தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பொது மொழிபெயர்ப்பு வெளியீடு
சங்கீதம்
1. {வெற்றிப் பாடல்[BR](பாடகர் தலைவர்க்கு: நரம்பிசைக் கருவிகளுடன் ஆசாபின் புகழ்ப்பாடல்)} [PS] [QS][SS] யூதாவில் கடவுள் தம்மையே[SE][SS] வெளிப்படுத்தியுள்ளார்;[SE][SS] இஸ்ரயேலில் அவரது பெயர்[SE][SS] மாண்புடன் திகழ்கின்றது.[SE][QE]
2. [QS][SS] எருசலேமில் அவரது கூடாரம்[SE][SS] இருக்கின்றது; சீயோனில்[SE][SS] அவரது உறைவிடம் இருக்கின்றது.[SE][QE]
3. [QS][SS] அங்கே அவர் மின்னும் அம்புகளை[SE][SS] முறித்தெறிந்தார்.[SE][SS] கேடயத்தையும் வாளையும்[SE][SS] படைக்கலன்களையும்[SE][SS] தகர்த்தெறிந்தார். (சேலா)[SE][QE]
4. [QS][SS] ஆண்டவரே, நீர் ஒளிமிக்கவர்;[SE][SS] உமது மாட்சி என்றுமுள[SE][SS] மலைகளினும் உயர்ந்தது.[SE][QE]
5. [QS][SS] நெஞ்சுறுதி கொண்ட வீரர்[SE][SS] கொள்ளையிடப்பட்டனர்;[SE][SS] அவர்கள் துயிலில் ஆழ்ந்துவிட்டனர்;[SE][SS] அவர்களின் கைகள்[SE][SS] போர்க்கலன்களைத் தாங்கும்[SE][SS] வலுவிழந்தன.[SE][QE]
6. [QS][SS] யாக்கோபின் கடவுளே,[SE][SS] உமது கடிந்துரையால்[SE][SS] குதிரைகளும் வீரர்களும்[SE][SS] மடிந்து விழுந்தனர்.[SE][QE]
7. [QS][SS] ஆண்டவரே,[SE][SS] நீர் அஞ்சுதற்கு உரியவர்;[SE][SS] நீர் சினமுற்ற வேளையில்[SE][SS] உம் திருமுன் நிற்கக்கூடியவர் யார்?[SE][QE]
8. [QS][SS] (8-9) கடவுளே! நீதித் தீர்ப்பளிக்க[SE][SS] நீர் எழுந்தபோது,[SE][SS] மண்ணுலகில் ஒடுக்கப்பட்டோரைக்[SE][SS] காக்க விழைந்தபோது,[SE][SS] வானின்று தீர்ப்பு முழங்கச் செய்தீர்;[SE][SS] பூவுலகு அச்சமுற்று அடங்கியது. (சேலா)[SE][QE]
9. [QS][SS] [SE][QE]
10. [QS][SS] மாறாக, சினமுற்ற மாந்தர்,[SE][SS] உம்மைப் புகழ்தேத்துவர்;[SE][SS] உமது கோபக் கனலுக்குத் தப்பியோர்[SE][SS] உமக்கு விழாக்கொண்டாடுவர்;[SE][QE]
11. [QS][SS] உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்குப்[SE][SS] பொருத்தனை செய்து[SE][SS] அதை நிறைவேற்றுங்கள்;[SE][SS] அவரைச் சுற்றலுமிருக்கிற அனைவரும்[SE][SS] அஞ்சுதற்குரிய அவருக்கே[SE][SS] காணிக்கைகளைக் [BR] கொண்டு வருவராக![SE][QE]
12. [QS][SS] செருக்குற்ற தலைவர்களை[SE][SS] அவர் அழிக்கின்றார்;[SE][SS] பூவுலகின் அரசர்க்குப் பேரச்சம் ஆனார்.[SE][PE][QE]

குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 76 / 150
சங்கீதம் 76:161
வெற்றிப் பாடல்
(பாடகர் தலைவர்க்கு: நரம்பிசைக் கருவிகளுடன் ஆசாபின் புகழ்ப்பாடல்)

1 யூதாவில் கடவுள் தம்மையே வெளிப்படுத்தியுள்ளார்; இஸ்ரயேலில் அவரது பெயர் மாண்புடன் திகழ்கின்றது. 2 எருசலேமில் அவரது கூடாரம் இருக்கின்றது; சீயோனில் அவரது உறைவிடம் இருக்கின்றது. 3 அங்கே அவர் மின்னும் அம்புகளை முறித்தெறிந்தார். கேடயத்தையும் வாளையும் படைக்கலன்களையும் தகர்த்தெறிந்தார். (சேலா) 4 ஆண்டவரே, நீர் ஒளிமிக்கவர்; உமது மாட்சி என்றுமுள மலைகளினும் உயர்ந்தது. 5 நெஞ்சுறுதி கொண்ட வீரர் கொள்ளையிடப்பட்டனர்; அவர்கள் துயிலில் ஆழ்ந்துவிட்டனர்; அவர்களின் கைகள் போர்க்கலன்களைத் தாங்கும் வலுவிழந்தன. 6 யாக்கோபின் கடவுளே, உமது கடிந்துரையால் குதிரைகளும் வீரர்களும் மடிந்து விழுந்தனர். 7 ஆண்டவரே, நீர் அஞ்சுதற்கு உரியவர்; நீர் சினமுற்ற வேளையில் உம் திருமுன் நிற்கக்கூடியவர் யார்? 8 (8-9) கடவுளே! நீதித் தீர்ப்பளிக்க நீர் எழுந்தபோது, மண்ணுலகில் ஒடுக்கப்பட்டோரைக் காக்க விழைந்தபோது, வானின்று தீர்ப்பு முழங்கச் செய்தீர்; பூவுலகு அச்சமுற்று அடங்கியது. (சேலா) 9 10 மாறாக, சினமுற்ற மாந்தர், உம்மைப் புகழ்தேத்துவர்; உமது கோபக் கனலுக்குத் தப்பியோர் உமக்கு விழாக்கொண்டாடுவர்; 11 உங்கள் கடவுளாகிய ஆண்டவருக்குப் பொருத்தனை செய்து அதை நிறைவேற்றுங்கள்; அவரைச் சுற்றலுமிருக்கிற அனைவரும் அஞ்சுதற்குரிய அவருக்கே காணிக்கைகளைக்
கொண்டு வருவராக!
12 செருக்குற்ற தலைவர்களை அவர் அழிக்கின்றார்; பூவுலகின் அரசர்க்குப் பேரச்சம் ஆனார்.
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 76 / 150
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References