1. கடவுளே! நீர் ஏன் எங்களை முற்றிலுமாக ஒதுக்கிவிட்டீர்? உமது மேய்ச்சல் நில ஆடுகள்மேல் உமது சினம் ஏன் புகைந்தெழுகின்றது?
|
2. பண்டைக் காலத்திலேயே நீர் உமக்குச் சொந்தமாக்கிக் கொண்ட சபைக் கூட்டத்தை நினைத்தருளும்; நீர் மீட்டு உமக்கு உரிமையாக்கிக் கொண்ட இனத்தாரை மறந்துவிடாதேயும்; நீர் கோவில் கொண்டிருந்த சீயோன் மலையையும்; நினைவுகூர்ந்தருளும்.
|
3. நெடுநாள்களாகப் பாழடைந்து கிடக்கும் பகுதிகளுக்குச் சென்று பார்வையிடுவீராக! ஏதிரிகள் உமது தூயகத்தில் அனைத்தையும் பாழ்படுத்திவிட்டார்கள்.
|
4. உம்முடைய எதிரிகள் உம் திருத்தலத்தில் வெற்றி முழக்கம் செய்கின்றார்கள்; தங்கள் கொடிகளை வெற்றிக்கு அடையாளமாக நாட்டுகின்றார்கள்.
|
6. மேலும் அங்கிருந்த மர வேலைப்பாடுகள் அனைத்தையும் சிற்றுளியும் சுத்தியலும் கொண்டு தகர்த்தெறிந்தார்கள்;
|
7. அவர்கள் உமது தூயகத்திற்குத் தீ வைத்தார்கள்; அவர்கள் உமது பெயருக்குரிய உறைவிடத்தைத் தீட்டுப்படுத்தினார்கள்.
|
8. "அவர்களை அடியோடு அழித்து விடுவோம்" என்று தங்கள் உள்ளங்களில் சொல்லிக் கொண்டார்கள்; கடவுளின் சபையார் கூடும் இடங்களையெல்லாம் நாடெங்கும் எரித்தழித்தார்கள்.
|
9. எங்களுக்கு நீர் செய்து வந்த அருஞ்செயல்களை இப்போது நாங்கள் காண்பதில்லை; இறைவாக்கினரும் இல்லை; எவ்வளவு காலம் இந்நிலை நீடிக்குமென்று அறியக் கூடியவரும் எங்களிடையே இல்லை.
|
10. கடவுளே! எவ்வளவு காலம் பகைவர் இகழ்ந்துரைப்பர்? எதிரிகள் உமது பெயரை எப்போதுமா பழித்துக் கொண்டிருப்பார்கள்?
|
11. உமது கையை ஏன் மடக்கிக் கொள்கின்றீர்? உமது வலக்கையை ஏன் உமது மடியில் வைத்துள்ளீர்? அதை நீட்டி அவர்களை அழித்துவிடும்.
|
12. கடவுளே! முற்காலத்திலிருந்தே நீர் எங்கள் அரசர்; நீரே உலகெங்கும் மீட்புச் செயலைச் செய்து வருகின்றீர்.
|
15. ஊற்றுகளையும் ஓடைகளையும் பாய்ந்து வரச்செய்தவர் நீரே; என்றுமே வற்றாத ஆறுகளைக் காய்ந்துபோகச் செய்தவரும் நீரே.
|
17. பூவுலகின் எல்லைகளையெல்லாம் வரையறை செய்தீர்; கோடைக் காலத்தையும் மாரிக் காலத்தையும் ஏற்படுத்தினீர்.
|
19. உமக்குச் சொந்தமான புறாவின் உயிரைப் பொல்லாத விலங்கிடம் ஒப்புவித்து விடாதேயும்! சிறுமைப்படுகிற உம் மக்களின் உயிரை ஒரேயடியாக மறந்து விடாதேயும்!
|
20. உமது உடன்படிக்கையை நினைத்தருளும்! நாட்டின் இருளான இடங்களில் கொடுமை நடக்கும் குடியிருப்புகள் நிறைந்திருக்கின்றன.
|
22. கடவுளே! எழுந்துவாரும்; உமக்காக நீரே வழக்காடும்; மதிகேடரால் நாடோறும் உமக்கு வரும் இகழ்ச்சியை நினைத்துப்பாரும்.
|
23. உம்முடைய பகைவர் செய்யும் முழக்கத்தை மறவாதேயும்; உம் எதிரிகள் இடைவிடாது எழுப்பும் அமளியைக் கேளும்.
|