1. {இறைவனின் வெற்றிப் பவனி[BR](பாடகர் தலைவர்க்கு: தாவீதின் புகழ்ப்பாடல்)} [PS] [QS][SS] கடவுள் எழுந்தருள்வார்;[SE][SS] அவருடைய எதிரிகள் [BR] சிதறடிக்கப்படுவார்கள்;[SE][SS] அவரை வெறுப்போர்[SE][SS] அவர் முன்னிலையினின்று ஓடிப்போவர்;[SE][QE]
2. [QS][SS] புகை அடித்துச் செல்லப்படுவதுபோல[SE][SS] அடித்துச் செல்லப்படுவர்;[SE][SS] நெருப்புமுன் மெழுகு[SE][SS] உருகுவது போலக்[SE][SS] கடவுள்முன் பொல்லார் அழிந்தொழிவர்.[SE][QE]
3. [QS][SS] நேர்மையாளரோ மகிழ்ச்சியடைவர்;[SE][SS] கடவுள் முன்னிலையில் ஆர்ப்பரிப்பர்;[SE][SS] மகிழ்ந்து கொண்டாடுவர்.[SE][QE]
4. [QS][SS] கடவுளைப் புகழ்ந்து பாடி[SE][SS] அவரது பெயரை போற்றுங்கள்;[SE][SS] மேகங்கள்மீது வருகிறவரை[SE][SS] வாழ்த்திப் பாடுங்கள்;[SE][SS] ‘ஆண்டவர்’ என்பது அவர்தம் பெயராம்;[SE][SS] அவர்முன் களிகூருங்கள்.[SE][QE]
5. [QS][SS] திக்கற்ற பிள்ளைகளுக்குத்[SE][SS] தந்தையாகவும்[SE][SS] கணவனை இழந்தாளின்[SE][SS] காப்பாளராகவும் இருப்பவர்,[SE][SS] தூயகத்தில் உறையும் கடவுள்![SE][QE]
6. [QS][SS] தனித்திருப்போர்க்குக் கடவுள்[SE][SS] உறைவிடம் அமைத்துத் தருகின்றார்;[SE][SS] சிறைப்பட்டோரை விடுதலை வாழ்வுக்கு[SE][SS] அழைத்துச் செல்கின்றார்; ஆனால்,[SE][SS] அவருக்கு எதிராகக் கிளம்புவோர்[SE][SS] வறண்ட நிலத்தில் வாழ்வர்.[SE][QE]
7. [QS][SS] கடவுளே! நீர் உம்முடைய[SE][SS] மக்கள் முன்சென்று[SE][SS] பாலைவெளியில் நடைபோட்டுச்[SE][SS] செல்கையில், (சேலா)[SE][QE]
8. [QS][SS] சீனாயின் கடவுள் வருகையில்,[SE][SS] பூவுலகு அதிர்ந்தது;[SE][SS] இஸ்ரயேலின் கடவுள் வருகையில்[SE][SS] வானம் மழையைப் பொழிந்தது.[SE][QE]
9. [QS][SS] கடவுளே! உம் உரிமையான நாட்டின்மீது[SE][SS] மிகுதியாக மழைபொழியச் செய்தீர்;[SE][SS] வறண்டுபோன நிலத்தை[SE][SS] மீண்டும் வளமாக்கினீர். [* விப 19:18 ] [SE][QE]
10. [QS][SS] உமக்குரிய உயிர்கள்[SE][SS] அதில் தங்கியிருந்தன;[SE][SS] கடவுளே! நீர் நல்லவர்;[SE][SS] எனவே ஒடுக்கப்பட்டோர்க்கு[SE][SS] மறுவாழ்வு அளித்தீர்.[SE][QE]
11. [QS][SS] என் தலைவர் செய்தி அறிவித்தார்;[SE][SS] அச்செய்தியைப் பரப்பினோர்[SE][SS] கூட்டமோ பெரிது;[SE][QE]
12. [QS][SS] ‛படைகளையுடைய அரசர்கள் ஓடினார்கள்;[SE][SS] புறங்காட்டி ஓடினார்கள்’![SE][SS] வீட்டில் தங்கியிருக்கும் பெண்கள்[SE][SS] கொள்ளைப்பொருள்களைப்[SE][SS] பகிர்ந்து கொண்டார்கள்.[SE][QE]
