தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பொது மொழிபெயர்ப்பு வெளியீடு
சங்கீதம்
1. {உதவிக்காக வேண்டல்[BR](பாடகர் தலைவர்க்கு: ‘அழிக்காதே’ என்ற மெட்டு; சவுலுக்குத் தப்பியோடிக் குகையில் ஒளிந்து கொண்டிருந்தபொழுது, தாவீது பாடிய கழுவாய்ப்பாடல்)} [PS] [QS][SS] கடவுளே! எனக்கு இரங்கும்,[SE][SS] எனக்கு இரங்கும்;[SE][SS] நான் உம்மிடம் தஞ்சம் புகுகின்றேன்;[SE][SS] இடர் நீங்கும்வரை[SE][SS] உம் இறக்கைகளின் நிழலையே[SE][SS] எனக்குப் புகலிடமாகக் கொண்டுள்ளேன்.[SE][QE]
2. [QS][SS] உன்னதரான கடவுளை நோக்கி,[SE][SS] எனக்காக யாவையும் செய்து முடிக்கும்[SE][SS] இறைவனை நோக்கியே[SE][SS] நான் மன்றாடுகின்றேன். [* 56 தலைப்பு: 1 சாமு ; 24:3.[QE] ] [SE][QE]
3. [QS][SS] வானகத்தினின்று அவர்[SE][SS] எனக்கு உதவி அனுப்பி[SE][SS] என்னைக் காத்தருள்வார்;[SE][SS] என்னை நசுக்குவோரை[SE][SS] இழிவுப்படுத்துவார். (சேலா)[SE][SS] கடவுள் தம் பேரன்பையும்[SE][SS] வாக்குப் பிறழாமையையும்[SE][SS] வெளிப்படுத்துவார்.[SE][QE]
4. [QS][SS] மனிதரை வெறியோடு விழுங்கும்[SE][SS] சிங்கங்கள் போன்றவரிடையே[SE][SS] நான் கிடக்கின்றேன்;[SE][SS] அவர்களின் பற்கள்[SE][SS] ஈட்டியும் அம்பும் போன்றவை;[SE][SS] அவர்களின் நா[SE][SS] கூர்மையான வாள் போன்றது.[SE][QE]
5. [QS][SS] கடவுளே! வானங்களுக்கு மேலாக[SE][SS] நீர் உயர்த்தப்பெறுவீராக![SE][SS] பாரெங்கும் உமது மாட்சி விளங்குவதாக![SE][QE]
6. [QS][SS] நான் நடக்கும் வழியில்[SE][SS] எனக்குக் கண்ணி வைக்கின்றனர்;[SE][SS] நான் மனம் ஒடிந்து போனேன்;[SE][SS] என் பாதையில் குழி வெட்டினர்;[SE][SS] அவர்களே அதில் விழுந்தனர். (சேலா)[SE][QE]
7. [QS][SS] என் உள்ளம் உறுதியாயிருக்கின்றது;[SE][SS] கடவுளே! என் உள்ளம்[SE][SS] உறுதியாயிருக்கின்றது;[SE][SS] நான் பாடுவேன்;[SE][SS] உம்மைப் புகழ்ந்து பாடுவேன்.[SE][QE]
8. [QS][SS] என் நெஞ்சே, விழித்தெழு![SE][SS] வீணையே, யாழே, விழித்தெழுங்கள்;[SE][SS] வைகறையை நான்[SE][SS] விழித்தெழச் செய்வேன்.[SE][QE]
9. [QS][SS] என் தலைவரே![SE][SS] மக்களினங்களிடையே[SE][SS] உமக்கு நன்றி செலுத்துவேன்;[SE][SS] எல்லா இனத்தாரிடையேயும்[SE][SS] உம்மைப் புகழ்ந்து பாடுவேன்.[SE][QE]
10. [QS][SS] ஆண்டவரே! உமது பேரன்பு[SE][SS] வானளவு உயர்ந்துள்ளது![SE][SS] உமது வாக்குப்பிறழாமை[SE][SS] முகில்களைத் தொடுகின்றது![SE][QE]
11. [QS][SS] கடவுளே! வானங்களுக்கு மேலாக[SE][SS] நீர் உயர்வு பெறுவீராக;[SE][SS] பாரெங்கும் உமது மாட்சி விளங்குவதாக.[SE][PE][QE]

குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 57 / 150
சங்கீதம் 57:136
உதவிக்காக வேண்டல்
(பாடகர் தலைவர்க்கு: ‘அழிக்காதே’ என்ற மெட்டு; சவுலுக்குத் தப்பியோடிக் குகையில் ஒளிந்து கொண்டிருந்தபொழுது, தாவீது பாடிய கழுவாய்ப்பாடல்)

1 கடவுளே! எனக்கு இரங்கும், எனக்கு இரங்கும்; நான் உம்மிடம் தஞ்சம் புகுகின்றேன்; இடர் நீங்கும்வரை உம் இறக்கைகளின் நிழலையே எனக்குப் புகலிடமாகக் கொண்டுள்ளேன். 2 உன்னதரான கடவுளை நோக்கி, எனக்காக யாவையும் செய்து முடிக்கும் இறைவனை நோக்கியே நான் மன்றாடுகின்றேன். [* 56 தலைப்பு: 1 சாமு ; 24:3. ] 3 வானகத்தினின்று அவர் எனக்கு உதவி அனுப்பி என்னைக் காத்தருள்வார்; என்னை நசுக்குவோரை இழிவுப்படுத்துவார். (சேலா) கடவுள் தம் பேரன்பையும் வாக்குப் பிறழாமையையும் வெளிப்படுத்துவார். 4 மனிதரை வெறியோடு விழுங்கும் சிங்கங்கள் போன்றவரிடையே நான் கிடக்கின்றேன்; அவர்களின் பற்கள் ஈட்டியும் அம்பும் போன்றவை; அவர்களின் நா கூர்மையான வாள் போன்றது. 5 கடவுளே! வானங்களுக்கு மேலாக நீர் உயர்த்தப்பெறுவீராக! பாரெங்கும் உமது மாட்சி விளங்குவதாக! 6 நான் நடக்கும் வழியில் எனக்குக் கண்ணி வைக்கின்றனர்; நான் மனம் ஒடிந்து போனேன்; என் பாதையில் குழி வெட்டினர்; அவர்களே அதில் விழுந்தனர். (சேலா) 7 என் உள்ளம் உறுதியாயிருக்கின்றது; கடவுளே! என் உள்ளம் உறுதியாயிருக்கின்றது; நான் பாடுவேன்; உம்மைப் புகழ்ந்து பாடுவேன். 8 என் நெஞ்சே, விழித்தெழு! வீணையே, யாழே, விழித்தெழுங்கள்; வைகறையை நான் விழித்தெழச் செய்வேன். 9 என் தலைவரே! மக்களினங்களிடையே உமக்கு நன்றி செலுத்துவேன்; எல்லா இனத்தாரிடையேயும் உம்மைப் புகழ்ந்து பாடுவேன். 10 ஆண்டவரே! உமது பேரன்பு வானளவு உயர்ந்துள்ளது! உமது வாக்குப்பிறழாமை முகில்களைத் தொடுகின்றது! 11 கடவுளே! வானங்களுக்கு மேலாக நீர் உயர்வு பெறுவீராக; பாரெங்கும் உமது மாட்சி விளங்குவதாக.
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 57 / 150
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References