தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பொது மொழிபெயர்ப்பு வெளியீடு
சங்கீதம்
1. {மூன்றாம் பகுதி}{கடவுளின் நீதிமுறை[BR](ஆசாபின் புகழ்ப்பா)} [PS] [QS][SS] உண்மையாகவே, இஸ்ரயேலர்க்குக்[SE][SS] கடவுள் எவ்வளவு நல்லவர்![SE][SS] தூய உள்ளத்தினர்க்கு[SE][SS] ஆண்டவர் எவ்வளவோ நல்லவர்![SE][QE]
2. [QS][SS] என் கால்கள்[SE][SS] சற்றே நிலைதடுமாறலாயின;[SE][SS] நான் அடிசறுக்கி விழப்போனேன்.[SE][QE]
3. [QS][SS] ஆணவம் கொண்டோர்மேல்[SE][SS] நான் பொறாமை கொண்டேன்;[SE][SS] பொல்லாரின் வளமிகு வாழ்வை[SE][SS] நான் கண்டேன்.[SE][QE]
4. [QS][SS] அவர்களுக்குச்[SE][SS] சாவின் வேதனை என்பதே இல்லை;[SE][SS] அவர்களது உடல்,[SE][SS] நலமும் உரமும் கொண்டது.[SE][QE]
5. [QS][SS] மனிதப் பிறவிகளுக்குள்ள வருத்தம்[SE][SS] அவர்களுக்கு இல்லை.[SE][SS] மற்ற மனிதர்களைப் போல்[SE][SS] அவர்கள் துன்புறுவதில்லை.[SE][QE]
6. [QS][SS] எனவே, மணிமாலைபோல்[SE][SS] செருக்கு அவர்களை அணி செய்கிறது;[SE][SS] வன்செயல் அவர்களை[SE][SS] ஆடைபோல மூடிக்கொள்கிறது.[SE][QE]
7. [QS][SS] அவர்களின் கண்கள்[SE][SS] கொழுப்பு மிகுதியால்[SE][SS] புடைத்திருக்கின்றன;[SE][SS] அவர்களது மனத்தின் கற்பனைகள்[SE][SS] எல்லை கடந்து செல்கின்றன.[SE][QE]
8. [QS][SS] பிறரை எள்ளி நகையாடி[SE][SS] வஞ்சகமாய்ப் பேசுகின்றனர்;[SE][SS] இறுமாப்புக்கொண்டு[SE][SS] கொடுமை செய்யத் திட்டமிடுகின்றனர். [* செக் 9:10.[QE]. ] [SE][QE]
9. [QS][SS] விண்ணுலகை எதிர்த்து[SE][SS] அவர்கள் வாய் பேசுகின்றது;[SE][SS] மண்ணுலகமெங்கும் அவர்கள் சொல்[SE][SS] விரிந்து பரவுகின்றது.[SE][QE]
10. [QS][SS] ஆதலால், கடவுளின் மக்களும்[SE][SS] அவர்களைப் புகழ்ந்து பின்பற்றுகின்றனர்;[SE][SS] இவ்வாறு, கடல் முழுவதையும்[SE][SS] உறிஞ்சிக் குடித்துவிட்டார்கள்.[SE][QE]
11. [QS][SS] ‘இறைவனுக்கு எப்படித் தெரியும்?[SE][SS] உன்னதர்க்கு அறிவு இருக்கிறதா?’[SE][SS] என்கின்றார்கள்.[SE][QE]
12. [QS][SS] ஆம்; பொல்லார்[SE][SS] இப்படித்தான் இருக்கின்றனர்;[SE][SS] என்றும் வளமுடன் வாழ்ந்து[SE][SS] செல்வத்தைப் பெருக்கிக்கொள்கின்றனர்.[SE][QE]
13. [QS][SS] அப்படியானால், நான் என் உள்ளத்தை[SE][SS] மாசற்றதாய் வைத்துக் கொண்டது வீண்தானா?[SE][SS] குற்றமற்ற நான் என் கைகளைக்[SE][SS] கழுவிக்கொண்டதும் வீண்தானா?[SE][QE]
14. [QS][SS] நாள்தோறும் நான்[SE][SS] வதைக்கப்படுகின்றேன்;[SE][SS] காலைதோறும்[SE][SS] கண்டிப்புக்கு ஆளாகின்றேன்.[SE][QE]
15. [QS][SS] “நானும் அவர்களைப்போல் பேசலாமே”[SE][SS] என்று நான் நினைத்திருந்தால்,[SE][SS] உம் மக்களின் தலைமுறைக்கு[SE][SS] நம்பிக்கைத் துரோகம் செய்தவனாவேன்.[SE][QE]
16. [QS][SS] ஆகவே, இதன் உண்மை என்னவென்று[SE][SS] கண்டறிய முயன்றேன்;[SE][SS] ஆனால், அது பெரிய புதிராயிருந்தது.[SE][QE]
