தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பொது மொழிபெயர்ப்பு வெளியீடு
சங்கீதம்
1. {பாதுகாப்புக்காக மன்றாடல்[BR](பாடகர் தலைவர்க்கு: நரம்பிசைக் கருவிகளுடன்; தாவீதுக்கு உரியது)} [PS] [QS][SS] கடவுளே! என் கூக்குரலைக்[SE][SS] கேளும்; என்[SE][SS] விண்ணப்பத்திற்குச் செவிசாயும்.[SE][QE]
2. [QS][SS] பூவுலகின் கடைமுனையினின்று[SE][SS] உம்மைக் கூப்பிடுகின்றேன்;[SE][SS] என் உள்ளம் சோர்வுற்றிருக்கின்றது;[SE][SS] உயரமான குன்றுக்கு [BR] என்னை அழைத்துச் செல்லும்.[SE][QE]
3. [QS][SS] ஏனெனில் நீரே என் புகலிடம்;[SE][SS] எதிரியின்முன் வலிமையான கோட்டை.[SE][QE]
4. [QS][SS] நான் உமது கூடாரத்தில்[SE][SS] எந்நேரமும் தங்கியிருப்பேன்;[SE][SS] உமது இறக்கைகளின் பாதுகாப்பில்[SE][SS] தஞ்சம் புகுவேன். (சேலா)[SE][QE]
5. [QS][SS] ஏனெனில், கடவுளே![SE][SS] நான் செய்த பொருத்தனைகளை[SE][SS] நீர் அறிவீர்;[SE][SS] உமது பெயருக்கு அஞ்சுவோர்க்குரிய[SE][SS] உடைமையை எனக்குத் தந்தீர்.[SE][QE]
6. [QS][SS] அரசரைப் பல்லாண்டு வாழச் செய்யும்;[SE][SS] அவரது ஆயுள்[SE][SS] தலைமுறை தலைமுறையாக நீடிக்கட்டும்![SE][QE]
7. [QS][SS] கடவுள் முன்னிலையில் அவர்[SE][SS] என்றென்றும் வீற்றிருப்பாராக![SE][SS] பேரன்போடும் உண்மையோடும்[SE][SS] அவரைக் காத்தருளும்![SE][QE]
8. [QS][SS] உமது பெயரை என்றென்றும்[SE][SS] புகழ்ந்து பாடுவேன்;[SE][SS] நாள்தோறும் என் பொருத்தனைகளை[SE][SS] நிறைவேற்றுவேன்.[SE][PE][QE]

குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 61 / 150
சங்கீதம் 61:44
பாதுகாப்புக்காக மன்றாடல்
(பாடகர் தலைவர்க்கு: நரம்பிசைக் கருவிகளுடன்; தாவீதுக்கு உரியது)

1 கடவுளே! என் கூக்குரலைக் கேளும்; என் விண்ணப்பத்திற்குச் செவிசாயும். 2 பூவுலகின் கடைமுனையினின்று உம்மைக் கூப்பிடுகின்றேன்; என் உள்ளம் சோர்வுற்றிருக்கின்றது; உயரமான குன்றுக்கு
என்னை அழைத்துச் செல்லும்.
3 ஏனெனில் நீரே என் புகலிடம்; எதிரியின்முன் வலிமையான கோட்டை. 4 நான் உமது கூடாரத்தில் எந்நேரமும் தங்கியிருப்பேன்; உமது இறக்கைகளின் பாதுகாப்பில் தஞ்சம் புகுவேன். (சேலா) 5 ஏனெனில், கடவுளே! நான் செய்த பொருத்தனைகளை நீர் அறிவீர்; உமது பெயருக்கு அஞ்சுவோர்க்குரிய உடைமையை எனக்குத் தந்தீர். 6 அரசரைப் பல்லாண்டு வாழச் செய்யும்; அவரது ஆயுள் தலைமுறை தலைமுறையாக நீடிக்கட்டும்! 7 கடவுள் முன்னிலையில் அவர் என்றென்றும் வீற்றிருப்பாராக! பேரன்போடும் உண்மையோடும் அவரைக் காத்தருளும்! 8 உமது பெயரை என்றென்றும் புகழ்ந்து பாடுவேன்; நாள்தோறும் என் பொருத்தனைகளை நிறைவேற்றுவேன்.
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 61 / 150
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References