS] வழுவமாட்டேன்.[SE][QE]
34. [QS][SS] என் உடன்படிக்கையை[SE][SS] நான் மீறமாட்டேன்.[SE][SS] என் வாக்குறுதியை[SE][SS] நான் மாற்றமாட்டேன்.[SE][QE]
35. [QS][SS] ஒரே முறையாய் என் புனிதத்தின் மீது[SE][SS] ஆணையிட்டுக் கூறினேன்;[SE][SS] ஒருபோதும் அவனுக்கு நான்[SE][SS] பொய் உரைக்கமாட்டேன்.[SE][QE]
36. [QS][SS] அவனது வழிமரபு[SE][SS] என்றென்றும் நிலைத்திருக்கும்;[SE][SS] அவனது அரியணை[SE][SS] கதிரவன் உள்ளளவும்[SE][SS] என்முன் நிலைக்கும்.[SE][QE]
37. [QS][SS] அது விண்ணின் உண்மையான[SE][SS] சான்றென உறுதியாயிருக்கும்;[SE][SS] நிலாவென என்றென்றும்[SE][SS] நிலைத்திருக்கும்.” (சேலா)[SE][PE][QE]
38. {அரசரின் தோல்வி குறித்துப் புலம்பியது} [PS] [QS][SS] ஆயினும், திருப்பொழிவு பெற்றவரை[SE][SS] இப்போது நீர்[SE][SS] புறக்கணித்துத் தள்ளிவிட்டீர்;[SE][SS] அவர்மீது கடுஞ்சினம் கொண்டுள்ளீர்.[SE][QE]
39. [QS][SS] உம் ஊழியருடன் செய்துகொண்ட[SE][SS] உடன்படிக்கையை வெறுத்து ஒதுக்கினீர்;[SE][SS] அவரது மணிமுடியைப்[SE][SS] புழுதில் தள்ளி இழிவுபடுத்தினீர்.[SE][QE]
40. [QS][SS] அவருடைய மதில்களைத்[SE][SS] தகர்த்துவிட்டீர்;[SE][SS] அவருடைய அரண்களைப்[SE][SS] பாழடையச் செய்தீர்.[SE][QE]
41. [QS][SS] வழிப்போக்கர் அனைவரும்[SE][SS] அவரைக் கொள்ளையிடுகின்றனர்;[SE][SS] அடுத்து வாழ்வோரின் பழிப்புக்கு[SE][SS] அவர் ஆளானார்.[SE][QE]
42. [QS][SS] அவருடைய எதிரிகளின் கை[SE][SS] ஓங்கச் செய்தீர்;[SE][SS] அவருடைய பகைவர் அனைவரும்[SE][SS] அக்களிக்கச் செய்தீர்.[SE][QE]
43. [QS][SS] அவரது வாளின் முனையை[SE][SS] வளைத்துவிட்டீர்;[SE][SS] போரில் அவரால்[SE][SS] எதிர்த்து நிற்க முடியாதபடி செய்தீர்.[SE][QE]
44. [QS][SS] அவரது மாட்சி[SE][SS] அவரைவிட்டு விலகச் செய்தீர்;[SE][SS] அவரது அரியணையைக்[SE][SS] கீழே தள்ளிவிட்டீர்,[SE][QE]
45. [QS][SS] அவரது இளமையைச் சுருக்கிவிட்டீர்;[SE][SS] அவருக்கு வெட்கத்தை[SE][SS] ஆடையாக்கினீர். (சேலா)[SE][PE][QE]
46. {விடுதலைக்காக வேண்டல்} [PS] [QS][SS] எவ்வளவு காலம் மறைந்திருப்பீர்[SE][SS] ஆண்டவரே! என்றென்றுமா?[SE][SS] எவ்வளவு காலம் உமது சினம்[SE][SS] நெருப்பென எரிந்து கொண்டிருக்கும்?[SE][QE]
47. [QS][SS] எங்கள் ஆயுள் எவ்வளவு குறுகியது[SE][SS] என்பதை நினைத்தருளும்;[SE][SS] மானிடர் அனைவரையும்[SE][SS] வீணாகவா படைத்துள்ளீர்?[SE][QE]
48. [QS][SS] என்றும் சாவைக்[SE][SS] காணாமல் இருப்பவர் எவர்?[SE][SS] பாதாளத்தின் பிடியினின்று தன்னைக்[SE][SS] காத்துக் கொள்பவர் எவர்? (சேலா)[SE][QE]
49. [QS][SS] என் தலைவரே! தொடக்க காலத்தில்[SE][SS] நீர் காட்டிய பேரன்பு எங்கே?[SE][SS] தாவீதுக்கு உமது[SE][SS] வாக்குப் பிறாழாமையை முன்னிட்டு[SE][SS] உறுதியாகக் கூறியது எங்கே?[SE][QE]
50. [QS][SS] என் தலைவரே![SE][SS] உம் ஊழியர்மீது சுமத்தப்படும்[SE][SS] பழியை நினைத்துப்பாரும்;[SE][SS] மக்களினங்களின் பழிச்சொற்கள் [BR] அனைத்தையும்[SE][SS] என் நெஞ்சில் தாங்குகிறேன்.[SE][QE]
51. [QS][SS] ஆண்டவரே! உம் எதிரிகள்[SE][SS] அவர் மேல் பழி சுமத்துகின்றனர்;[BR]அவர்கள் உம்மால்[SE][SS] திருப்பொழிவு பெற்றவரைச்[SE][SS] சென்றவிடமெல்லாம் தூற்றுகின்றனர்.[SE][QE]
52. [QS][SS] ஆண்டவர் என்றென்றும்[SE][SS] புகழப்பெறுவாராக![SE][SS] ஆமென், ஆமென்.[SE][PE]