1. {நாட்டின் விடுதலைக்காக மன்றாடல்[BR](ஆசாபின் அறப்பாடல்)} [PS] [QS][SS] கடவுளே! நீர் ஏன் எங்களை[SE][SS] முற்றிலுமாக ஒதுக்கிவிட்டீர்?[SE][SS] உமது மேய்ச்சல் நில ஆடுகள்மேல்[SE][SS] உமது சினம் ஏன் புகைந்தெழுகின்றது?[SE][QE]
2. [QS][SS] பண்டைக் காலத்திலேயே[SE][SS] நீர் உமக்குச் சொந்தமாக்கிக் கொண்ட[SE][SS] சபைக் கூட்டத்தை நினைத்தருளும்;[SE][SS] நீர் மீட்டு உமக்கு உரிமையாக்கிக் கொண்ட[SE][SS] இனத்தாரை மறந்துவிடாதேயும்;[SE][SS] நீர் கோவில் கொண்டிருந்த[SE][SS] சீயோன் மலையையும்[SE][SS] நினைவுகூர்ந்தருளும்.[SE][QE]
3. [QS][SS] நெடுநாள்களாகப் பாழடைந்து கிடக்கும்[SE][SS] பகுதிகளுக்குச் சென்று[SE][SS] பார்வையிடுவீராக![SE][SS] எதிரிகள் உமது தூயகத்தில்[SE][SS] அனைத்தையும் பாழ்படுத்திவிட்டார்கள்.[SE][QE]
4. [QS][SS] உம்முடைய எதிரிகள் உம் திருத்தலத்தில்[SE][SS] வெற்றி முழக்கம் செய்கின்றார்கள்;[SE][SS] தங்கள் கொடிகளை வெற்றிக்கு[SE][SS] அடையாளமாக நாட்டுகின்றார்கள்.[SE][QE]
5. [QS][SS] அவர்கள் மேற்கு வாயிலில் அமைக்கப்பட்ட[SE][SS] மரப்பின்னல் வேலைப்பாடுகளைக்[SE][SS] கோடரிகளால் சிதைத்தார்கள்.[SE][QE]
6. [QS][SS] மேலும் அங்கிருந்த[SE][SS] மர வேலைப்பாடுகள் அனைத்தையும்[SE][SS] சிற்றுளியும் சுத்தியலும் கொண்டு[SE][SS] தகர்த்தெறிந்தார்கள்;[SE][QE]
7. [QS][SS] அவர்கள் உமது தூயகத்திற்குத்[SE][SS] தீ வைத்தார்கள்; தரைமட்டமாக்கினார்கள்.[SE][SS] அவர்கள் உமது பெயருக்குரிய[SE][SS] உறைவிடத்தைத்[SE][SS] தீட்டுப்படுத்தினார்கள்.[SE][QE]
8. [QS][SS] “அவர்களை அடியோடு[SE][SS] அழித்து விடுவோம்” என்று[SE][SS] தங்கள் உள்ளங்களில்[SE][SS] சொல்லிக் கொண்டார்கள்;[SE][SS] கடவுளின் சபையார் கூடும்[SE][SS] இடங்களையெல்லாம்[SE][SS] நாடெங்கும் எரித்தழித்தார்கள்.[SE][QE]
9. [QS][SS] எங்களுக்கு நீர் செய்து வந்த[SE][SS] அருஞ்செயல்களை[SE][SS] இப்போது நாங்கள் காண்பதில்லை;[SE][SS] இறைவாக்கினரும் இல்லை;[SE][SS] எவ்வளவு காலம்[SE][SS] இந்நிலை நீடிக்குமென்று[SE][SS] அறியக் கூடியவரும்[SE][SS] எங்களிடையே இல்லை.[SE][QE]
10. [QS][SS] கடவுளே! எவ்வளவு காலம்[SE][SS] பகைவர் இகழ்ந்துரைப்பர்?[SE][SS] எதிரிகள் உமது பெயரை எப்போதுமா[SE][SS] பழித்துக் கொண்டிருப்பார்கள்?[SE][QE]
