1. {பெருமை மிகு எருசலேம்[BR](கோராகியரின் புகழ்ப்பாடல்)} [PS] [QS][SS] நகரின் அடித்தளம்[SE][SS] திருமலைகளின்மீது[SE][SS] அமைந்துள்ளது.[SE][QE]
2. [QS][SS] யாக்கோபின் உறைவிடங்கள்[SE][SS] அனைத்தையும்விட[SE][SS] ஆண்டவர் சீயோன் நகர வாயில்களை[SE][SS] விரும்புகின்றார்.[SE][QE]
3. [QS][SS] கடவுளின் நகரே! உன்னைப்பற்றி[SE][SS] மேன்மையானவை[SE][SS] பேசப்படுகின்றன. (சேலா)[SE][QE]
4. [QS][SS] எகிப்தையும் பாபிலோனையும்[SE][SS] என்னை அறிந்தவைகளாகக் கொள்வேன்;[SE][SS] பெலிஸ்தியர், தீர் மற்றும் எத்தியோப்பியா[SE][SS] நாட்டினரைக் குறித்து,[SE][SS] ‛இவர்கள் இங்கேயே[SE][SS] பிறந்தவர்கள்’ என்று கூறப்படும்.[SE][QE]
5. [QS][SS] ‛இங்கேதான் எல்லாரும் பிறந்தனர்;[SE][SS] உன்னதர்தாமே அதை[SE][SS] நிலைநாட்டியுள்ளார்!’ என்று[SE][SS] சீயோனைப்பற்றிச் சொல்லப்படும்.[SE][QE]
6. [QS][SS] மக்களினங்களின் பெயர்களைப்[SE][SS] பதிவு செய்யும்போது,[SE][SS] ‛இவர் இங்கேதான் பிறந்தார்’ என[SE][SS] ஆண்டவர் எழுதுவார். (சேலா)[SE][QE]
7. [QS][SS] ஆடல் வல்லாருடன்[SE][SS] பாடுவோரும் சேர்ந்து[SE][SS] ‛எங்கள் நலன்களின் ஊற்று[SE][SS] உன்னிடமே உள்ளது;[SE][SS] எல்லாரின் உறைவிடமும்[SE][SS] உன்னிடமே உள்ளது’ என்பர்.[SE][PE][QE]