தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
சங்கீதம்
1. நகரின் அடித்தளம் திருமலைகளின்மீது அமைந்துள்ளது.
2. யாக்கோபின் உறைவிடங்கள் அனைத்தையும்விட ஆண்டவர் சீயோன் நகர வாயில்களை விரும்புகின்றார்.
3. கடவுளின் நகரே! உன்னைப்பற்றி மேன்மையானவை பேசப்படுகின்றன. (சேலா)
4. எகிப்தையும் பாபிலோனையும் என்னை அறிந்தவைகளாகக் கொள்வேன்; பெலிஸ்தியர், தீர் மற்றும் எத்தியோப்பியா நாட்டினரைக் குறித்து, 'இவர்கள் இங்கேயே பிறந்தவர்கள்' என்று கூறப்படும்.
5. 'இங்கேதான் எல்லாரும் பிறந்தனர்; உன்னதர்தாமே அதை நிலைநாட்டியுள்ளார்!' என்று சீயோனைப்பற்றிச் சொல்லப்படும்.
6. மக்களினங்களின் பெயர்களைப் பதிவு செய்யும்போது, 'இவர் இங்கேதான் பிறந்தார்' என ஆண்டவர் எழுதுவார். (சேலா)
7. ஆடல் வல்லாருடன் பாடுவோரும் சேர்ந்து 'எங்கள் நலன்களின் ஊற்று உன்னிடமே உள்ளது; எல்லாரின் உறைவிடமும் உன்னிடமே உள்ளது' என்பர்.

குறிப்பேடுகள்

No Verse Added

Total 150 Chapters, Current Chapter 87 of Total Chapters 150
சங்கீதம் 87:140

×

Alert

×

tamil Letters Keypad References