தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பொது மொழிபெயர்ப்பு வெளியீடு
சங்கீதம்
1. {உதவிக்காக வேண்டல்[BR](தாவீதின் மன்றாட்டு)} [PS] [QS][SS] ஆண்டவரே! எனக்குச்[SE][SS] செவிசாய்த்துப் பதிலளியும்;[SE][SS] ஏனெனில், நான் எளியவன்; வறியவன்.[SE][QE]
2. [QS][SS] என் உயிரைக் காத்தருளும்;[SE][SS] ஏனெனில், நான் உம்மீது பற்றுடையவன்;[SE][SS] உம் ஊழியனைக் காத்தருளும்;[SE][SS] நீரே என் கடவுள்! நான் உம்மீது[SE][SS] நம்பிக்கை கொண்டுள்ளேன்.[SE][QE]
3. [QS][SS] என் தலைவரே! என் மேல் இரக்கமாயிரும்;[SE][SS] ஏனெனில், நான் முழுவதும்[SE][SS] உம்மை நோக்கி மன்றாடுகிறேன்.[SE][QE]
4. [QS][SS] உம் அடியானின் மனத்தை மகிழச் செய்யும்;[SE][SS] என் தலைவரே! உம்மை நோக்கி[SE][SS] என் உள்ளத்தை உயர்த்துகின்றேன்.[SE][QE]
5. [QS][SS] ஏனெனில் என் தலைவரே![SE][SS] நீர் நல்லவர்; மன்னிப்பவர்;[SE][SS] உம்மை நோக்கி மன்றாடும் அனைவருக்கும்[SE][SS] பேரன்பு காட்டுபவர்.[SE][QE]
6. [QS][SS] ஆண்டவரே, என் வேண்டுதலுக்குச்[SE][SS] செவிகொடும்;[SE][SS] உம் உதவியை நாடும்[SE][SS] என் குரலைக் கேட்டருளும்.[SE][QE]
7. [QS][SS] என் துன்ப நாளில்[SE][SS] உம்மை நோக்கி மன்றாடுகின்றேன்;[SE][SS] நீரும் எனக்குப் பதிலளிப்பீர்.[SE][QE]
8. [QS][SS] என் தலைவரே! தெய்வங்களுள்[SE][SS] உமக்கு நிகரானவர் எவருமில்லை.[SE][SS] உமது செயல்களுக்கு ஒப்பானவை[SE][SS] எவையுமில்லை.[SE][QE]
9. [QS][SS] என் தலைவரே! நீர் படைத்த[SE][SS] மக்களினத்தார் அனைவரும்[SE][SS] உம் திருமுன் வந்து உம்மைப் பணிவர்;[SE][SS] உமது பெயருக்கு மாட்சி அளிப்பர்.[SE][QE]
10. [QS][SS] ஏனெனில், நீர் மாட்சி மிக்கவர்;[SE][SS] வியத்தகு செயல்கள் புரிபவர்;[SE][SS] நீர் ஒருவரே கடவுள்! [* திவெ 15:4.[QE] ] [SE][QE]
11. [QS][SS] ஆண்டவரே, உமது உண்மைக்கேற்ப[SE][SS] நான் நடக்குமாறு[SE][SS] உமது வழியை எனக்குக் கற்பியும்,[SE][SS] உமது பெயருக்கு அஞ்சுமாறு[SE][SS] என் உள்ளத்தை ஒருமுகப்படுத்தும்.[SE][QE]
12. [QS][SS] என் தலைவரே! என் கடவுளே![SE][SS] என் முழு இதயத்தோடு[SE][SS] உம்மைப் புகழ்வேன்;[SE][SS] என்றென்றும் உமது பெயருக்கு [BR] மாட்சி அளிப்பேன்.[SE][QE]
13. [QS][SS] ஏனெனில், நீர் என்மீது காட்டிய[SE][SS] அன்பு பெரிது![SE][SS] ஆழமிகு பாதாளத்தினின்று[SE][SS] என்னுயிரை விடுவித்தீர்![SE][QE]
14. [QS][SS] கடவுளே! செருக்குற்றோர்[SE][SS] எனக்கெதிராய் எழுந்துள்ளனர்;[SE][SS] கொடியோர் கூட்டம்[SE][SS] என் உயிரைப் பறிக்கப் பார்க்கின்றது;[SE][SS] அவர்களுக்கு உம்மைப்பற்றிய[SE][SS] நினைவே இல்லை.[SE][QE]
15. [QS][SS] என் தலைவரே![SE][SS] நீரோ இரக்கமிகு இறைவன்;[SE][SS] அருள் மிகுந்தவர்;[SE][SS] விரைவில் சினமுறாதவர்;[SE][SS] பேரன்பும் உண்மையும்[SE][SS] பெரிதும் கொண்டவர்.[SE][QE]
