தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பொது மொழிபெயர்ப்பு வெளியீடு
சங்கீதம்
1. {நன்றிப் புகழ்ப்பா[BR](பாடகர் தலைவர்க்கு: தாவீதின் புகழ்ப்பாடல்)} [PS] [QS][SS] கடவுளே, சீயோனில் உம்மைப்[SE][SS] புகழ்ந்து பாடுவது ஏற்புடையது![SE][SS] உமக்குப் பொருத்தனைகள்[SE][SS] செலுத்துவதும் சால்புடையது![SE][QE]
2. [QS][SS] மன்றாட்டுக்களைக் கேட்கின்றவரே![SE][SS] மானிடர் யாவரும் உம்மிடம் வருவர்.[SE][QE]
3. [QS][SS] எங்கள் பாவங்களின் பளுவை[SE][SS] எங்களால் தாங்கமுடியவில்லை;[SE][SS] ஆனால் நீர் எங்கள் குற்றப் பழிகளைப்[SE][SS] போக்குகின்றீர்.[SE][QE]
4. [QS][SS] நீர் தேர்ந்தெடுத்து[SE][SS] உம்மருகில் வைத்துக்கொள்ளும்[SE][SS] மனிதர் பேறு பெற்றோர்;[SE][SS] உம் கோவிலின் முற்றங்களில்[SE][SS] அவர்கள் உறைந்திடுவர்;[SE][SS] உமது இல்லத்தில், உமது திருமிகு[SE][SS] கோவிலில் கிடைக்கும் நன்மைகளால்[SE][SS] நாங்கள் நிறைவு பெறுவோம்.[SE][QE]
5. [QS][SS] அஞ்சத்தகு செயல்களை நீர் புரிகின்றீர்;[SE][SS] எங்கள் மீட்பின் கடவுளே,[SE][SS] உமது நீதியின் பொருட்டு[SE][SS] எங்கள் மன்றாட்டுக்கு[SE][SS] மறுமொழி பகர்கின்றீர்;[SE][SS] உலகின் கடையெல்லைவரை[SE][SS] வாழ்வோர் அனைவருக்கும்[SE][SS] தொலையிலுள்ள தீவுகளில்[SE][SS] உள்ளோருக்கும் நம்பிக்கை நீரே![SE][QE]
6. [QS][SS] வல்லமையை இடைக்கச்சையாகக்[SE][SS] கொண்ட நீர் உமது ஆற்றலால் [BR] மலைகளை உறுதிப்படுத்துகின்றீர்.[SE][QE]
7. [QS][SS] கடல்களின் இரைச்சலையும்[SE][SS] அவற்றின் அலைகளின் ஓசையையும்[SE][SS] மக்களினங்களின் அமளியையும்[SE][SS] அடக்குகின்றீர்![SE][QE]
8. [QS][SS] உலகின் கடையெல்லைவரை வாழ்வோர்[SE][SS] உம் அருஞ் செயல்களைக் [BR]கண்டு அஞ்சுவர்;[SE][SS] கிழக்கு முதல் மேற்குவரை உள்ளோரைக்[SE][SS] களிகூரச் செய்கின்றீர்![SE][QE]
9. [QS][SS] மண்ணுலகைப் பேணி[SE][SS] அதன் நீர்வளத்தையும்[SE][SS] நிலவளத்தையும் பெருக்கினீர்![SE][SS] கடவுளின் ஆறு கரைபுரண்டோடியது;[SE][SS] அது தானியங்களை[SE][SS] நிரம்ப விளையச் செய்தது;[SE][SS] நீரே அவற்றை இவ்வாறு[SE][SS] விளையச் செய்துள்ளீர்.[SE][QE]
10. [QS][SS] அதன் படைசால்களில்[SE][SS] தண்ணீர் நிறைந்தோடச் செய்தீர்;[SE][SS] அதன் கரையோர நிலங்களைப் பரம்படித்து[SE][SS] மென்மழையால் மிருதுவாக்கினீர்;[SE][SS] அதன் வளமைக்கு ஆசி வழங்கினீர்.[SE][QE]
11. [QS][SS] ஆண்டு முழுவதும்[SE][SS] உமது நலத்தால் முடிசூட்டுகின்றீர்;[SE][SS] உம்முடைய வழிகள் எல்லாம்[SE][SS] வளம் கொழிக்கின்றன.[SE][QE]
12. [QS][SS] பாலைநிலத்தில் மேய்ச்சல் நிலங்கள்[SE][SS] செழுமை பொங்குகின்றன;[SE][SS] குன்றுகள் அக்களிப்பை[SE][SS] இடைக்கச்சையாய் அணிந்துள்ளன.[SE][QE]
