தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பொது மொழிபெயர்ப்பு வெளியீடு
சங்கீதம்
1. {இக்கட்டுக் காலத்தில் உதவுமாறு வேண்டல்[BR](பாடகர் தலைவர்க்கு: நரம்பிசைக் கருவிகளுடன்; எட்டாம் கட்டையில்; தாவீதின் புகழ்ப்பா)} [PS] [QS][SS] ஆண்டவரே, என்மீது சினங்கொண்டு[SE][SS] என்னைக் கண்டியாதேயும்;[SE][SS] என் மீது கடுஞ்சீற்றங்கொண்டு[SE][SS] என்னைத் தண்டியாதேயும்.[SE][QE]
2. [QS][SS] ஆண்டவரே, எனக்கு இரங்கும்;[SE][SS] ஏனெனில், நான் தளர்ந்து போனேன்;[SE][SS] ஆண்டவரே, என்னைக் குணமாக்கியருளும்;[SE][SS] ஏனெனில், என் எலும்புகள் [BR] வலுவிழந்து போயின. [* திபா 38:1.[QE] ] [SE][QE]
3. [QS][SS] என் உயிர் ஊசலாடுகின்றது;[SE][SS] ஆண்டவரே, இந்நிலை எத்தனை நாள்?[SE][QE]
4. [QS][SS] ஆண்டவரே, திரும்பும்;[SE][SS] என் உயிரைக் காப்பாற்றும்.[SE][SS] உமது பேரன்பை முன்னிட்டு[SE][SS] என்னை மீட்டருளும்.[SE][QE]
5. [QS][SS] இறந்தபின் உம்மை நினைப்பவர்[SE][SS] எவருமில்லை; பாதாளத்தில்[SE][SS] உம்மைப் போற்றுபவர் யார்?[SE][QE]
6. [QS][SS] பெருமூச்சினால் இளைத்துப் போனேன்;[SE][SS] ஒவ்வோர் இரவும் கண்ணீரில்[SE][SS] என் படுக்கை மிதக்கின்றது.[SE][SS] என் கட்டில் அழுகையால் நனைகின்றது.[SE][QE]
7. [QS][SS] துயரத்தால் என் கண் வீங்கிப்போயிற்று;[SE][SS] என் பகைவர் அனைவரின் காரணமாக[SE][SS] அது மங்கிப்போயிற்று.[SE][QE]
8. [QS][SS] தீங்கிழைப்போரே! நீங்கள் அனைவரும்[SE][SS] என்னை விட்டு அகன்றுபோங்கள்;[SE][SS] ஏனெனில், ஆண்டவர் என்[SE][SS] அழுகுரலுக்குச் செவிசாய்த்து விட்டார்.[SE][QE]
9. [QS][SS] ஆண்டவர் என் விண்ணப்பத்தைக்[SE][SS] கேட்டருளினார்; அவர் என்[SE][SS] வேண்டுதலை ஏற்றுக்கொண்டார்.[SE][QE]
10. [QS][SS] என் எதிரிகள் யாவரும்[SE][SS] வெட்கிப் பெரிதும் கலங்கட்டும்;[SE][SS] அவர்கள் திடீரென[SE][SS] நாணமுற்றுத் திரும்பிச் செல்லட்டும்.[SE][PE]

குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 6 / 150
சங்கீதம் 6:136
இக்கட்டுக் காலத்தில் உதவுமாறு வேண்டல்
(பாடகர் தலைவர்க்கு: நரம்பிசைக் கருவிகளுடன்; எட்டாம் கட்டையில்; தாவீதின் புகழ்ப்பா)

1 ஆண்டவரே, என்மீது சினங்கொண்டு என்னைக் கண்டியாதேயும்; என் மீது கடுஞ்சீற்றங்கொண்டு என்னைத் தண்டியாதேயும். 2 ஆண்டவரே, எனக்கு இரங்கும்; ஏனெனில், நான் தளர்ந்து போனேன்; ஆண்டவரே, என்னைக் குணமாக்கியருளும்; ஏனெனில், என் எலும்புகள்
வலுவிழந்து போயின. [* திபா 38:1.
]
3 என் உயிர் ஊசலாடுகின்றது; ஆண்டவரே, இந்நிலை எத்தனை நாள்? 4 ஆண்டவரே, திரும்பும்; என் உயிரைக் காப்பாற்றும். உமது பேரன்பை முன்னிட்டு என்னை மீட்டருளும். 5 இறந்தபின் உம்மை நினைப்பவர் எவருமில்லை; பாதாளத்தில் உம்மைப் போற்றுபவர் யார்? 6 பெருமூச்சினால் இளைத்துப் போனேன்; ஒவ்வோர் இரவும் கண்ணீரில் என் படுக்கை மிதக்கின்றது. என் கட்டில் அழுகையால் நனைகின்றது. 7 துயரத்தால் என் கண் வீங்கிப்போயிற்று; என் பகைவர் அனைவரின் காரணமாக அது மங்கிப்போயிற்று. 8 தீங்கிழைப்போரே! நீங்கள் அனைவரும் என்னை விட்டு அகன்றுபோங்கள்; ஏனெனில், ஆண்டவர் என் அழுகுரலுக்குச் செவிசாய்த்து விட்டார். 9 ஆண்டவர் என் விண்ணப்பத்தைக் கேட்டருளினார்; அவர் என் வேண்டுதலை ஏற்றுக்கொண்டார். 10 என் எதிரிகள் யாவரும் வெட்கிப் பெரிதும் கலங்கட்டும்; அவர்கள் திடீரென நாணமுற்றுத் திரும்பிச் செல்லட்டும்.
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 6 / 150
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References