13. [QS][SS] நீங்கள் தொழுவங்களின் நடுவில்[SE][SS] படுத்துக்கொண்டீர்களோ?[SE][SS] வெள்ளியால் மூடிய புறாச் சிறகுகளும்,[SE][SS] பசும்பொன்னால் மூடிய[SE][SS] அதன் இறகுகளும்[SE][SS] அவர்களுக்குக் கிடைத்ததே![SE][QE]
14. [QS][SS] எல்லாம் வல்லவர் அங்கே[SE][SS] அரசர்களைச் சிதறடித்தபோது,[SE][SS] சல்மோன் மலையில் பனிமழை பெய்தது.[SE][QE]
15. [QS][SS] ஓ மாபெரும் மலையே![SE][SS] பாசானின் மலையே![SE][SS] ஓ கொடுமுடி பல கொண்ட மலையே![SE][SS] பாசானின் மலையே![SE][QE]
16. [QS][SS] ஓ பல முடி கொண்ட மலைத் தொடரே![SE][SS] கடவுள் தம் இல்லமாகத்[SE][SS] தேர்ந்துகொண்ட இந்த மலையை[SE][SS] நீ ஏன் பொறாமையோடு பார்க்கின்றாய்?[SE][SS] ஆம், இதிலேதான் ஆண்டவர்[SE][SS] என்றென்றும் தங்கி இருப்பார்.[SE][QE]
17. [QS][SS] வலிமைமிகு தேர்கள் ஆயிரமாயிரம்,[SE][SS] பல்லாயிரம் கொண்ட என் தலைவர்[SE][SS] சீனாய் மலையிலிருந்து[SE][SS] தம் தூயகத்தில் எழுந்தருள வருகின்றார்.[SE][QE]
18. [QS][SS] உயர்ந்த மலைக்கு நீர் ஏறிச் சென்றீர்;[SE][SS] சிறைப்பட்ட கைதிகளை[SE][SS] இழுத்துச் சென்றீர்;[SE][SS] மனிதரிடமிருந்தும்[SE][SS] எதிர்த்துக் கிளம்பியவரிடமிருந்தும்[SE][SS] பரிசுகள் பெற்றுக் கொண்டீர்;[SE][SS] கடவுளாகிய ஆண்டவர்[SE][SS] அங்கேதான் தங்கியிருப்பார்.[SE][QE]
19. [QS][SS] ஆண்டவர் போற்றி! போற்றி![SE][SS] நாளும் நம்மை அவர்[SE][SS] தாங்கிக் கொள்கின்றார்;[SE][SS] இறைவனே நம் மீட்பு. (சேலா) [* எபே 4:8 ] [SE][QE]
20. [QS][SS] நம் இறைவனே மீட்பளிக்கும் கடவுள்;[SE][SS] நம் தலைவராகிய ஆண்டவர்தாம்[SE][SS] இறப்பினின்று விடுதலை தர வல்லவர்.[SE][QE]
21. [QS][SS] அவர் தம் எதிரிகளின் தலையை உடைப்பார்;[SE][SS] தம் தீய வழிகளில்[SE][SS] துணிந்து நடப்போரின்[SE][SS] மணிமுடியை நொறுக்குவார்.[SE][QE]
22. [QS][SS] என் தலைவர், ‛பாசானிலிருந்து[SE][SS] அவர்களை அழைத்து வருவேன்;[SE][SS] ஆழ்கடலிலிருந்து அழைத்து வருவேன்.[SE][QE]
23. [QS][SS] அப்பொழுது உன் கால்களை[SE][SS] இரத்தத்தில் தோய்ப்பாய்;*[SE][SS] உன் நாய்கள் எதிரிகளிடம்[SE][SS] தமக்குரிய பங்கைச் சுவைக்கும்’ [BR] என்று சொன்னார்.[SE][QE]
24. [QS][SS] கடவுளே! நீர் பவனி செல்வதை,[SE][SS] என் கடவுளும் அரசருமானவர்[SE][SS] தூயகத்தில் பவனி செல்வதை,[SE][SS] அனைவரும் கண்டனர்.[SE][QE]