17. [QS][SS] நான் இறைவனின் தூயகத்திற்குச்[SE][SS] சென்றபின்புதான்[SE][SS] அவர்களுக்கு நேரிடப்போவது என்ன[SE][SS] என்பதை உணர்ந்துகொண்டேன்.[SE][QE]
18. [QS][SS] உண்மையில் அவர்களை நீர்[SE][SS] சறுக்கலான இடங்களில் வைப்பீர்;[SE][SS] அவர்களை விழத்தாட்டி[SE][SS] அழிவுக்கு உள்ளாக்குவீர்.[SE][QE]
19. [QS][SS] அவர்கள் எவ்வளவு விரைவில்[SE][SS] ஒழிந்து போகிறார்கள்![SE][SS] அவர்கள் திகில் பிடித்தவர்களாய்[SE][SS] அடியோடு அழிந்து போகிறார்கள்![SE][QE]
20. [QS][SS] விழித்தெழுவோரின் கனவுபோல்[SE][SS] அவர்கள் ஒழிந்து போவார்கள்;[SE][SS] என் தலைவராகிய ஆண்டவரே,[SE][SS] நீர் கிளர்ந்தெழும்போது[SE][SS] அவர்கள் போலித்தனத்தை இகழ்வீர்.[SE][QE]
21. [QS][SS] என் உள்ளம் கசந்தது;[SE][SS] என் உணர்ச்சிகள் என்னை[SE][SS] ஊடுருவிக் குத்தின.[SE][QE]
22. [QS][SS] அப்பொழுது நான்[SE][SS] அறிவிழந்த மதிகேடனானேன்;[SE][SS] உமது முன்னிலையில்[SE][SS] ஒரு விலங்கு போல நடந்து கொண்டேன்.[SE][QE]
23. [QS][SS] ஆனாலும், நான் எப்போதும்[SE][SS] உமது முன்னிலையிலேதான்[SE][SS] இருக்கின்றேன்; என் வலக்கையை[SE][SS] ஆதரவாய்ப் பிடித்துள்ளீர்.[SE][QE]
24. [QS][SS] உமது திருவுளப்படியே[SE][SS] என்னை நடத்துகின்றீர்;[SE][SS] முடிவில் மாட்சியோடு[SE][SS] என்னை எடுத்துக் கொள்வீர்.[SE][QE]
25. [QS][SS] விண்ணுலகில் உம்மையன்றி[SE][SS] எனக்கிருப்பவர் யார்?[SE][SS] மண்ணுலகில் வேறு விருப்பம்[SE][SS] உம்மையன்றி எனக்கேதுமில்லை.[SE][QE]
26. [QS][SS] எனது உடலும் உள்ளமும்[SE][SS] நைந்து போயின;[SE][SS] கடவுளே என் உள்ளத்திற்கு அரணும்[SE][SS] என்றென்றும் எனக்குரிய பங்கும் ஆவார்.[SE][QE]
27. [QS][SS] உண்மையிலேயே, உமக்குத்[SE][SS] தொலைவாய் இருப்பவர்கள் அழிவார்கள்;[SE][SS] உம்மைக் கைவிடும்[SE][SS] அனைவரையும் அழித்துவிடும்.[SE][QE]
28. [QS][SS] நானோ கடவுளின் அண்மையே[SE][SS] எனக்கு நலமெனக் கொள்வேன்;[SE][SS] என் தலைவராகிய ஆண்டவரை[SE][SS] என் அடைக்கலமாய்க்கொண்டு[SE][SS] அவர்தம் செயல்களை எடுத்துரைப்பேன்.[SE][PE][QE]
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 73 / 150
மூன்றாம் பகுதிகடவுளின் நீதிமுறை
(ஆசாபின் புகழ்ப்பா)

1 உண்மையாகவே, இஸ்ரயேலர்க்குக் கடவுள் எவ்வளவு நல்லவர்! தூய உள்ளத்தினர்க்கு ஆண்டவர் எவ்வளவோ நல்லவர்! 2 என் கால்கள் சற்றே நிலைதடுமாறலாயின; நான் அடிசறுக்கி விழப்போனேன். 3 ஆணவம் கொண்டோர்மேல் நான் பொறாமை கொண்டேன்; பொல்லாரின் வளமிகு வாழ்வை நான் கண்டேன். 4 அவர்களுக்குச் சாவின் வேதனை என்பதே இல்லை; அவர்களது உடல், நலமும் உரமும் கொண்டது. 5 மனிதப் பிறவிகளுக்குள்ள வருத்தம் அவர்களுக்கு இல்லை. மற்ற மனிதர்களைப் போல் அவர்கள் துன்புறுவதில்லை. 6 எனவே, மணிமாலைபோல் செருக்கு அவர்களை அணி செய்கிறது; வன்செயல் அவர்களை ஆடைபோல மூடிக்கொள்கிறது. 