1. {உதவிக்காக வேண்டல்[BR](கோராகியரின் புகழ்ப்பாடல்; பாடகர் தலைவர்க்கு: ‘நோயின் துயரில்’ என்ற மெட்டு; எஸ்ராகியரான ஏமானின் அறப்பாடல்)} [PS] [QS][SS] ஆண்டவரே! என் மீட்பின்[SE][SS] கடவுளே![SE][SS] பகலில் கதறுகிறேன்;[SE][SS] இரவில் உமது முன்னிலையில்[SE][SS] புலம்புகின்றேன்.[SE][QE]
2. [QS][SS] என் மன்றாட்டு உம் திருமுன் வருவதாக![SE][SS] என் கூக்குரலுக்குச் செவிசாய்த்தருளும்![SE][QE]
3. [QS][SS] ஏனெனில், என் உள்ளம்[SE][SS] துன்பத்தால் நிறைந்துள்ளது;[SE][SS] என் உயிர் பாதாளத்தை நெருங்கிவிட்டது.[SE][QE]
4. [QS][SS] படுகுழிக்குள் இறங்குவோருள் ஒருவராக[SE][SS] நானும் கணிக்கப்படுகின்றேன்;[SE][SS] வலுவிழந்த மனிதரைப்போல் ஆனேன்.[SE][QE]
5. [QS][SS] இறந்தோருள் ஒருவராகக்[SE][SS] கைவிடப்பட்டேன்;[SE][SS] கொலையுண்டு கல்லறையில்[SE][SS] கிடப்பவர்போல் ஆனேன்;[SE][SS] அவர்களை ஒருபோதும்[SE][SS] நீர் நினைப்பதில்லை;[SE][SS] அவர்கள் உமது பாதுகாப்பினின்று[SE][SS] அகற்றப்பட்டார்கள்.[SE][QE]
6. [QS][SS] ஆழமிகு படுகுழிக்குள்[SE][SS] என்னைத் தள்ளிவிட்டீர்![SE][SS] காரிருள் பள்ளங்களுக்குள்[SE][SS] என்னைக் கைவிட்டு விட்டீர்.[SE][QE]
7. [QS][SS] உமது சினம் என்னை அழுத்துகின்றது;[SE][SS] உம் அலைகள் அனைத்தும்[SE][SS] என்னை வருத்துகின்றன. (சேலா)[SE][QE]
8. [QS][SS] எனக்கு அறிமுகமானவர்களை[SE][SS] என்னைவிட்டு விலகச்செய்தீர்;[SE][SS] அவர்களுக்கு என்னை[SE][SS] அருவருப்பாக்கினீர்;[SE][SS] நான் வெளியேற இயலாவண்ணம்[SE][SS] அடைபட்டுள்ளேன்.[SE][QE]
9. [QS][SS] துயரத்தினால் என் கண்[SE][SS] மங்கிப்போயிற்று;[SE][SS] ஆண்டவரே! நாள்தோறும்[SE][SS] உம்மை மன்றாடுகின்றேன்;[SE][SS] உம்மை நோக்கி[SE][SS] என் கைகளைக் கூப்புகின்றேன்.[SE][QE]
10. [QS][SS] இறந்தோர்க்காகவா நீர்[SE][SS] வியத்தகு செயல்கள் செய்வீர்?[SE][SS] கீழுலகின் ஆவிகள் எழுந்து[SE][SS] உம்மைப் புகழுமோ? (சேலா) [* திவெ 15:4.[QE] ] [SE][QE]
11. [QS][SS] கல்லறையில் உமது பேரன்பு[SE][SS] எடுத்துரைக்கப்படுமா?[SE][SS] அழிவின் தலத்தில்[SE][SS] உமது உண்மை அறிவிக்கப்படுமா?[SE][QE]
12. [QS][SS] இருட்டினில் உம் அருஞ்செயல்கள்[SE][SS] அறியப்படுமா?[SE][SS] மறதி உலகில்[SE][SS] உம் நீதிநெறி உணரப்படுமா?[SE][QE]
13. [QS][SS] ஆண்டவரே! நானோ[SE][SS] உம்மை நோக்கிக் கதறுகின்றேன்;[SE][SS] காலையில் உம்மை நோக்கி[SE][SS] மன்றாடுகின்றேன்.[SE][QE]
14. [QS][SS] ஆண்டவரே! என்னை ஏன்[SE][SS] தள்ளிவிடுகின்றீர்?[SE][SS] உமது முகத்தை என்னிடமிருந்து[SE][SS] ஏன் மறைக்கின்றீர்?[SE][QE]
15. [QS][SS] என் இளமைமுதல் நான் துன்புற்று[SE][SS] மடியும் நிலையில் உள்ளேன்;[SE][SS] உம்மால் வந்த பெருந் திகிலால்[SE][SS] தளர்ந்து போனேன்.[SE][QE]
16. [QS][SS] உமது வெஞ்சினம்[SE][SS] என்னை மூழ்கடிக்கின்றது;[SE][SS] உம் அச்சந்தரும் தாக்குதல்கள்[SE][SS] என்னை அழிக்கின்றன.[SE][QE]
17. [QS][SS] அவை நாள் முழுவதும்[SE][SS] வெள்ளப்பெருக்கென[SE][SS] என்னைச் சூழ்ந்து கொண்டன;[SE][SS] அவை எப்பக்கமும்[SE][SS] என்னை வளைத்துக்கொண்டன.[SE][QE]
18. [QS][SS] என் அன்பரையும் தோழரையும்[SE][SS] என்னைவிட்டு அகற்றினீர்;[SE][SS] இருளே என் நெருங்கிய நண்பன்.[SE][PE][QE]