13. [QS][SS] புல்வெளிகள் மந்தைகளை[SE][SS] ஆடையெனக் கொண்டுள்ளன;[SE][SS] பள்ளத்தாக்குகள் தானியங்களால்[SE][SS] தங்களைப் போர்த்திக் கொண்டுள்ளன;[SE][SS] அவற்றில் எங்கும் ஆரவாரம்![SE][SS] எம்மருங்கும் இன்னிசை![SE][PE][QE]

குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 65 / 150
சங்கீதம் 65:94
நன்றிப் புகழ்ப்பா
(பாடகர் தலைவர்க்கு: தாவீதின் புகழ்ப்பாடல்)

1 கடவுளே, சீயோனில் உம்மைப் புகழ்ந்து பாடுவது ஏற்புடையது! உமக்குப் பொருத்தனைகள் செலுத்துவதும் சால்புடையது! 2 மன்றாட்டுக்களைக் கேட்கின்றவரே! மானிடர் யாவரும் உம்மிடம் வருவர். 3 எங்கள் பாவங்களின் பளுவை எங்களால் தாங்கமுடியவில்லை; ஆனால் நீர் எங்கள் குற்றப் பழிகளைப் போக்குகின்றீர். 4 நீர் தேர்ந்தெடுத்து உம்மருகில் வைத்துக்கொள்ளும் மனிதர் பேறு பெற்றோர்; உம் கோவிலின் முற்றங்களில் அவர்கள் உறைந்திடுவர்; உமது இல்லத்தில், உமது திருமிகு கோவிலில் கிடைக்கும் நன்மைகளால் நாங்கள் நிறைவு பெறுவோம். 5 அஞ்சத்தகு செயல்களை நீர் புரிகின்றீர்; எங்கள் மீட்பின் கடவுளே, உமது நீதியின் பொருட்டு எங்கள் மன்றாட்டுக்கு மறுமொழி பகர்கின்றீர்; உலகின் கடையெல்லைவரை வாழ்வோர் அனைவருக்கும் தொலையிலுள்ள தீவுகளில் உள்ளோருக்கும் நம்பிக்கை நீரே! 6 வல்லமையை இடைக்கச்சையாகக் கொண்ட நீர் உமது ஆற்றலால்
மலைகளை உறுதிப்படுத்துகின்றீர்.
7 கடல்களின் இரைச்சலையும் அவற்றின் அலைகளின் ஓசையையும் மக்களினங்களின் அமளியையும் அடக்குகின்றீர்! 8 உலகின் கடையெல்லைவரை வாழ்வோர் உம் அருஞ் செயல்களைக்
கண்டு அஞ்சுவர்;
கிழக்கு முதல் மேற்குவரை உள்ளோரைக் களிகூரச் செய்கின்றீர்!
9 மண்ணுலகைப் பேணி அதன் நீர்வளத்தையும் நிலவளத்தையும் பெருக்கினீர்! கடவுளின் ஆறு கரைபுரண்டோடியது; அது தானியங்களை நிரம்ப விளையச் செய்தது; நீரே அவற்றை இவ்வாறு விளையச் செய்துள்ளீர். 10 அதன் படைசால்களில் தண்ணீர் நிறைந்தோடச் செய்தீர்; அதன் கரையோர நிலங்களைப் பரம்படித்து மென்மழையால் மிருதுவாக்கினீர்; அதன் வளமைக்கு ஆசி வழங்கினீர். 11 ஆண்டு முழுவதும் உமது நலத்தால் முடிசூட்டுகின்றீர்; உம்முடைய வழிகள் எல்லாம் வளம் கொழிக்கின்றன. 12 பாலைநிலத்தில் மேய்ச்சல் நிலங்கள் செழுமை பொங்குகின்றன; குன்றுகள் அக்களிப்பை இடைக்கச்சையாய் அணிந்துள்ளன. 13 புல்வெளிகள் மந்தைகளை ஆடையெனக் கொண்டுள்ளன; பள்ளத்தாக்குகள் தானியங்களால் தங்களைப் போர்த்திக் கொண்டுள்ளன; அவற்றில் எங்கும் ஆரவாரம்! எம்மருங்கும் இன்னிசை!
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 65 / 150
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References