தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பொது மொழிபெயர்ப்பு வெளியீடு
சங்கீதம்
1. {நன்றிப் புகழ்ப்பா[BR](பாடகர் தலைவர்க்கு: புகழ்ப்பாடல்)} [PS] [QS][SS] அனைத்துலகோரே![SE][SS] கடவுளைப் போற்றி[SE][SS] ஆர்ப்பரியுங்கள்![SE][QE]
2. [QS][SS] அவரது பெயரின் மாட்சியைப்[SE][SS] புகழ்ந்து பாடுங்கள்;[SE][SS] அவரது புகழை மேன்மைப்படுத்துங்கள்.[SE][QE]
3. [QS][SS] கடவுளை நோக்கி[SE][SS] ‘உம் செயல்கள் எவ்வளவு அஞ்சத்தக்கவை;[SE][SS] உமது மாபெரும் ஆற்றலின் காரணமாக[SE][SS] உம் எதிரிகள் உமது முன்னலையில்[SE][SS] கூனிக் குறுகுவர்;[SE][QE]
4. [QS][SS] அனைத்துலகோர் உம்மைப் பணிந்திடுவர்;[SE][SS] அவர்கள் உம் புகழ் பாடிடுவர்;[SE][SS] உம் பெயரைப் புகழ்ந்து பாடிடுவர்’[SE][SS] என்று சொல்லுங்கள். (சேலா)[SE][QE]
5. [QS][SS] வாரீர்! கடவுளின் செயல்களைப் பாரீர்![SE][SS] அவர் மானிடரிடையே ஆற்றிவரும்[SE][SS] செயல்கள் அஞ்சுவதற்கு உரியவை.[SE][QE]
6. [QS][SS] கடலை உலர்ந்த தரையாக அவர் மாற்றினார்;[SE][SS] ஆற்றை அவர்கள் நடந்து கடந்தார்கள்.[SE][SS] அங்கே அவரில் நாம் அகமகிழ்ந்தோம்.[SE][QE]
7. [QS][SS] அவர் தமது வலிமையால்[SE][SS] என்றென்றும் அரசாள்கிறார்![SE][SS] அவர்தம் கண்கள் வேற்றினத்தாரைக்[SE][SS] கவனித்து வருகின்றன;[SE][SS] கலகம் செய்வோர் அவருக்கு எதிராய்த்[SE][SS] தலைதூக்காதிருப்பராக! (சேலா) [* விப 14:21; யோசு 3:14-17.[QE] ] [SE][QE]
8. [QS][SS] மக்களினங்களே![SE][SS] நம் கடவுளைப் போற்றுங்கள்;[SE][SS] அவரைப் புகழ்ந்துபாடும் ஒலி[SE][SS] கேட்கச் செய்யுங்கள்.[SE][QE]
9. [QS][SS] நம்மை உயிர்வாழச் செய்தவர் அவரே;[SE][SS] அவர் நம் கால்களை இடற விடவில்லை.[SE][QE]
10. [QS][SS] கடவுளே! எங்களை ஆய்ந்து,[SE][SS] வெள்ளியைப் புடமிடுவதுபோல் புடமிட்டீர்;[SE][QE]
11. [QS][SS] கண்ணியில் எங்களை விழும்படி செய்தீர்;[SE][SS] பளுவான சுமைகளை[SE][SS] எங்கள் முதுகின் மீது சுமத்தினீர்.[SE][QE]
12. [QS][SS] மனிதரை எங்கள் தலைகள்மீது[SE][SS] நடந்துபோகச் செய்தீர்;[SE][SS] நெருப்பிலும் தண்ணீரிலும்[SE][SS] அகப்பட்டிருந்தோம்; ஆயினும்,[SE][SS] நீர் எங்களைப் பாதுகாப்பான இடத்திற்குக்[SE][SS] கொண்டுவந்து சேர்த்தீர்.[SE][QE]
13. [QS][SS] எரிபலியுடன்[SE][SS] உமது இல்லத்தினுள் செல்வேன்;[SE][SS] என் பொருத்தனைகளை[SE][SS] உமக்குச் செலுத்துவேன்.[SE][QE]
14. [QS][SS] அவற்றை என் துன்ப வேளையில்[SE][SS] என் நா உரைத்தது;[SE][SS] என் வாய் உறுதி செய்தது.[SE][QE]
15. [QS][SS] கொழுத்த கன்றுகளை,[SE][SS] செம்மறிக்கிடாய்களின் நறும்புகையோடு,[SE][SS] உமக்கு எரிபலியாகச் செலுத்துவேன்;[SE][SS] காளைகளையும்[SE][SS] வெள்ளாட்டுக் கிடாய்களையும்[SE][SS] உமக்குப் பலியிடுவேன். (சேலா)[SE][QE]
16. [QS][SS] கடவுளுக்கு அஞ்சி நடப்போரே![SE][SS] அனைவரும் வாரீர்! கேளீர்![SE][SS] அவர் எனக்குச் செய்ததனை[SE][SS] எடுத்துரைப்பேன்.[SE][QE]
17. [QS][SS] அவரிடம் மன்றாட என் வாய்திறந்தது;[SE][SS] அவரை ஏத்திப் புகழ என் நா எழுந்தது.[SE][QE]
