1. {உதவிக்காக வேண்டல்[BR](பாடகர் தலைவர்க்கு: ‘லீலிமலர்’ என்ற மெட்டு; தாவீதுக்கு உரியது)} [PS] [QS][SS] கடவுளே! என்னைக் காப்பாற்றும்;[SE][SS] வெள்ளம் கழுத்தளவு[SE][SS] வந்துவிட்டது.[SE][QE]
2. [QS][SS] ஆழமிகு நீர்த்திரளுள்[SE][SS] அமிழ்ந்திருக்கின்றேன்;[SE][SS] நிற்க இடமில்லை;[SE][SS] நிலைக்கொள்ளாத நீருக்குள்[SE][SS] ஆழ்ந்திருக்கின்றேன்;[SE][SS] வெள்ளம் என்மீது[SE][SS] புரண்டோடுகின்றது.[SE][QE]
3. [QS][SS] கத்திக் கத்திக் களைத்துப்போனேன்;[SE][SS] தொண்டையும் வறண்டுபோயிற்று;[SE][SS] என் கடவுளாம் உமக்காகக் காத்திருந்து[SE][SS] என் கண்கள் பூத்துப்போயின;[SE][QE]
4. [QS][SS] காரணமில்லாமல் என்னை வெறுப்போர்[SE][SS] என் தலைமுடியைவிட[SE][SS] மிகுதியாய் இருக்கின்றனர்;[SE][SS] பொய்க்குற்றம் சாட்டி[SE][SS] என்னைத் தாக்குவோர் பெருகிவிட்டனர்.[SE][SS] நான் திருடாததை[SE][SS] எப்படித் திருப்பித் தரமுடியும்?[SE][QE]
5. [QS][SS] கடவுளே! என் மதிகேடு உமக்குத் தெரியும்;[SE][SS] என் குற்றங்கள் உமக்கு[SE][SS] மறைவானவை அல்ல. [* திபா 35:19; யோவா 15:25 ] [SE][QE]
6. [QS][SS] ஆண்டவரே! படைகளின் தலைவரே![SE][SS] உமக்காகக் காத்திருப்போர்[SE][SS] என்னால் வெட்கமுறாதபடி செய்யும்;[SE][SS] இஸ்ரயேலின் கடவுளே![SE][SS] உம்மை நாடித் தேடுகிறவர்கள்[SE][SS] என்பொருட்டு [BR] மானக்கேடு அடையாதபடி செய்யும்.[SE][QE]
7. [QS][SS] ஏனெனில், உம் பொருட்டே[SE][SS] நான் இழிவை ஏற்றேன்;[SE][SS] வெட்கக்கேடு என் முகத்தை மூடிவிட்டது.[SE][QE]
8. [QS][SS] என் சகோதரருக்கு[SE][SS] வேற்று மனிதனானேன்;[SE][SS] என் தாயின் பிள்ளைகளுக்கு[SE][SS] அயலான் ஆனேன்.[SE][QE]
9. [QS][SS] உமது இல்லத்தின்மீது[SE][SS] எனக்குண்டான ஆர்வம்[SE][SS] என்னை எரித்துவிட்டது;[SE][SS] உம்மைப் பழித்துப் பேசினவர்களின்[SE][SS] பழிச்சொற்கள் என்மீது விழுந்தன.[SE][QE]
10. [QS][SS] நோன்பிருந்து நான்[SE][SS] நெக்குருகி அழுதேன்;[SE][SS] அதுவே எனக்கு இழிவாய் மாறிற்று. [* யோவா 2:17; உரோ 15:3 ] [SE][QE]
11. [QS][SS] சாக்குத் துணியை[SE][SS] என் உடையாகக் கொண்டேன்;[SE][SS] ஆயினும், அவர்களது[SE][SS] பழிச்சொல்லுக்கு உள்ளானேன்.[SE][QE]
12. [QS][SS] நகர வாயிலில் அமர்வோர்[SE][SS] என்னைப் பற்றிப் புறணி பேசுகின்றனர்;[SE][SS] குடிகாரர் என்னைப்பற்றிப்[SE][SS] பாட்டுக் கட்டுகின்றனர்.[SE][QE]
