1. {இறைவனின் மாட்சியும் மானிடரின் மேன்மையும்[BR](பாடகர் தலைவர்க்கு: ‘காத்து’ நகர்ப் பண்; தாவீதின் புகழ்ப்பா)} [PS] [QS][SS] ஆண்டவரே! எங்கள் தலைவரே![SE][SS] உமது பெயர் உலகெங்கும் எவ்வளவு [BR] மேன்மையாய் விளங்குகின்றது![SE][SS] உமது மாட்சி வானங்களுக்கு மேலாகவும்[SE][SS] உயர்ந்துள்ளது.[SE][QE]
2. [QS][SS] பாலகரின் மழலையிலும்[SE][SS] குழந்தைகளின் மொழியிலும்[SE][SS] வலிமையை உறுதிப்படுத்தி[SE][SS] உம் பகைவரை ஒடுக்கினீர்;[SE][SS] எதிரியையும் பழிவாங்குவோரையும்[SE][SS] அடக்கினீர்.[SE][QE]
3. [QS][SS] உமது கைவேலைப்பாடாகிய[SE][SS] வானத்தையும்[SE][SS] அதில் நீர் பொருத்தியுள்ள[SE][SS] நிலாவையும் விண்மீன்களையும்[SE][SS] நான் நோக்கும்போது, [* மத் 21:16 ] [SE][QE]
4. [QS][SS] மனிதரை நீர் நினைவில் கொள்வதற்கு[SE][SS] அவர்கள் யார்?[SE][SS] மனிதப் பிறவிகளை[SE][SS] நீர் ஒரு பொருட்டாக எண்ணுவதற்கு[SE][SS] அவர்கள் எம்மாத்திரம்?[SE][QE]
5. [QS][SS] ஆயினும், அவர்களைக்[SE][SS] கடவுளாகிய* உமக்குச்[SE][SS] சற்றே சிறியவர் ஆக்கியுள்ளீர்;[SE][SS] மாட்சியையும் மேன்மையையும்[SE][SS] அவர்களுக்கு முடியாகச் சூட்டியுள்ளீர். [* யோபு 7:17-18; திபா 144:3; எபி 2:6-8 ] [SE][QE]
6. [QS][SS] உமது கை படைத்தவற்றை[SE][SS] அவர்கள் ஆளும்படி செய்துள்ளீர்;[SE][SS] எல்லாவற்றையும்[SE][SS] அவர்கள் பாதங்களுக்குக்[SE][SS] கீழ்ப்படுத்தியுள்ளீர்.[SE][QE]
7. [QS][SS] ஆடுமாடுகள், எல்லா வகையான[SE][SS] காட்டு விலங்குகள், [* 1 கொரி 15:27; எபே 1:22; எபி 2:8 ] [SE][QE]
8. [QS][SS] வானத்துப் பறவைகள்,[SE][SS] கடல் மீன்கள்,[SE][SS] ஆழ்கடலில் நீந்திச் செல்லும்[SE][SS] உயிரினங்கள் அனைத்தையும்[SE][SS] அவர்களுக்குக் கீழ்ப்படுத்தியுள்ளீர்.[SE][QE]
9. [QS][SS] ஆண்டவரே, எங்கள் தலைவரே,[SE][SS] உமது பெயர் உலகெங்கும்[SE][SS] எவ்வளவு மேன்மையாய்[SE][SS] விளங்குகின்றது![SE][PE]