தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பொது மொழிபெயர்ப்பு வெளியீடு
சங்கீதம்
1. {நீதி வழங்குமாறு வேண்டல்[BR](தாவீதின் புலம்பல்; பென்யமினியனான கூசின் சொற்களைக் கேட்டுத் தாவீது ஆண்டவரை நோக்கிப் பாடியது)} [PS] [QS][SS] என் கடவுளாகிய ஆண்டவரே,[SE][SS] உம்மிடம் அடைக்கலம் புகுந்தேன்;[SE][SS] என்னைத் துரத்துவோர் அனைவரிடமிருந்தும்[SE][SS] என்னைக் காப்பாற்றித் தப்புவியும்.[SE][QE]
2. [QS][SS] இல்லையெனில், என் எதிரிகள் சிங்கம்போல [BR] என்னைப் பீறிக் கிழித்துப் போடுவார்கள்;[SE][SS] விடுவிப்போர் எவரும் இரார்.[SE][QE]
3. [QS][SS] என் கடவுளாகிய ஆண்டவரே,[SE][SS] நான் இவற்றைச் செய்திருந்தால் –[SE][SS] என் கை தவறிழைத்திருந்தால்,[SE][QE]
4. [QS][SS] என்னோடு நல்லுறவு கொண்டிருந்தவனுக்கு[SE][SS] நான் தீங்கிழைத்திருந்தால்,[SE][SS] என் பகைவனைக் காரணமின்றிக்[SE][SS] காட்டிக்கொடுத்திருந்தால் –[SE][QE]
5. [QS][SS] எதிரி என்னைத் துரத்திப் பிடிக்கட்டும்;[SE][SS] என்னைத் தரையில் தள்ளி[SE][SS] மிதித்து நசுக்கட்டும்;[SE][SS] என் பெருமையைப் புழுதியில்[SE][SS] புதைக்கட்டும். (சேலா)[SE][QE]
6. [QS][SS] ஆண்டவரே, சினங்கொண்டு[SE][SS] எழுந்தருளும்;[SE][SS] என் பகைவரின் சீற்றத்தை[SE][SS] அடக்க வாரும்;[SE][SS] எனக்காக விழித்தெழும்;[SE][SS] ஏனெனில், நீதியை நிலைநாட்டுபவர்[SE][SS] நீர் ஒருவரே.[SE][QE]
7. [QS][SS] எல்லா இனத்தாரும் ஒன்றுகூடி[SE][SS] உம்மைச் சூழச் செய்யும்;[SE][SS] அவர்கள்மீது உயரத்தினின்று[SE][SS] ஆட்சி செலுத்தும்.[SE][QE]
8. [QS][SS] ஆண்டவரே, நீரே மக்களினத்தார்[SE][SS] அனைவருக்கும் நீதி வழங்குபவர்;[SE][SS] ஆண்டவரே, என் நேர்மைக்கும்[SE][SS] வாய்மைக்கும் ஏற்ப[SE][SS] எனக்குத் தீர்ப்பளியும்.[SE][QE]
9. [QS][SS] பொல்லாரின் தீமையை[SE][SS] முடிவுக்குக் கொண்டுவாரும்;[SE][SS] நல்லாரை நிலைநிறுத்தும்;[SE][SS] நீர் எண்ணங்களையும்[SE][SS] விருப்பங்களையும் கண்டறிபவர்;[SE][SS] நீதி அருளும் கடவுள். [* திவெ 2:23.[QE]. ] [SE][QE]
10. [QS][SS] கடவுளே என் கேடயம்;[SE][SS] நேரிய உளத்தோரை[SE][SS] அவர் விடுவிப்பார்.[SE][QE]
11. [QS][SS] கடவுள் நடுநிலை தவறாத நீதிபதி;[SE][SS] நாள்தோறும் அநீதியைப்[SE][SS] பொறுத்துக் கொள்ளாத இறைவன்.[SE][QE]
12. [QS][SS] பொல்லார் மனமாற்றம் அடையாவிடில்,[SE][SS] அவர் தம் வாளைக் கூர்மையாக்குவார்;[SE][SS] வில்லை நாணேற்றி ஆயத்தம் செய்வார்.[SE][QE]
13. [QS][SS] கொலைக் கருவிகளை ஆயத்தமாக்குவார்;[SE][SS] அம்புகளை அனல் பறக்கும்படி எய்வார்;[SE][QE]
14. [QS][SS] ஏனெனில், பொல்லார்[SE][SS] கொடுமையைக் கருக்கொள்கின்றனர்;[SE][SS] அவர்கள் தீவினையைக் கருத்தாங்கி,[SE][SS] பொய்மையைப் பெற்றெடுக்கின்றனர்.[SE][QE]
15. [QS][SS] அவர்கள் குழியை வெட்டி[SE][SS] ஆழமாகத் தோண்டுகின்றனர்;[SE][SS] அவர்கள் வெட்டிய குழியில்[SE][SS] அவர்களே விழுகின்றனர்;[SE][QE]
16. [QS][SS] அவர்கள் செய்த கேடு[SE][SS] அவர்கள் தலைக்கே திரும்பும்.[SE][SS] அவர்கள் செய்த கொடுமை[SE][SS] அவர்கள் உச்சந்தலையிலேயே விழும்.[SE][QE]
17. [QS][SS] ஆண்டவர் வழங்கிய நீதிக்காக[SE][SS] அவருக்கு நன்றி கூறுவேன்;[SE][SS] உன்னதரான ஆண்டவரின் பெயரைப்[SE][SS] போற்றிப் பாடுவேன்.[SE][PE]
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 7 / 150
நீதி வழங்குமாறு வேண்டல்
(தாவீதின் புலம்பல்; பென்யமினியனான கூசின் சொற்களைக் கேட்டுத் தாவீது ஆண்டவரை நோக்கிப் பாடியது)