7 அவர்களின் கண்கள் கொழுப்பு மிகுதியால் புடைத்திருக்கின்றன; அவர்களது மனத்தின் கற்பனைகள் எல்லை கடந்து செல்கின்றன. 8 பிறரை எள்ளி நகையாடி வஞ்சகமாய்ப் பேசுகின்றனர்; இறுமாப்புக்கொண்டு கொடுமை செய்யத் திட்டமிடுகின்றனர். [* செக் 9:10.. ] 9 விண்ணுலகை எதிர்த்து அவர்கள் வாய் பேசுகின்றது; மண்ணுலகமெங்கும் அவர்கள் சொல் விரிந்து பரவுகின்றது. 10 ஆதலால், கடவுளின் மக்களும் அவர்களைப் புகழ்ந்து பின்பற்றுகின்றனர்; இவ்வாறு, கடல் முழுவதையும் உறிஞ்சிக் குடித்துவிட்டார்கள். 11 ‘இறைவனுக்கு எப்படித் தெரியும்? உன்னதர்க்கு அறிவு இருக்கிறதா?’ என்கின்றார்கள். 12 ஆம்; பொல்லார் இப்படித்தான் இருக்கின்றனர்; என்றும் வளமுடன் வாழ்ந்து செல்வத்தைப் பெருக்கிக்கொள்கின்றனர். 13 அப்படியானால், நான் என் உள்ளத்தை மாசற்றதாய் வைத்துக் கொண்டது வீண்தானா? குற்றமற்ற நான் என் கைகளைக் கழுவிக்கொண்டதும் வீண்தானா? 14 நாள்தோறும் நான் வதைக்கப்படுகின்றேன்; காலைதோறும் கண்டிப்புக்கு ஆளாகின்றேன். 15 “நானும் அவர்களைப்போல் பேசலாமே” என்று நான் நினைத்திருந்தால், உம் மக்களின் தலைமுறைக்கு நம்பிக்கைத் துரோகம் செய்தவனாவேன். 16 ஆகவே, இதன் உண்மை என்னவென்று கண்டறிய முயன்றேன்; ஆனால், அது பெரிய புதிராயிருந்தது. 17 நான் இறைவனின் தூயகத்திற்குச் சென்றபின்புதான் அவர்களுக்கு நேரிடப்போவது என்ன என்பதை உணர்ந்துகொண்டேன். 18 உண்மையில் அவர்களை நீர் சறுக்கலான இடங்களில் வைப்பீர்; அவர்களை விழத்தாட்டி அழிவுக்கு உள்ளாக்குவீர். 19 அவர்கள் எவ்வளவு விரைவில் ஒழிந்து போகிறார்கள்! அவர்கள் திகில் பிடித்தவர்களாய் அடியோடு அழிந்து போகிறார்கள்! 20 விழித்தெழுவோரின் கனவுபோல் அவர்கள் ஒழிந்து போவார்கள்; என் தலைவராகிய ஆண்டவரே, நீர் கிளர்ந்தெழும்போது அவர்கள் போலித்தனத்தை இகழ்வீர். 21 என் உள்ளம் கசந்தது; என் உணர்ச்சிகள் என்னை ஊடுருவிக் குத்தின. 22 அப்பொழுது நான் அறிவிழந்த மதிகேடனானேன்; உமது முன்னிலையில் ஒரு விலங்கு போல நடந்து கொண்டேன். 23 ஆனாலும், நான் எப்போதும் உமது முன்னிலையிலேதான் இருக்கின்றேன்; என் வலக்கையை ஆதரவாய்ப் பிடித்துள்ளீர். 24 உமது திருவுளப்படியே என்னை நடத்துகின்றீர்; முடிவில் மாட்சியோடு என்னை எடுத்துக் கொள்வீர். 25 விண்ணுலகில் உம்மையன்றி எனக்கிருப்பவர் யார்? மண்ணுலகில் வேறு விருப்பம் உம்மையன்றி எனக்கேதுமில்லை. 26 எனது உடலும் உள்ளமும் நைந்து போயின; கடவுளே என் உள்ளத்திற்கு அரணும் என்றென்றும் எனக்குரிய பங்கும் ஆவார். 27 உண்மையிலேயே, உமக்குத் தொலைவாய் இருப்பவர்கள் அழிவார்கள்; உம்மைக் கைவிடும் அனைவரையும் அழித்துவிடும். 28 நானோ கடவுளின் அண்மையே எனக்கு நலமெனக் கொள்வேன்; என் தலைவராகிய ஆண்டவரை என் அடைக்கலமாய்க்கொண்டு அவர்தம் செயல்களை எடுத்துரைப்பேன்.
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 73 / 150
×

Alert

×

Tamil Letters Keypad References