1. {பற்றுறுதியும் நம்பிக்கையும்[BR](பாடகர் தலைவர்க்கு: ‘தொலையில் வாழும் மௌன மாடப்புறா’ என்ற மெட்டு; பெலிஸ்தியர் தாவீதைக் காத்து என்னுமிடத்தில் பிடித்த வேளை அவர் பாடிய கழுவாய்ப்பாடல்)} [PS] [QS][SS] கடவுளே, எனக்கு இரங்கியருளும்;[SE][SS] ஏனெனில், மனிதர் என்னை[SE][SS] நசுக்குகின்றனர்;[SE][SS] அவர்கள் என்னுடன் நாள்தோறும்[SE][SS] சண்டையிட்டுத் துன்புறுத்துகின்றனர்.[SE][QE]
2. [QS][SS] என் பகைவர் நாள்தோறும்[SE][SS] கொடுமைப்படுத்துகின்றனர்;[SE][SS] மிகப் பலர் என்னை ஆணவத்துடன்[SE][SS] எதிர்த்துப் போரிடுவோர். [* 56 தலைப்பு: 1 சாமு ; 24:3.[QE] ] [SE][QE]
3. [QS][SS] அச்சம் என்னை ஆட்கொள்ளும் நாளில்,[SE][SS] உம்மையே நான் நம்பியிருப்பேன்.[SE][QE]
4. [QS][SS] கடவுளின் வாக்கை நான் புகழ்கின்றேன்;[SE][SS] கடவுளையே நம்பியிருக்கின்றேன்;[SE][SS] எதற்கும் அஞ்சேன்; அற்ப மனிதர்[SE][SS] எனக்கென்ன செய்ய முடியும்?[SE][QE]
5. [QS][SS] என் எதிரிகள் எந்நேரமும்[SE][SS] என் சொற்களைப் புரட்டுகின்றனர்;[SE][SS] அவர்கள் திட்டங்கள் எல்லாம்[SE][SS] என்னைத் துன்புறுத்தவே.[SE][QE]
6. [QS][SS] அவர்கள் ஒன்றுகூடிப்[SE][SS] பதுங்கி இருக்கின்றனர்;[SE][SS] என் உயிரைப் போக்குவதற்காக[SE][SS] என் காலடிச் சுவடுகளைக்[SE][SS] கவனித்துக்கொண்டே இருக்கின்றனர்.[SE][QE]
7. [QS][SS] அவர்கள் தீமைகளைச் செய்துவிட்டுத்[SE][SS] தப்பமுடியுமோ?[SE][SS] கடவுளே, சினம் கொண்டெழுந்து[SE][SS] இந்த மக்களினங்களைக் கீழே வீழ்த்தும்.[SE][QE]
8. [QS][SS] என் துன்பங்களின் எண்ணிக்கையை[SE][SS] நீர் அறிவீர்;[SE][SS] உமது தோற்பையில் என் கண்ணீரைச்[SE][SS] சேர்த்து வைத்துள்ளீர்;[SE][SS] இவையெல்லாம் உம் குறிப்பேட்டில்[SE][SS] உள்ளன அல்லவா?[SE][QE]
9. [QS][SS] நான் உம்மை நோக்கி மன்றாடும் நாளில்[SE][SS] என் எதிரிகள் புறமுதுகிட்டு ஓடுவர்;[SE][SS] அப்போது, கடவுள்[SE][SS] என் பக்கம் இருக்கின்றார் என்பதை[SE][SS] நான் உறுதியாய் அறிவேன்.[SE][QE]
10. [QS][SS] கடவுளின் வாக்கை[SE][SS] நான் புகழ்கின்றேன்;[SE][SS] ஆண்டவனின் வாக்கை[SE][SS] நான் புகழ்கின்றேன்.[SE][QE]
11. [QS][SS] கடவுளையே நம்பியிருக்கின்றேன்;[SE][SS] எதற்கும் அஞ்சேன்;[SE][SS] மானிடர் எனக்கெதிராய்[SE][SS] என்ன செய்ய முடியும்?[SE][QE]
12. [QS][SS] கடவுளே, நான் உமக்குச் செய்த[SE][SS] பொருத்தனைகளை மறக்கவில்லை;[SE][SS] உமக்கு நன்றிப்பலி செலுத்துவேன்.[SE][QE]
13. [QS][SS] ஏனெனில், சாவினின்று[SE][SS] என் உயிரை நீர் மீட்டருளினீர்;[SE][SS] வாழ்வோரின் ஒளியில்,[SE][SS] கடவுளின் முன்னிலையில்[SE][SS] நான் நடக்கும் பொருட்டு[SE][SS] என் அடிகள் சறுக்காதபடி[SE][SS] காத்தீர் அன்றோ![SE][PE]