1 என் கடவுளாகிய ஆண்டவரே, உம்மிடம் அடைக்கலம் புகுந்தேன்; என்னைத் துரத்துவோர் அனைவரிடமிருந்தும் என்னைக் காப்பாற்றித் தப்புவியும். 2 இல்லையெனில், என் எதிரிகள் சிங்கம்போல
என்னைப் பீறிக் கிழித்துப் போடுவார்கள்;
விடுவிப்போர் எவரும் இரார்.
3 என் கடவுளாகிய ஆண்டவரே, நான் இவற்றைச் செய்திருந்தால் – என் கை தவறிழைத்திருந்தால், 4 என்னோடு நல்லுறவு கொண்டிருந்தவனுக்கு நான் தீங்கிழைத்திருந்தால், என் பகைவனைக் காரணமின்றிக் காட்டிக்கொடுத்திருந்தால் – 5 எதிரி என்னைத் துரத்திப் பிடிக்கட்டும்; என்னைத் தரையில் தள்ளி மிதித்து நசுக்கட்டும்; என் பெருமையைப் புழுதியில் புதைக்கட்டும். (சேலா) 6 ஆண்டவரே, சினங்கொண்டு எழுந்தருளும்; என் பகைவரின் சீற்றத்தை அடக்க வாரும்; எனக்காக விழித்தெழும்; ஏனெனில், நீதியை நிலைநாட்டுபவர் நீர் ஒருவரே. 7 எல்லா இனத்தாரும் ஒன்றுகூடி உம்மைச் சூழச் செய்யும்; அவர்கள்மீது உயரத்தினின்று ஆட்சி செலுத்தும். 8 ஆண்டவரே, நீரே மக்களினத்தார் அனைவருக்கும் நீதி வழங்குபவர்; ஆண்டவரே, என் நேர்மைக்கும் வாய்மைக்கும் ஏற்ப எனக்குத் தீர்ப்பளியும். 9 பொல்லாரின் தீமையை முடிவுக்குக் கொண்டுவாரும்; நல்லாரை நிலைநிறுத்தும்; நீர் எண்ணங்களையும் விருப்பங்களையும் கண்டறிபவர்; நீதி அருளும் கடவுள். [* திவெ 2:23.. ] 10 கடவுளே என் கேடயம்; நேரிய உளத்தோரை அவர் விடுவிப்பார். 11 கடவுள் நடுநிலை தவறாத நீதிபதி; நாள்தோறும் அநீதியைப் பொறுத்துக் கொள்ளாத இறைவன். 12 பொல்லார் மனமாற்றம் அடையாவிடில், அவர் தம் வாளைக் கூர்மையாக்குவார்; வில்லை நாணேற்றி ஆயத்தம் செய்வார். 13 கொலைக் கருவிகளை ஆயத்தமாக்குவார்; அம்புகளை அனல் பறக்கும்படி எய்வார்; 14 ஏனெனில், பொல்லார் கொடுமையைக் கருக்கொள்கின்றனர்; அவர்கள் தீவினையைக் கருத்தாங்கி, பொய்மையைப் பெற்றெடுக்கின்றனர். 15 அவர்கள் குழியை வெட்டி ஆழமாகத் தோண்டுகின்றனர்; அவர்கள் வெட்டிய குழியில் அவர்களே விழுகின்றனர்; 16 அவர்கள் செய்த கேடு அவர்கள் தலைக்கே திரும்பும். அவர்கள் செய்த கொடுமை அவர்கள் உச்சந்தலையிலேயே விழும். 17 ஆண்டவர் வழங்கிய நீதிக்காக அவருக்கு நன்றி கூறுவேன்; உன்னதரான ஆண்டவரின் பெயரைப் போற்றிப் பாடுவேன்.
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 7 / 150
×

Alert

×

Tamil Letters Keypad References