1. {உதவிக்காக வேண்டல்[BR](பாடகர் தலைவர்க்கு: நினைவு கூர்தலுக்காகத் தாவீது பாடியது)[BR] (திபா 40:13-17)} [PS] [QS][SS] கடவுளே! என்னை விடுவித்தருளும்;[SE][SS] ஆண்டவரே! எனக்கு உதவி செய்ய[SE][SS] விரைந்து வாரும்![SE][QE]
2. [QS][SS] என் உயிரைப்[SE][SS] பறிக்கத் தேடுவோர் அனைவரும்[SE][SS] வெட்கமும் குழப்பமும் அடைவராக![SE][SS] எனக்குத் தீங்கு வருவதை விரும்புவோர்[SE][SS] வெட்கத்தால் தலைகுனிந்து[SE][SS] பின்னிட்டுத் திரும்புவராக![SE][QE]
3. [QS][SS] என்னைப் பார்த்து, ‛ஆ! ஆ!’ என்று[SE][SS] ஏளனம் செய்வோர்[SE][SS] பெருங்கலக்கமுற்றுப் பின்னிடுவராக![SE][QE]
4. [QS][SS] உம்மை நாடித் தேடும் அனைவரும்[SE][SS] உம்மில் மகிழ்ந்து களிகூர்வராக![SE][SS] நீர் அருளும் மீட்பில் நாட்டம் கொள்வோர்[SE][SS] ‛கடவுள் மாட்சி மிக்கவர்’ என்று[SE][SS] எப்போதும் சொல்வர். [* திபா 35:19; யோவா 15:25. ] [SE][QE]
5. [QS][SS] நான் சிறுமையுற்றவன், ஏழை;[SE][SS] கடவுளே! என்னிடம் விரைந்து வாரும்;[SE][SS] நீரே எனக்குத் துணை;[SE][SS] என்னை விடுவிப்பவர்;[SE][SS] என் கடவுளே! காலந்தாழ்த்தாதேயும்.[SE][PE][QE]