25. [QS][SS] முன்னால் பாடகரும்[SE][SS] பின்னால் இசைக்கருவிகளை[SE][SS] வாசிப்போரும்,[SE][SS] நடுவில் தம்புரு வாசிக்கும்[SE][SS] பெண்களும் சென்றனர்.[SE][QE]
26. [QS][SS] மாபெரும் சபை நடுவில்[SE][SS] கடவுளைப் போற்றுங்கள்;[SE][SS] இஸ்ரயேலர் கூட்டத்தில்[SE][SS] ஆண்டவரை வாழ்த்துங்கள்.[SE][QE]
27. [QS][SS] அதோ! இளையவன் பென்யமின்,[SE][SS] அவர்களுக்கு முன்னே செல்கின்றான்;[SE][SS] யூதாவின் தலைவர்கள்[SE][SS] கூட்டமாய்ச் செல்கின்றார்கள்;[SE][SS] செபுலோன் தலைவர்களும்[SE][SS] நப்தலியின் தலைவர்களும்[SE][SS] அங்குள்ளார்கள்.[SE][QE]
28. [QS][SS] கடவுளே![SE][SS] உம் வல்லமையைக் காட்டியருளும்;[SE][SS] என் சார்பாகச் செயலாற்றிய கடவுளே![SE][SS] உம் வல்லமையைக் காட்டியருளும்![SE][QE]
29. [QS][SS] எருசலேமில் உமது கோவில் உள்ளது;[SE][SS] எனவே,[SE][SS] அங்கு அரசர்[SE][SS] உமக்குக் காணிக்கை கொணர்வர்.[SE][QE]
30. [QS][SS] நாணலிடையே இருக்கும்[SE][SS] விலங்கினைக் கண்டியும்;[SE][SS] மக்களினங்களாகிய[SE][SS] கன்றுகளோடு வருகிற [BR] காளைகளின் கூட்டத்தையும் கண்டியும்;[SE][SS] வெள்ளியை நாடித் திரிவோரை[SE][SS] உமது காலடியில் மிதித்துவிடும்;[SE][SS] போர்வெறி கொண்ட[SE][SS] மக்களினங்களைச் சிதறடியும்[SE][QE]
31. [QS][SS] எகிப்திலிருந்து அரச தூதர்[SE][SS] அங்கே வருவர்;[SE][SS] கடவுள்முன் எத்தியோப்பியர்[SE][SS] கைகூப்பி நிற்க விரைவர்.[SE][QE]
32. [QS][SS] உலகிலுள்ள அரசர்களே![SE][SS] கடவுளைப் புகழ்ந்தேத்துங்கள்;[SE][SS] ஆண்டவரைப்[SE][SS] போற்றிப் பாடுங்கள். (சேலா)[SE][QE]
33. [QS][SS] வானங்களின்மேல்,[SE][SS] தொன்மைமிகு வானங்களின்மேல்,[SE][SS] ஏறிவரும் அவரைப் புகழுங்கள்;[SE][SS] இதோ! அவர் தம் குரலில்,[SE][SS] தம் வலிமைமிகு குரலில் முழங்குகின்றார்.[SE][QE]
34. [QS][SS] கடவுளுக்கே ஆற்றலை உரித்தாக்குங்கள்;[SE][SS] அவரது மாட்சி இஸ்ரயேல் மேலுள்ளது;[SE][SS] அவரது வலிமை[SE][SS] மேக மண்டலங்களில் உள்ளது.[SE][QE]
35. [QS][SS] கடவுள் தம் தூயகங்களில்[SE][SS] அஞ்சுவதற்கு உரியவராய் விளங்குகின்றார்;[SE][SS] இஸ்ரயேலின் கடவுள் தம் மக்களுக்கு[SE][SS] வலிமையையும் ஊக்கத்தையும்[SE][SS] அளிக்கின்றார்;[SE][SS] கடவுள் போற்றி! போற்றி![SE][PE]