1. {நாட்டின் புதுவாழ்வுக்காக மன்றாடல்[BR](பாடகர் தலைவர்க்கு: ‘சான்றுபகர் லீலிமலர்’ என்ற மெட்டு; ஆசாபின் புகழ்ப்பா)} [PS] [QS][SS] இஸ்ரயேலின் ஆயரே, செவிசாயும்![SE][SS] யோசேப்பை மந்தையென நடத்திச்[SE][SS] செல்கின்றவரே! [BR] கேருபுகளின் மீது வீற்றிருப்பவரே,[SE][SS] ஒளிர்ந்திடும்! [* விப 25:22. ] [SE][QE]
2. [QS][SS] எப்ராயிம், பென்யமின்,[SE][SS] மனாசேயின் முன்னிலையில்[SE][SS] உமது ஆற்றலைக் கிளர்ந்தெழச் செய்து[SE][SS] எம்மை மீட்க வாரும்![SE][QE]
3. [QS][SS] கடவுளே, எங்களை முன்னைய[SE][SS] நன்னிலைக்குக் கொணர்ந்தருளும்![SE][SS] எம்மை மீட்குமாறு[SE][SS] உமது முக ஒளியைக் காட்டியருளும்![SE][QE]
4. [QS][SS] படைகளின் கடவுளாம் ஆண்டவரே![SE][SS] உம் மக்களின் வேண்டுதலுக்கு எதிராக[SE][SS] எத்தனை நாள் நீர் சினம் கொண்டிருப்பீர்?[SE][QE]
5. [QS][SS] கண்ணீராம் உணவை[SE][SS] அவர்கள் உண்ணச் செய்தீர்;[SE][SS] கண்ணீரை அவர்கள்[SE][SS] பெருமளவு பருகச் செய்தீர்.[SE][QE]
6. [QS][SS] எங்கள் அண்டை நாட்டாருக்கு[SE][SS] எங்களைச் சர்ச்சைப்பொருள் ஆக்கினீர்;[SE][SS] எங்கள் எதிரிகள்[SE][SS] எம்மை ஏளனம் செய்தார்கள்.[SE][QE]
7. [QS][SS] படைகளின் கடவுளே![SE][SS] எங்களை முன்னைய[SE][SS] நன்னிலைக்குக் கொணர்ந்தருளும்;[SE][SS] எம்மை மீட்குமாறு[SE][SS] உமது முக ஒளியைக் காட்டியருளும்.[SE][QE]
8. [QS][SS] எகிப்தினின்று திராட்சைக்செடி[SE][SS] ஒன்றைக் கொண்டுவந்தீர்;[SE][SS] வேற்றினத்தாரை விரட்டிவிட்டு[SE][SS] அதனை நட்டு வைத்தீர்.[SE][QE]
9. [QS][SS] அதற்கென நிலத்தை[SE][SS] ஒழுங்குபடுத்திக் கொடுத்தீர்;[SE][SS] அது ஆழ வேரூன்றி[SE][SS] நாட்டை நிரப்பியது.[SE][QE]
10. [QS][SS] அதன் நிழல் மலைகளையும்[SE][SS] அதன் கிளைகள்[SE][SS] வலிமைமிகு கேதுரு மரங்களையும் மூடின.[SE][QE]
11. [QS][SS] அதன் கொடிகள் கடல்வரையும்*[SE][SS] அதன் தளிர்கள் பேராறுவரையும்** பரவின. [* *மத்திய தரைக் கடல், **யூப்பிரத்தீசு.[QE]. ] [SE][QE]
12. [QS][SS] பின்னர், நீர் ஏன்[SE][SS] அதன் மதில்களைத் தகர்த்துவிட்டீர்?[SE][SS] அவ்வழிச் செல்வோர் அனைவரும்[SE][SS] அதன் பழத்தைப் பறிக்கின்றனரே![SE][QE]
13. [QS][SS] காட்டுப் பன்றிகள்[SE][SS] அதனை அழிக்கின்றன;[SE][SS] வயல்வெளி உயிரினங்கள்[SE][SS] அதனை மேய்கின்றன.[SE][QE]
14. [QS][SS] படைகளின் கடவுளே! மீண்டும் வாரும்![SE][SS] விண்ணுலகினின்று[SE][SS] கண்ணோக்கிப் பாரும்;[SE][SS] இந்த திராட்சைக் கொடிமீது [BR] பரிவு காட்டும்![SE][QE]
15. [QS][SS] உமது வலக்கை நட்டுவைத்த கிளையை,[SE][SS] உமக்கென நீர் வளர்த்த மகவைக்[SE][SS] காத்தருளும்![SE][QE]
16. [QS][SS] அவர்கள் அதற்குத் தீ மூட்டினார்கள்;[SE][SS] அதை வெட்டித் தள்ளிவிட்டார்கள்;[SE][SS] உமது முகத்தின் சினமிகு நோக்கினால்,[SE][SS] அவர்கள் அழிந்துபோவார்களாக![SE][QE]
17. [QS][SS] உமது வலப்பக்கம் இருக்கும் மனிதரை[SE][SS] உமது கை காப்பதாக![SE][SS] உமக்கென்றே நீர் உறுதிபெறச் செய்த[SE][SS] மானிட மைந்தரைக் காப்பதாக![SE][QE]
18. [QS][SS] இனி நாங்கள் உம்மைவிட்டு[SE][SS] அகலமாட்டோம்;[SE][SS] எமக்கு வாழ்வு அளித்தருளும்;[SE][SS] நாங்கள் உமது பெயரைத் தொழுவோம்.[SE][QE]
19. [QS][SS] படைகளின் கடவுளான ஆண்டவரே![SE][SS] எங்களை முன்னைய[SE][SS] நன்னிலைக்குக் கொணர்ந்தருளும்![SE][SS] நாங்கள் விடுதலை பெறுமாறு[SE][SS] உமது முக ஒளியைக் காட்டியருளும்![SE][PE]