தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பொது மொழிபெயர்ப்பு வெளியீடு
சங்கீதம்
1. {பாதுகாப்புக்காக வேண்டல்[BR](பாடகர் தலைவர்க்கு: தாவீதின் புகழ்ப்பா)} [PS] [QS][SS] கடவுளே! என் விண்ணப்பக்[SE][SS] குரலைக் கேட்டருளும்;[SE][SS] என் எதிரியினால் விளையும்[SE][SS] அச்சத்தினின்று[SE][SS] என் உயிரைக் காத்தருளும்.[SE][QE]
2. [QS][SS] பொல்லாரின் சூழ்ச்சியினின்றும்[SE][SS] தீயோரின் திட்டத்தினின்றும்[SE][SS] என்னை மறைத்துக் காத்திடும்.[SE][QE]
3. [QS][SS] அவர்கள் தங்கள் நாவை வாளைப் போலக்[SE][SS] கூர்மையாக்குகின்றார்கள்;[SE][SS] நஞ்சுள்ள சொற்களை[SE][SS] அம்புபோல் எய்கின்றார்கள்;[SE][QE]
4. [QS][SS] மறைவிடங்களில் இருந்துகொண்டு[SE][SS] மாசற்றோரைக்[SE][SS] காயப்படுத்துகின்றார்கள்;[SE][SS] அச்சமின்றி அவர்களைத்[SE][SS] திடீரெனத் தாக்குகின்றார்கள்;[SE][QE]
5. [QS][SS] தீங்கு இழைப்பதில்[SE][SS] உறுதியாய் இருக்கின்றார்கள்;[SE][SS] ‛நம்மை யார் பார்க்க முடியும்’[SE][SS] என்று சொல்லி மறைவாகக்[SE][SS] கண்ணிகளை வைப்பதற்குச்[SE][SS] சதித்திட்டம் தீட்டுகின்றார்கள்;[SE][QE]
6. [QS][SS] நேர்மையற்ற செயல்களைச் செய்யத்[SE][SS] திட்டமிடுகின்றார்கள்;[SE][SS] ‛எங்கள் திறமையில்[SE][SS] தந்திரமான சூழ்ச்சியை[SE][SS] உருவாக்கியுள்ளோம்’ என்கின்றார்கள்;[SE][SS] மனிதரின் உள்ளமும் உள்நோக்கமும்[SE][SS] மிக ஆழமானவை.[SE][QE]
7. [QS][SS] ஆனால், கடவுள் அவர்கள்மேல்[SE][SS] அம்புகளை எய்ய,[SE][SS] அவர்கள் உடனே காயமுற்று வீழ்வார்கள்.[SE][QE]
8. [QS][SS] தங்களது நாவினாலேயே[SE][SS] அவர்கள் அழிவார்கள்;[SE][SS] அவர்களைப் பார்ப்போர் அனைவரும்[SE][SS] எள்ளி நகைப்பார்கள்.[SE][QE]
9. [QS][SS] அப்பொழுது எல்லா மனிதரும்[SE][SS] அச்சம் கொள்வர்;[SE][SS] கடவுளின் செயல்களை[SE][SS] எடுத்துரைப்பர்;[SE][SS] அவரது அருஞ்செயலைப்பற்றிச் சிந்திப்பர்.[SE][QE]
10. [QS][SS] நேர்மையாளர் ஆண்டவரில் அகமகிழ்வர்;[SE][SS] அவரிடம் அடைக்கலம் புகுவர்;[SE][SS] நேரிய உள்ளத்தோர் அவரைப் போற்றிடுவர்.[SE][PE][QE]

குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 64 / 150
சங்கீதம் 64:136
பாதுகாப்புக்காக வேண்டல்
(பாடகர் தலைவர்க்கு: தாவீதின் புகழ்ப்பா)

1 கடவுளே! என் விண்ணப்பக் குரலைக் கேட்டருளும்; என் எதிரியினால் விளையும் அச்சத்தினின்று என் உயிரைக் காத்தருளும். 2 பொல்லாரின் சூழ்ச்சியினின்றும் தீயோரின் திட்டத்தினின்றும் என்னை மறைத்துக் காத்திடும். 3 அவர்கள் தங்கள் நாவை வாளைப் போலக் கூர்மையாக்குகின்றார்கள்; நஞ்சுள்ள சொற்களை அம்புபோல் எய்கின்றார்கள்; 4 மறைவிடங்களில் இருந்துகொண்டு மாசற்றோரைக் காயப்படுத்துகின்றார்கள்; அச்சமின்றி அவர்களைத் திடீரெனத் தாக்குகின்றார்கள்; 5 தீங்கு இழைப்பதில் உறுதியாய் இருக்கின்றார்கள்; ‛நம்மை யார் பார்க்க முடியும்’ என்று சொல்லி மறைவாகக் கண்ணிகளை வைப்பதற்குச் சதித்திட்டம் தீட்டுகின்றார்கள்; 6 நேர்மையற்ற செயல்களைச் செய்யத் திட்டமிடுகின்றார்கள்; ‛எங்கள் திறமையில் தந்திரமான சூழ்ச்சியை உருவாக்கியுள்ளோம்’ என்கின்றார்கள்; மனிதரின் உள்ளமும் உள்நோக்கமும் மிக ஆழமானவை. 7 ஆனால், கடவுள் அவர்கள்மேல் அம்புகளை எய்ய, அவர்கள் உடனே காயமுற்று வீழ்வார்கள். 8 தங்களது நாவினாலேயே அவர்கள் அழிவார்கள்; அவர்களைப் பார்ப்போர் அனைவரும் எள்ளி நகைப்பார்கள். 9 அப்பொழுது எல்லா மனிதரும் அச்சம் கொள்வர்; கடவுளின் செயல்களை எடுத்துரைப்பர்; அவரது அருஞ்செயலைப்பற்றிச் சிந்திப்பர். 10 நேர்மையாளர் ஆண்டவரில் அகமகிழ்வர்; அவரிடம் அடைக்கலம் புகுவர்; நேரிய உள்ளத்தோர் அவரைப் போற்றிடுவர்.
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 64 / 150
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References