1. {திருவிழாப் பாடல்[BR](பாடகர் தலைவனுக்கு: ‘காத்து’ நகர்ப்பண்; ஆசாபுக்கு உரியது)} [PS] [QS][SS] நமது வலிமையாகிய கடவுளை[SE][SS] மகிழ்ந்து பாடுங்கள்;[SE][SS] யாக்கோபின் கடவுளைப்[SE][SS] புகழ்ந்து ஏத்துங்கள்.[SE][QE]
2. [QS][SS] இன்னிசை எழுப்புங்கள்;[SE][SS] மத்தளம் கொட்டுங்கள்;[SE][SS] யாழும் சுரமண்டலமும் இசைந்து[SE][SS] இனிமையாய்ப் பாடுங்கள்.[SE][QE]
3. [QS][SS] அமாவாசையில், பௌர்ணமியில்,[SE][SS] நமது திருவிழாநாளில் [BR] எக்காளம் ஊதுங்கள். [* எண் 10:10. ] [SE][QE]
4. [QS][SS] இது இஸ்ரயேல் மக்களுக்குரிய விதிமுறை;[SE][SS] யாக்கோபின் கடவுள் தந்த நீதிநெறி.[SE][QE]
5. [QS][SS] அவர் எகிப்துக்கு எதிராகச்[SE][SS] சென்றபொழுது[SE][SS] யோசேப்புக்கு அளித்த சான்று இதுவே.[SE][SS] அப்பொழுது நான்[SE][SS] அறியாத மொழியைக் கேட்டேன்.[SE][QE]
6. [QS][SS] தோளினின்று உன் சுமையை[SE][SS] அகற்றினேன்;[SE][SS] உன் கைகள் கூடையினின்று[SE][SS] விடுதலை பெற்றன.[SE][QE]
7. [QS][SS] துன்ப வேளையில்[SE][SS] என்னை நோக்கி மன்றாடினீர்கள்;[SE][SS] நான் உங்களை விடுவித்தேன்;[SE][SS] இடிமுழங்கும் மறைவிடத்தினின்று[SE][SS] நான் உங்களுக்கு மறுமொழி கூறினேன்;[SE][SS] மெரிபாவின் நீருற்று அருகில்[SE][SS] உங்களைச் சோதித்தேன். (சேலா) [* விப 17:7; எண் 20:13. ] [SE][QE]
8. [QS][SS] என் மக்களே,[SE][SS] எனக்குச் செவிகொடுங்கள்;[SE][SS] நான் உங்களுக்கு[SE][SS] எச்சரிக்கை விடுக்கின்றேன்;[SE][SS] இஸ்ரயேலரே, நீங்கள் எனக்குச்[SE][SS] செவிசாய்த்தால்,[SE][SS] எவ்வளவு நலமாயிருக்கும்![SE][QE]
9. [QS][SS] உங்களிடையே வேற்றுத் தெய்வம்[SE][SS] இருத்தலாகாது;[SE][SS] நீங்கள் அன்னிய தெய்வத்தைத்[SE][SS] தொழலாகாது. [* விப 20:2-3; இச 5:6-7.[QE]. ] [SE][QE]
10. [QS][SS] உங்களை எகிப்து நாட்டினின்று[SE][SS] அழைத்துவந்த[SE][SS] கடவுளாகிய ஆண்டவர் நானே;[SE][SS] உங்கள் வாயை விரிவாகத் திறங்கள்;[SE][SS] நான் அதை நிரப்புவேன். [* விப 20:2-3; இச 5:6-7.[QE]. ] [SE][QE]
11. [QS][SS] ஆனால் என் மக்கள்[SE][SS] என் குரலுக்குச்[SE][SS] செவிசாய்க்கவில்லை;[SE][SS] இஸ்ரயேலர் எனக்குப்[SE][SS] பணியவில்லை.[SE][QE]
12. [QS][SS] எனவே, அவர்கள் தங்கள்[SE][SS] எண்ணங்களின்படியே நடக்குமாறு,[SE][SS] அவர்களின் கடின இதயங்களிடம்[SE][SS] அவர்களை விட்டுவிட்டேன்.[SE][QE]
13. [QS][SS] என் மக்கள் எனக்குச்[SE][SS] செவிசாய்த்திருந்தால்,[SE][SS] இஸ்ரயேலர் நான் காட்டிய வழியில்[SE][SS] நடந்திருந்தால்,[SE][SS] எவ்வளவோ நலமாயிருந்திருக்கும்.[SE][QE]
14. [QS][SS] நான் விரைவில்[SE][SS] அவர்கள் எதிரிகளை அடக்குவேன்,[SE][SS] என் கை அவர்களின்[SE][SS] பகைவருக்கு எதிராகத் திரும்பும்.[SE][QE]
15. [QS][SS] ஆண்டவரை வெறுப்போர்[SE][SS] அவர்முன் கூனிக்குறுகுவர்;[SE][SS] அவர்களது தண்டனைக் காலம்[SE][SS] என்றென்றுமாய் இருக்கும்.[SE][QE]
16. [QS][SS] ஆனால், உங்களுக்கு[SE][SS] நயமான கோதுமையை[SE][SS] உணவாகக் கொடுப்பேன்;[SE][SS] உங்களுக்கு மலைத் தேனால்[SE][SS] நிறைவளிப்பேன்.[SE][PE]