13. [QS][SS] ஆண்டவரே! நான் தக்க காலத்தில்[SE][SS] உம்மை நோக்கி[SE][SS] விண்ணப்பம் செய்கின்றேன்;[SE][SS] கடவுளே! உமது பேரன்பின் பெருக்கினால்[SE][SS] எனக்குப் பதில்மொழி தாரும்;[SE][SS] துணை செய்வதில் நீர் மாறாதவர்.[SE][QE]
14. [QS][SS] சேற்றில் நான் அமிழ்வதிலிருந்து[SE][SS] என்னைக் காத்தருளும்;[SE][SS] என்னை வெறுப்போரிடமிருந்தும்[SE][SS] ஆழ்கடலிலிருந்தும்[SE][SS] என்னை விடுவித்தருளும்.[SE][QE]
15. [QS][SS] பெருவெள்ளம் என்னை[SE][SS] அடித்துக்கொண்டு போகாதிருப்பதாக![SE][SS] ஆழ்கடல் என்னை விழுங்காதிருப்பதாக![SE][SS] படுகுழி தன்வாய் திறந்து[SE][SS] என்னை மூடிக் கொள்ளாதிருப்பதாக![SE][QE]
16. [QS][SS] ஆண்டவரே! எனக்குப் பதில்மொழி தாரும்;[SE][SS] உம் பேரன்பு நன்மை மிக்கது;[SE][SS] உமது பேரிரக்கத்தை முன்னிட்டு[SE][SS] என்னை நோக்கித் திரும்பும்.[SE][QE]
17. [QS][SS] உமது முகத்தை[SE][SS] அடியேனுக்கு மறைக்காதேயும்;[SE][SS] நான் நெருக்கடியான[SE][SS] நிலையிலிருக்கிறேன்;[SE][SS] என் மன்றாட்டுக்கு[SE][SS] விரைவில் பதில்மொழி தாரும்.[SE][QE]
18. [QS][SS] என்னை நெருங்கி,[SE][SS] என்னை விடுவித்தருளும்;[SE][SS] என் எதிரிகளிடமிருந்து[SE][SS] என்னை மீட்டருளும்.[SE][QE]
19. [QS][SS] என் இழிவும், வெட்கக்கேடும்,[SE][SS] மானக்கேடும் உமக்குத் தெரியும்;[SE][SS] என் பகைவர் அனைவரும்[SE][SS] உம் முன்னிலையில் இருக்கின்றனர்.[SE][QE]
20. [QS][SS] பழிச்சொல் என் இதயத்தைப்[SE][SS] பிளந்து விட்டது;[SE][SS] நான் மிகவும் வருந்துகிறேன்;[SE][SS] ஆறுதல் அளிப்பாருக்காகக்[SE][SS] காத்திருந்தேன்;[SE][SS] யாரும் வரவில்லை;[SE][SS] தேற்றிடுவோருக்காகக் தேடிநின்றேன்;[SE][SS] யாரையும் காணவில்லை.[SE][QE]
21. [QS][SS] அவர்கள் என் உணவில்[SE][SS] நஞ்சைக் கலந்து கொடுத்தார்கள்;[SE][SS] என் தாகத்துக்குக் காடியைக்[SE][SS] குடிக்கக் கொடுத்தார்கள்.[SE][QE]
22. [QS][SS] அவர்களுடைய விருந்துகளே[SE][SS] அவர்களுக்குக் கண்ணியாகட்டும்![SE][SS] அவர்களுடைய படையல் விருந்துகளே[SE][SS] அவர்களுக்குப் பொறியாகட்டும்! [* மத் 27:48; மாற் 15:36; லூக் 23:36; யோவா 19:28-29 ] [SE][QE]
23. [QS][SS] அவர்களின் கண்கள் காணாதவாறு[SE][SS] ஒளியிழக்கட்டும்![SE][SS] அவர்களின் இடைகள்[SE][SS] இடையறாது தள்ளாடட்டும்! [* உரோ 11:9-10 ] [SE][QE]