16. [QS][SS] என்னைக் கண்ணோக்கி[SE][SS] என்மீது இரங்கும்;[SE][SS] உம் அடியானுக்கு உம் ஆற்றலைத் தாரும்;[SE][SS] உம் அடியாளின் மகனைக் காப்பாற்றும்.[SE][QE]
17. [QS][SS] நன்மைத்தனத்தின் அடையாளம் ஒன்றை[SE][SS] எனக்கு அருளும்;[SE][SS] என் எதிரிகள் அதைக் கண்டு நாணுவர்;[SE][SS] ஏனெனில், ஆண்டவராகிய நீர்தாமே[SE][SS] எனக்குத் துணைசெய்து[SE][SS] ஆறுதல் அளித்துள்ளீர்.[SE][PE]

குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 86 / 150
சங்கீதம் 86:18
உதவிக்காக வேண்டல்
(தாவீதின் மன்றாட்டு)

1 ஆண்டவரே! எனக்குச் செவிசாய்த்துப் பதிலளியும்; ஏனெனில், நான் எளியவன்; வறியவன். 2 என் உயிரைக் காத்தருளும்; ஏனெனில், நான் உம்மீது பற்றுடையவன்; உம் ஊழியனைக் காத்தருளும்; நீரே என் கடவுள்! நான் உம்மீது நம்பிக்கை கொண்டுள்ளேன். 3 என் தலைவரே! என் மேல் இரக்கமாயிரும்; ஏனெனில், நான் முழுவதும் உம்மை நோக்கி மன்றாடுகிறேன். 4 உம் அடியானின் மனத்தை மகிழச் செய்யும்; என் தலைவரே! உம்மை நோக்கி என் உள்ளத்தை உயர்த்துகின்றேன். 5 ஏனெனில் என் தலைவரே! நீர் நல்லவர்; மன்னிப்பவர்; உம்மை நோக்கி மன்றாடும் அனைவருக்கும் பேரன்பு காட்டுபவர். 6 ஆண்டவரே, என் வேண்டுதலுக்குச் செவிகொடும்; உம் உதவியை நாடும் என் குரலைக் கேட்டருளும். 7 என் துன்ப நாளில் உம்மை நோக்கி மன்றாடுகின்றேன்; நீரும் எனக்குப் பதிலளிப்பீர். 8 என் தலைவரே! தெய்வங்களுள் உமக்கு நிகரானவர் எவருமில்லை. உமது செயல்களுக்கு ஒப்பானவை எவையுமில்லை. 9 என் தலைவரே! நீர் படைத்த மக்களினத்தார் அனைவரும் உம் திருமுன் வந்து உம்மைப் பணிவர்; உமது பெயருக்கு மாட்சி அளிப்பர். 10 ஏனெனில், நீர் மாட்சி மிக்கவர்; வியத்தகு செயல்கள் புரிபவர்; நீர் ஒருவரே கடவுள்! [* திவெ 15:4. ] 11 ஆண்டவரே, உமது உண்மைக்கேற்ப நான் நடக்குமாறு உமது வழியை எனக்குக் கற்பியும், உமது பெயருக்கு அஞ்சுமாறு என் உள்ளத்தை ஒருமுகப்படுத்தும். 12 என் தலைவரே! என் கடவுளே! என் முழு இதயத்தோடு உம்மைப் புகழ்வேன்; என்றென்றும் உமது பெயருக்கு
மாட்சி அளிப்பேன்.
13 ஏனெனில், நீர் என்மீது காட்டிய அன்பு பெரிது! ஆழமிகு பாதாளத்தினின்று என்னுயிரை விடுவித்தீர்! 14 கடவுளே! செருக்குற்றோர் எனக்கெதிராய் எழுந்துள்ளனர்; கொடியோர் கூட்டம் என் உயிரைப் பறிக்கப் பார்க்கின்றது; அவர்களுக்கு உம்மைப்பற்றிய நினைவே இல்லை. 15 என் தலைவரே! நீரோ இரக்கமிகு இறைவன்; அருள் மிகுந்தவர்; விரைவில் சினமுறாதவர்; பேரன்பும் உண்மையும் பெரிதும் கொண்டவர். 16 என்னைக் கண்ணோக்கி என்மீது இரங்கும்; உம் அடியானுக்கு உம் ஆற்றலைத் தாரும்; உம் அடியாளின் மகனைக் காப்பாற்றும். 17 நன்மைத்தனத்தின் அடையாளம் ஒன்றை எனக்கு அருளும்; என் எதிரிகள் அதைக் கண்டு நாணுவர்; ஏனெனில், ஆண்டவராகிய நீர்தாமே எனக்குத் துணைசெய்து ஆறுதல் அளித்துள்ளீர்.
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 86 / 150
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References