1. {பொல்லாரின் தண்டிப்புக்காக வேண்டல்[BR](பாடகர் தலைவர்க்கு: ‘அழிக்காதே’ என்ற மெட்டு; தாவீதின் கழுவாய்ப்பாடல்)} [PS] [QS][SS] ஆட்சியாளரே! நீவிர் வழங்கும் தீர்ப்பு[SE][SS] உண்மையில் நீதியானதா?[SE][SS] மாந்தர்க்கு நேர்மையுடன்[SE][SS] தீர்ப்பு வழங்குகின்றீரா? [* 56 தலைப்பு: 1 சாமு ; 24:3.[QE]. ] [SE][QE]
2. [QS][SS] இல்லை; அநீதியானவற்றைச் செய்வதற்கே[SE][SS] நீங்கள் திட்டமிடுகின்றீர்கள்;[SE][SS] நீங்கள் நாட்டில் நடக்கும் அநீதிக்கு[SE][SS] உடந்தையாய் இருக்கின்றீர்கள்.[SE][QE]
3. [QS][SS] பொல்லார் கருவிலிருந்தே[SE][SS] நெறிதவறிச் செல்கின்றனர்;[SE][SS] பிறப்பிலிருந்தே பொய் பேசித் திரிகின்றனர்.[SE][QE]
4. [QS][SS] அவர்களது நச்சுத்தன்மை[SE][SS] நாகத்தின் நஞ்சு போன்றது;[SE][SS] செவிட்டு விரியன் தன் காதை[SE][SS] அடைத்துக்கொள்வதுபோல, அவர்களும் தங்களைச்[SE][SS] செவிடாக்கிக் கொள்கின்றனர்.[SE][QE]
5. [QS][SS] பாம்பாட்டியின் மகுடியோசை[SE][SS] அவ்விரியனின் காதில் விழாது;[SE][SS] அவன் திறமையுடன் ஊதினாலும்[SE][SS] அதற்குக் கேளாது.[SE][QE]
6. [QS][SS] கடவுளே, அவர்கள் வாயின் பற்களை[SE][SS] நொறுக்கிவிடும்;[SE][SS] ஆண்டவரே, அந்த இளஞ்சிங்கங்களின்[SE][SS] கடைவாய்ப் பற்களை உடைத்துவிடும்.[SE][QE]
7. [QS][SS] காட்டாற்று நீர்போல[SE][SS] அவர்கள் மறைந்தொழியட்டும்;[SE][SS] அவர்கள் தம் வில்லை நாணேற்றியவுடன்[SE][SS] அம்புகள் முறிந்து போகட்டும்![SE][QE]
8. [QS][SS] ஊர்ந்து ஊர்ந்து தேய்ந்து போகும்[SE][SS] நத்தைபோல் ஆகட்டும்;[SE][SS] பிறந்தும் கதிரொளி காணாத[SE][SS] பெண்வயிற்றுப் பிண்டம்போல் ஆகட்டும்.[SE][QE]
9. [QS][SS] முள் நெருப்பினால்[SE][SS] உங்கள் பானை சூடேறுமுன்னே,[SE][SS] பச்சையானதையும்[SE][SS] வெந்துகொண்டிருப்பதையும்[SE][SS] சுழற்காற்றினால் அவர்[SE][SS] அடித்துக்கொண்டு போவார்.[SE][QE]
10. [QS][SS] தீயோர் தண்டிக்கப்படுவதை[SE][SS] நேர்மையாளர் காணும்போது மகிழ்வர்;[SE][SS] அவர்கள் தம் பாதங்களைப்[SE][SS] பொல்லாரின் இரத்தத்தில் கழுவுவர்.[SE][QE]
11. [QS][SS] அப்போது மானிடர்,[SE][SS] ‘உண்மையிலேயே நேர்மையாளருக்குக்[SE][SS] கைம்மாறு உண்டு;[SE][SS] மெய்யாகவே பூவுலகில்[SE][SS] நீதியுடன் ஆளும் கடவுள் ஒருவர்[SE][SS] இருக்கின்றார்’ என்று சொல்வர்.[SE][PE][QE]