தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பொது மொழிபெயர்ப்பு வெளியீடு
சங்கீதம்
1. {நாட்டின் நலனுக்காக மன்றாடல்[BR](பாடகர் தலைவர்க்கு: கோராகியரின் புகழ்ப்பா)} [PS] [QS][SS] ஆண்டவரே! உமது நாட்டின்மீது[SE][SS] அருள் கூர்ந்தீர்;[SE][SS] யாக்கோபினரை முன்னைய[SE][SS] நன்னிலைக்குக் கொணர்ந்தீர்.[SE][QE]
2. [QS][SS] உமது மக்களின் குற்றத்தை மன்னித்தீர்;[SE][SS] அவர்களின் பாவங்கள் அனைத்தையும்[SE][SS] மறைத்துவிட்டீர். (சேலா)[SE][QE]
3. [QS][SS] உம் சினம் முழுவதையும்[SE][SS] அடக்கிக் கொண்டீர்;[SE][SS] கடும் சீற்றம் கொள்வதை[SE][SS] விலக்கிக் கொண்டீர்.[SE][QE]
4. [QS][SS] எம் மீட்பராம் கடவுளே![SE][SS] எங்களை முன்னைய[SE][SS] நன்னிலைக்குக் கொணர்ந்தருளும்;[SE][SS] எங்கள்மீது உமக்குள்ள சினத்தை[SE][SS] அகற்றிக்கொள்ளும்.[SE][QE]
5. [QS][SS] என்றென்றுமா எங்கள்மேல் நீர்[SE][SS] சினம் கொள்வீர்?[SE][SS] தலைமுறைதோறுமா[SE][SS] உமது கோபம் நீடிக்கும்?[SE][QE]
6. [QS][SS] உம் மக்கள் உம்மில் மகிழ்வுறுமாறு,[SE][SS] எங்களுக்குப் புத்துயிர் அளிக்கமாட்டீரோ?[SE][QE]
7. [QS][SS] ஆண்டவரே, உமது பேரன்பை[SE][SS] எங்களுக்குக் காட்டியருளும்;[SE][SS] உமது மீட்பையும்[SE][SS] எங்களுக்குத் தந்தருளும்.[SE][QE]
8. [QS][SS] ஆண்டவராம் இறைவன்[SE][SS] உரைப்பதைக் கேட்பேன்;[SE][SS] தம் மக்களுக்கு, தம் பற்றுமிகு அடியார்க்கு[SE][SS] நிறைவாழ்வை அவர் வாக்களிக்கின்றார்;[SE][SS] அவர்களோ மடமைக்குத்[SE][SS] திரும்பிச் செல்லலாகாது.[SE][QE]
9. [QS][SS] அவருக்கு அஞ்சி நடப்போர்க்கு[SE][SS] அவரது மீட்பு அண்மையில் உள்ளது[SE][SS] என்பது உறுதி; நம் நாட்டில்[SE][SS] அவரது மாட்சி குடிகொள்ளும்.[SE][QE]
10. [QS][SS] பேரன்பும் உண்மையும்[SE][SS] ஒன்றையொன்று சந்திக்கும்;[SE][SS] நீதியும் நிறைவாழ்வும்[SE][SS] ஒன்றையொன்று முத்தமிடும். [* நீத 4:6-22; 7:1-23 ] [SE][QE]
11. [QS][SS] மண்ணினின்று உண்மை முளைத்தெழும்;[SE][SS] விண்ணினின்று நீதி கீழ்நோக்கும்.[SE][QE]
12. [QS][SS] நல்லதையே ஆண்டவர் அருள்வார்;[SE][SS] நல்விளைவை நம்நாடு நல்கும். [* நீத 7:25; 8:12.[QE] ] [SE][QE]
13. [QS][SS] நீதி அவர்முன் செல்லும்;[SE][SS] அவர்தம் அடிச்சுவடுகளுக்கு[SE][SS] வழி வகுக்கும்.[SE][PE][QE]

குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 85 / 150
சங்கீதம் 85:38
நாட்டின் நலனுக்காக மன்றாடல்
(பாடகர் தலைவர்க்கு: கோராகியரின் புகழ்ப்பா)

1 ஆண்டவரே! உமது நாட்டின்மீது அருள் கூர்ந்தீர்; யாக்கோபினரை முன்னைய நன்னிலைக்குக் கொணர்ந்தீர். 2 உமது மக்களின் குற்றத்தை மன்னித்தீர்; அவர்களின் பாவங்கள் அனைத்தையும் மறைத்துவிட்டீர். (சேலா) 3 உம் சினம் முழுவதையும் அடக்கிக் கொண்டீர்; கடும் சீற்றம் கொள்வதை விலக்கிக் கொண்டீர். 4 எம் மீட்பராம் கடவுளே! எங்களை முன்னைய நன்னிலைக்குக் கொணர்ந்தருளும்; எங்கள்மீது உமக்குள்ள சினத்தை அகற்றிக்கொள்ளும். 5 என்றென்றுமா எங்கள்மேல் நீர் சினம் கொள்வீர்? தலைமுறைதோறுமா உமது கோபம் நீடிக்கும்? 6 உம் மக்கள் உம்மில் மகிழ்வுறுமாறு, எங்களுக்குப் புத்துயிர் அளிக்கமாட்டீரோ? 7 ஆண்டவரே, உமது பேரன்பை எங்களுக்குக் காட்டியருளும்; உமது மீட்பையும் எங்களுக்குத் தந்தருளும். 8 ஆண்டவராம் இறைவன் உரைப்பதைக் கேட்பேன்; தம் மக்களுக்கு, தம் பற்றுமிகு அடியார்க்கு நிறைவாழ்வை அவர் வாக்களிக்கின்றார்; அவர்களோ மடமைக்குத் திரும்பிச் செல்லலாகாது. 9 அவருக்கு அஞ்சி நடப்போர்க்கு அவரது மீட்பு அண்மையில் உள்ளது என்பது உறுதி; நம் நாட்டில் அவரது மாட்சி குடிகொள்ளும். 10 பேரன்பும் உண்மையும் ஒன்றையொன்று சந்திக்கும்; நீதியும் நிறைவாழ்வும் ஒன்றையொன்று முத்தமிடும். * நீத 4:6-22; 7:1-23 11 மண்ணினின்று உண்மை முளைத்தெழும்; விண்ணினின்று நீதி கீழ்நோக்கும். 12 நல்லதையே ஆண்டவர் அருள்வார்; நல்விளைவை நம்நாடு நல்கும். [* நீத 7:25; 8:12. ] 13 நீதி அவர்முன் செல்லும்; அவர்தம் அடிச்சுவடுகளுக்கு வழி வகுக்கும்.
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 85 / 150
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References