18. [QS][SS] என் உள்ளத்தில் தீய எண்ணங்களை[SE][SS] வளர்த்திருந்தேனாகில்,[SE][SS] என் தலைவர் எனக்குச்[SE][SS] செவிசாய்த்திருக்கமாட்டார்.[SE][QE]
19. [QS][SS] ஆனால், உண்மையில்[SE][SS] கடவுள் எனக்குச் செவிகொடுத்தார்;[SE][SS] என் விண்ணப்பக் குரலை உற்றுக் கேட்டார்.[SE][QE]
20. [QS][SS] என் மன்றாட்டைப் புறக்கணியாத[SE][SS] கடவுள் போற்றி![SE][SS] தம் பேரன்பை என்னிடமிருந்து[SE][SS] நீக்காத இறைவன் போற்றி![SE][PE]

குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 66 / 150
சங்கீதம் 66:172
நன்றிப் புகழ்ப்பா
(பாடகர் தலைவர்க்கு: புகழ்ப்பாடல்)

1 அனைத்துலகோரே! கடவுளைப் போற்றி ஆர்ப்பரியுங்கள்! 2 அவரது பெயரின் மாட்சியைப் புகழ்ந்து பாடுங்கள்; அவரது புகழை மேன்மைப்படுத்துங்கள். 3 கடவுளை நோக்கி ‘உம் செயல்கள் எவ்வளவு அஞ்சத்தக்கவை; உமது மாபெரும் ஆற்றலின் காரணமாக உம் எதிரிகள் உமது முன்னலையில் கூனிக் குறுகுவர்; 4 அனைத்துலகோர் உம்மைப் பணிந்திடுவர்; அவர்கள் உம் புகழ் பாடிடுவர்; உம் பெயரைப் புகழ்ந்து பாடிடுவர்’ என்று சொல்லுங்கள். (சேலா) 5 வாரீர்! கடவுளின் செயல்களைப் பாரீர்! அவர் மானிடரிடையே ஆற்றிவரும் செயல்கள் அஞ்சுவதற்கு உரியவை. 6 கடலை உலர்ந்த தரையாக அவர் மாற்றினார்; ஆற்றை அவர்கள் நடந்து கடந்தார்கள். அங்கே அவரில் நாம் அகமகிழ்ந்தோம். 7 அவர் தமது வலிமையால் என்றென்றும் அரசாள்கிறார்! அவர்தம் கண்கள் வேற்றினத்தாரைக் கவனித்து வருகின்றன; கலகம் செய்வோர் அவருக்கு எதிராய்த் தலைதூக்காதிருப்பராக! (சேலா) [* விப 14:21; யோசு 3:14-17. ] 8 மக்களினங்களே! நம் கடவுளைப் போற்றுங்கள்; அவரைப் புகழ்ந்துபாடும் ஒலி கேட்கச் செய்யுங்கள். 9 நம்மை உயிர்வாழச் செய்தவர் அவரே; அவர் நம் கால்களை இடற விடவில்லை. 10 கடவுளே! எங்களை ஆய்ந்து, வெள்ளியைப் புடமிடுவதுபோல் புடமிட்டீர்; 11 கண்ணியில் எங்களை விழும்படி செய்தீர்; பளுவான சுமைகளை எங்கள் முதுகின் மீது சுமத்தினீர். 12 மனிதரை எங்கள் தலைகள்மீது நடந்துபோகச் செய்தீர்; நெருப்பிலும் தண்ணீரிலும் அகப்பட்டிருந்தோம்; ஆயினும், நீர் எங்களைப் பாதுகாப்பான இடத்திற்குக் கொண்டுவந்து சேர்த்தீர். 13 எரிபலியுடன் உமது இல்லத்தினுள் செல்வேன்; என் பொருத்தனைகளை உமக்குச் செலுத்துவேன். 14 அவற்றை என் துன்ப வேளையில் என் நா உரைத்தது; என் வாய் உறுதி செய்தது. 15 கொழுத்த கன்றுகளை, செம்மறிக்கிடாய்களின் நறும்புகையோடு, உமக்கு எரிபலியாகச் செலுத்துவேன்; காளைகளையும் வெள்ளாட்டுக் கிடாய்களையும் உமக்குப் பலியிடுவேன். (சேலா) 16 கடவுளுக்கு அஞ்சி நடப்போரே! அனைவரும் வாரீர்! கேளீர்! அவர் எனக்குச் செய்ததனை எடுத்துரைப்பேன். 17 அவரிடம் மன்றாட என் வாய்திறந்தது; அவரை ஏத்திப் புகழ என் நா எழுந்தது. 18 என் உள்ளத்தில் தீய எண்ணங்களை வளர்த்திருந்தேனாகில், என் தலைவர் எனக்குச் செவிசாய்த்திருக்கமாட்டார். 19 ஆனால், உண்மையில் கடவுள் எனக்குச் செவிகொடுத்தார்; என் விண்ணப்பக் குரலை உற்றுக் கேட்டார். 20 என் மன்றாட்டைப் புறக்கணியாத கடவுள் போற்றி! தம் பேரன்பை என்னிடமிருந்து நீக்காத இறைவன் போற்றி!
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 66 / 150
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References