தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பொது மொழிபெயர்ப்பு வெளியீடு
சங்கீதம்
1. {நாட்டின் புதுவாழ்வுக்காக மன்றாடல்[BR](பாடகர் தலைவர்க்கு: ‘சான்றுபகர் லீலிமலர்’ என்ற மெட்டு; ஆசாபின் புகழ்ப்பா)} [PS] [QS][SS] இஸ்ரயேலின் ஆயரே, செவிசாயும்![SE][SS] யோசேப்பை மந்தையென நடத்திச்[SE][SS] செல்கின்றவரே! [BR] கேருபுகளின் மீது வீற்றிருப்பவரே,[SE][SS] ஒளிர்ந்திடும்! [* விப 25:22. ] [SE][QE]
2. [QS][SS] எப்ராயிம், பென்யமின்,[SE][SS] மனாசேயின் முன்னிலையில்[SE][SS] உமது ஆற்றலைக் கிளர்ந்தெழச் செய்து[SE][SS] எம்மை மீட்க வாரும்![SE][QE]
3. [QS][SS] கடவுளே, எங்களை முன்னைய[SE][SS] நன்னிலைக்குக் கொணர்ந்தருளும்![SE][SS] எம்மை மீட்குமாறு[SE][SS] உமது முக ஒளியைக் காட்டியருளும்![SE][QE]
4. [QS][SS] படைகளின் கடவுளாம் ஆண்டவரே![SE][SS] உம் மக்களின் வேண்டுதலுக்கு எதிராக[SE][SS] எத்தனை நாள் நீர் சினம் கொண்டிருப்பீர்?[SE][QE]
5. [QS][SS] கண்ணீராம் உணவை[SE][SS] அவர்கள் உண்ணச் செய்தீர்;[SE][SS] கண்ணீரை அவர்கள்[SE][SS] பெருமளவு பருகச் செய்தீர்.[SE][QE]
6. [QS][SS] எங்கள் அண்டை நாட்டாருக்கு[SE][SS] எங்களைச் சர்ச்சைப்பொருள் ஆக்கினீர்;[SE][SS] எங்கள் எதிரிகள்[SE][SS] எம்மை ஏளனம் செய்தார்கள்.[SE][QE]
7. [QS][SS] படைகளின் கடவுளே![SE][SS] எங்களை முன்னைய[SE][SS] நன்னிலைக்குக் கொணர்ந்தருளும்;[SE][SS] எம்மை மீட்குமாறு[SE][SS] உமது முக ஒளியைக் காட்டியருளும்.[SE][QE]
8. [QS][SS] எகிப்தினின்று திராட்சைக்செடி[SE][SS] ஒன்றைக் கொண்டுவந்தீர்;[SE][SS] வேற்றினத்தாரை விரட்டிவிட்டு[SE][SS] அதனை நட்டு வைத்தீர்.[SE][QE]
9. [QS][SS] அதற்கென நிலத்தை[SE][SS] ஒழுங்குபடுத்திக் கொடுத்தீர்;[SE][SS] அது ஆழ வேரூன்றி[SE][SS] நாட்டை நிரப்பியது.[SE][QE]
10. [QS][SS] அதன் நிழல் மலைகளையும்[SE][SS] அதன் கிளைகள்[SE][SS] வலிமைமிகு கேதுரு மரங்களையும் மூடின.[SE][QE]
11. [QS][SS] அதன் கொடிகள் கடல்வரையும்*[SE][SS] அதன் தளிர்கள் பேராறுவரையும்** பரவின. [* *மத்திய தரைக் கடல், **யூப்பிரத்தீசு.[QE]. ] [SE][QE]
12. [QS][SS] பின்னர், நீர் ஏன்[SE][SS] அதன் மதில்களைத் தகர்த்துவிட்டீர்?[SE][SS] அவ்வழிச் செல்வோர் அனைவரும்[SE][SS] அதன் பழத்தைப் பறிக்கின்றனரே![SE][QE]
13. [QS][SS] காட்டுப் பன்றிகள்[SE][SS] அதனை அழிக்கின்றன;[SE][SS] வயல்வெளி உயிரினங்கள்[SE][SS] அதனை மேய்கின்றன.[SE][QE]
14. [QS][SS] படைகளின் கடவுளே! மீண்டும் வாரும்![SE][SS] விண்ணுலகினின்று[SE][SS] கண்ணோக்கிப் பாரும்;[SE][SS] இந்த திராட்சைக் கொடிமீது [BR] பரிவு காட்டும்![SE][QE]
15. [QS][SS] உமது வலக்கை நட்டுவைத்த கிளையை,[SE][SS] உமக்கென நீர் வளர்த்த மகவைக்[SE][SS] காத்தருளும்![SE][QE]
16. [QS][SS] அவர்கள் அதற்குத் தீ மூட்டினார்கள்;[SE][SS] அதை வெட்டித் தள்ளிவிட்டார்கள்;[SE][SS] உமது முகத்தின் சினமிகு நோக்கினால்,[SE][SS] அவர்கள் அழிந்துபோவார்களாக![SE][QE]
17. [QS][SS] உமது வலப்பக்கம் இருக்கும் மனிதரை[SE][SS] உமது கை காப்பதாக![SE][SS] உமக்கென்றே நீர் உறுதிபெறச் செய்த[SE][SS] மானிட மைந்தரைக் காப்பதாக![SE][QE]
18. [QS][SS] இனி நாங்கள் உம்மைவிட்டு[SE][SS] அகலமாட்டோம்;[SE][SS] எமக்கு வாழ்வு அளித்தருளும்;[SE][SS] நாங்கள் உமது பெயரைத் தொழுவோம்.[SE][QE]
19. [QS][SS] படைகளின் கடவுளான ஆண்டவரே![SE][SS] எங்களை முன்னைய[SE][SS] நன்னிலைக்குக் கொணர்ந்தருளும்![SE][SS] நாங்கள் விடுதலை பெறுமாறு[SE][SS] உமது முக ஒளியைக் காட்டியருளும்![SE][PE]
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 80 / 150
நாட்டின் புதுவாழ்வுக்காக மன்றாடல்
(பாடகர் தலைவர்க்கு: ‘சான்றுபகர் லீலிமலர்’ என்ற மெட்டு; ஆசாபின் புகழ்ப்பா)