24. [QS][SS] உமது கடுஞ்சினத்தை[SE][SS] அவர்கள்மேல் கொட்டியருளும்;[SE][SS] உமது சினத்தீ[SE][SS] அவர்களை மடக்கிப் பிடிப்பதாக! [* உரோ 11:9-10 ] [SE][QE]
25. [QS][SS] அவர்களின் பாசறை பாழாவதாக![SE][SS] அவர்களின் கூடாரங்களில்[SE][SS] ஒருவனும் குடிபுகாதிருப்பானாக![SE][QE]
26. [QS][SS] நீர் அடித்தவர்களை அவர்கள் இன்னும்[SE][SS] கொடுமைப்படுத்துகின்றார்கள்;[SE][SS] நீர் காயப்படுத்தினவர்களின்[SE][SS] நோவைப் பற்றித்[SE][SS] தூற்றித் திரிகின்றார்கள். [* திப 1:20 ] [SE][QE]
27. [QS][SS] அவர்கள்மீது[SE][SS] குற்றத்தின்மேல் குற்றம் சுமத்தும்![SE][SS] உமது நீதித் தீர்ப்பினின்று[SE][SS] அவர்களைத் தப்ப விடாதேயும்![SE][QE]
28. [QS][SS] மெய்வாழ்வுக்குரியோரின்[SE][SS] அட்டவணையிலிருந்து[SE][SS] அவர்களுடைய பெயர்களை நீக்கிவிடும்![SE][SS] அவற்றை நேர்மையாளரின்[SE][SS] பெயர்களோடு சேர்க்காதேயும்![SE][QE]
29. [QS][SS] எளியேன் சிறுமைப்பட்டவன்;[SE][SS] காயமுற்றவன்;[SE][SS] கடவுளே! நீர் அருளும் மீட்பு[SE][SS] எனக்குப் பாதுகாப்பாய் இருப்பதாக! [* விப 32:32; திவெ 3:5; 13:8; 17:8.[QE] ] [SE][QE]
30. [QS][SS] கடவுளின் பெயரை[SE][SS] நான் பாடிப் புகழ்வேன்;[SE][SS] அவருக்கு நன்றி செலுத்தி,[SE][SS] அவரை மாட்சிமைப்படுத்துவேன்;[SE][QE]
31. [QS][SS] காளையை விட[SE][SS] இதுவே ஆண்டவருக்கு உகந்தது;[SE][SS] கொம்பும் விரிகுளம்பும்[SE][SS] உள்ள எருதைவிட[SE][SS] இதுவே அவருக்கு உகந்தது.[SE][QE]
32. [QS][SS] எளியோர் இதைக் கண்டு[SE][SS] மகிழ்ச்சி அடைவார்கள்;[SE][SS] கடவுளை நாடித் தேடுகிறவர்களே,[SE][SS] உங்கள் உள்ளம் ஊக்கமடைவதாக.[SE][QE]
33. [QS][SS] ஆண்டவர்[SE][SS] ஏழைகளின் விண்ணப்பத்திற்குச்[SE][SS] செவிசாய்க்கின்றார்;[SE][SS] சிறைப்பட்ட தம் மக்களை[SE][SS] அவர் புறக்கணிப்பதில்லை.[SE][QE]
34. [QS][SS] வானமும் வையமும் கடல்களும்[SE][SS] அவற்றில் வாழும் யாவும்[SE][SS] அவரைப் புகழட்டும்.[SE][QE]
35. [QS][SS] கடவுள் சீயோனுக்கு மீட்பளிப்பார்;[SE][SS] யூதாவின் நகரங்களைக்[SE][SS] கட்டி எழுப்புவார்;[SE][SS] அப்பொழுது அவர்களுடைய மக்கள்[SE][SS] அங்கே குடியிருப்பார்கள்;[SE][SS] நாட்டைத் தங்களுக்குச்[SE][SS] சொந்தமாக்கிக் கொள்வார்கள்.[SE][QE]
36. [QS][SS] ஆண்டவருடைய அடியாரின் மரபினர்[SE][SS] அதைத் தம்[SE][SS] உரிமைச் சொத்தாக்கிக் கொள்வர்;[SE][SS] அவரது பெயர்மீது அன்பு கூர்வோர்[SE][SS] அதில் குடியிருப்பர்.[SE][PE]