11. [QS][SS] உமது கையை[SE][SS] ஏன் மடக்கிக் கொள்கின்றீர்?[SE][SS] உமது வலக்கையை[SE][SS] ஏன் உமது மடியில் வைத்துள்ளீர்?[SE][SS] அதை நீட்டி அவர்களை அழித்துவிடும்.[SE][QE]
12. [QS][SS] கடவுளே! முற்காலத்திலிருந்தே[SE][SS] நீர் எங்கள் அரசர்;[SE][SS] நீரே உலகெங்கும் மீட்புச் செயலைச்[SE][SS] செய்து வருகின்றீர்.[SE][QE]
13. [QS][SS] நீர் உமது வல்லமையால்[SE][SS] கடலைப் பிளந்தீர்;[SE][SS] நீரில் வாழும் கொடும் பாம்புகளின்[SE][SS] தலைகளை நசுக்கிவிட்டீர்.[SE][QE]
14. [QS][SS] லிவியத்தானின் தலைகளை[SE][SS] நசுக்கியவர் நீரே;[SE][SS] அதைக் காட்டு விலங்குகளுக்கு[SE][SS] இரையாகக் கொடுத்தவர் நீரே; [* விப 14:21 ] [SE][QE]
15. [QS][SS] ஊற்றுகளையும் ஓடைகளையும்[SE][SS] பாய்ந்து வரச்செய்தவர் நீரே;[SE][SS] என்றுமே வற்றாத ஆறுகளைக்[SE][SS] காய்ந்துபோகச் செய்தவரும் நீரே. [* யோபு 41:1; திபா 104:26; எசா 27:1.[QE] ] [SE][QE]
16. [QS][SS] பகலும் உமதே; இரவும் உமதே;[SE][SS] கதிரவனையும் நிலவையும்[SE][SS] தோற்றுவித்தவர் நீரே.[SE][QE]
17. [QS][SS] பூவுலகின் எல்லைகளையெல்லாம்[SE][SS] வரையறை செய்தீர்;[SE][SS] கோடைக் காலத்தையும்[SE][SS] மாரிக் காலத்தையும் ஏற்படுத்தினீர்.[SE][QE]
18. [QS][SS] ஆண்டவரே, எதிரி உம்மை இகழ்வதையும்[SE][SS] மதிகெட்ட மக்கள்[SE][SS] உமது பெயரைப் பழிப்பதையும்[SE][SS] நினைத்துப்பாரும்![SE][QE]
19. [QS][SS] உமக்குச் சொந்தமான புறாவின் உயிரைப்[SE][SS] பொல்லாத விலங்கிடம்[SE][SS] ஒப்புவித்து விடாதேயும்![SE][SS] சிறுமைப்படுகிற உம் மக்களின் உயிரை[SE][SS] ஒரேயடியாக மறந்து விடாதேயும்![SE][QE]
20. [QS][SS] உமது உடன்படிக்கையை நினைத்தருளும்![SE][SS] நாட்டின் இருளான இடங்களில்[SE][SS] கொடுமை நடக்கும் குடியிருப்புகள்[SE][SS] நிறைந்திருக்கின்றன.[SE][QE]
21. [QS][SS] சிறுமையுற்றோர் மீண்டும்[SE][SS] வெட்கமுறாதபடி செய்யும்;[SE][SS] எளியோரும் வறியோரும்[SE][SS] உமது பெயரைப் புகழ்வராக![SE][QE]
22. [QS][SS] கடவுளே! எழுந்துவாரும்;[SE][SS] உமக்காக நீரே வழக்காடும்;[SE][SS] மதிகேடரால் நாடோறும் உமக்கு வரும்[SE][SS] இகழ்ச்சியை நினைத்துப்பாரும்.[SE][QE]
23. [QS][SS] உம்முடைய பகைவர் செய்யும்[SE][SS] முழக்கத்தை மறவாதேயும்;[SE][SS] உம் எதிரிகள் இடைவிடாது எழுப்பும்[SE][SS] அமளியைக் கேளும்.[SE][PE]