1 இஸ்ரயேலின் ஆயரே, செவிசாயும்! யோசேப்பை மந்தையென நடத்திச் செல்கின்றவரே!
கேருபுகளின் மீது வீற்றிருப்பவரே,
ஒளிர்ந்திடும்! * விப 25: 22.
2 எப்ராயிம், பென்யமின், மனாசேயின் முன்னிலையில் உமது ஆற்றலைக் கிளர்ந்தெழச் செய்து எம்மை மீட்க வாரும்! 3 கடவுளே, எங்களை முன்னைய நன்னிலைக்குக் கொணர்ந்தருளும்! எம்மை மீட்குமாறு உமது முக ஒளியைக் காட்டியருளும்! 4 படைகளின் கடவுளாம் ஆண்டவரே! உம் மக்களின் வேண்டுதலுக்கு எதிராக எத்தனை நாள் நீர் சினம் கொண்டிருப்பீர்? 5 கண்ணீராம் உணவை அவர்கள் உண்ணச் செய்தீர்; கண்ணீரை அவர்கள் பெருமளவு பருகச் செய்தீர். 6 எங்கள் அண்டை நாட்டாருக்கு எங்களைச் சர்ச்சைப்பொருள் ஆக்கினீர்; எங்கள் எதிரிகள் எம்மை ஏளனம் செய்தார்கள். 7 படைகளின் கடவுளே! எங்களை முன்னைய நன்னிலைக்குக் கொணர்ந்தருளும்; எம்மை மீட்குமாறு உமது முக ஒளியைக் காட்டியருளும். 8 எகிப்தினின்று திராட்சைக்செடி ஒன்றைக் கொண்டுவந்தீர்; வேற்றினத்தாரை விரட்டிவிட்டு அதனை நட்டு வைத்தீர். 9 அதற்கென நிலத்தை ஒழுங்குபடுத்திக் கொடுத்தீர்; அது ஆழ வேரூன்றி நாட்டை நிரப்பியது. 10 அதன் நிழல் மலைகளையும் அதன் கிளைகள் வலிமைமிகு கேதுரு மரங்களையும் மூடின. 11 அதன் கொடிகள் கடல்வரையும்* அதன் தளிர்கள் பேராறுவரையும்** பரவின. [ மத்திய தரைக் கடல், யூப்பிரத்தீசு.. ] 12 பின்னர், நீர் ஏன் அதன் மதில்களைத் தகர்த்துவிட்டீர்? அவ்வழிச் செல்வோர் அனைவரும் அதன் பழத்தைப் பறிக்கின்றனரே! 13 காட்டுப் பன்றிகள் அதனை அழிக்கின்றன; வயல்வெளி உயிரினங்கள் அதனை மேய்கின்றன. 14 படைகளின் கடவுளே! மீண்டும் வாரும்! விண்ணுலகினின்று கண்ணோக்கிப் பாரும்; இந்த திராட்சைக் கொடிமீது
பரிவு காட்டும்!
15 உமது வலக்கை நட்டுவைத்த கிளையை, உமக்கென நீர் வளர்த்த மகவைக் காத்தருளும்! 16 அவர்கள் அதற்குத் தீ மூட்டினார்கள்; அதை வெட்டித் தள்ளிவிட்டார்கள்; உமது முகத்தின் சினமிகு நோக்கினால், அவர்கள் அழிந்துபோவார்களாக! 17 உமது வலப்பக்கம் இருக்கும் மனிதரை உமது கை காப்பதாக! உமக்கென்றே நீர் உறுதிபெறச் செய்த மானிட மைந்தரைக் காப்பதாக! 18 இனி நாங்கள் உம்மைவிட்டு அகலமாட்டோம்; எமக்கு வாழ்வு அளித்தருளும்; நாங்கள் உமது பெயரைத் தொழுவோம். 19 படைகளின் கடவுளான ஆண்டவரே! எங்களை முன்னைய நன்னிலைக்குக் கொணர்ந்தருளும்! நாங்கள் விடுதலை பெறுமாறு உமது முக ஒளியைக் காட்டியருளும்!
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 80 / 150
×

Alert

×

Tamil Letters Keypad References