தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
சங்கீதம்
1. கடவுளே! என் மன்றாட்டுக்குச் செவி சாய்த்தருளும்; நான் முறையிடும் வேளையில் உம்மை மறைத்துக் கொள்ளாதேயும்.
2. என் விண்ணப்பத்தைக் கேட்டு மறுமொழி அருளும்; என் கவலைகள் என் மன அமைதியைக் குலைத்துவிட்டன.
3. என் எதிரியின் கூச்சலாலும், பொல்லாரின் ஒடுக்குதலாலும் நடுங்குகின்றேன்; ஏனெனில், அவர்கள் எனக்கு இடையூறு பல செய்கின்றனர்; சினமுற்று என்னைப் பகைக்கின்றனர்.
4. கடுந்துயரம் என் உள்ளத்தைப் பிளக்கின்றது; சாவின் திகில் என்னைக் கவ்விக்கொண்டது.
5. அச்சமும் நடுக்கமும் என்னை ஆட்கொண்டன; திகில் என்னைக் கவ்விக்கொண்டது.
6. நான் சொல்கின்றேன்; 'புறாவுக்கு உள்ளது போன்ற சிறகுகள் எனக்கு யார் அளிப்பார்? நான் பறந்து சென்று இளைப்பாறுவேனே!
7. இதோ! நெடுந்தொலை சென்று, பாலை நிலத்தில் தஞ்சம் புகுந்திருப்பேனே! (சேலா)
8. பெருங்காற்றினின்றும் புயலினின்றும் தப்பிக்கப் புகலிடம் தேட விரைந்திருப்பேனே!
9. என் தலைவரே! அவர்களின் திட்டங்களைக் குலைத்துவிடும்; அவர்களது பேச்சில் குழப்பத்தை உண்டாக்கும்; ஏனெனில், நகரில் வன்முறையையும் கலகத்தையும் காண்கின்றேன்'.
10. இரவும் பகலும் அவர்கள் அதன் மதில்கள் மேல் ஏறி அதைச் சுற்றி வருகின்றனர்; கேடும் கொடுமையும் அதில் நிறைந்திருக்கின்றன.
11. அதன் நடுவே இருப்பது அழிவு; அதன் தெருக்களில் பிரியாதிருப்பன கொடுமையும் வஞ்சகமுமே!
12. என்னை இழித்துரைக்கின்றவன் என் எதிரியல்ல; அப்படியிருந்தால் பொறுத்துக் கொள்வேன்; எனக்கெதிராய்த் தற்பெருமை கொள்பவன் எனக்குப் பகைவன் அல்ல; அப்படியிருந்தால், அவனிடமிருந்து என்னை மறைத்துக் கொள்வேன்.
13. ஆனால், அவன் வேறு யாரும் அல்ல; என் தோழனாகிய நீயே; என் நண்பனும் என்னோடு நெருங்கிப் பழகினவனுமாகிய நீதான்.
14. நாம் ஒன்று சேர்ந்து உரையாடினோம்; கடவுளின் இல்லத்தில் பெருங்கூட்டத்தினிடையே நடமாடினோம்;
15. என் எதிரிகளுக்குத் திடீரெனச் சாவு வரட்டும்; அவர்கள் உயிரோடு பாதாளத்தில் இறங்கட்டும்; ஏனெனில் அவர்கள் தங்குமிடத்தில் அவர்கள் நடுவிலேயே தீமை புகுந்து விட்டது.
16. நான் கடவுளை நோக்கி மன்றாடுவேன்; ஆண்டவரும் என்னை மீட்டருள்வார்.
17. காலை, நண்பகல், மாலை வேளைகளில் நான் முறையிட்டுப் புலம்புகின்றேன்; அவர் என் குரலைக் கேட்டருள்வார்.
18. அணிவகுத்து என்னை எதிர்த்து வந்தோர் மிகப் பலர்; என்னோடு போரிட்டோர் கையினின்று அவர் என்னை விடுவித்துப் பாதுகாத்தார்.
19. தொன்றுதொட்டு அரியணையில் வீற்றிருக்கும் கடவுள் எனக்குச் செவிசாய்ப்பார்; அவர்களைத் தாழ்த்திவிடுவார்; (சேலா) ஏனெனில், அவர்கள் தம் நெறிமுறையை மாற்றிக் கொள்ளவில்லை; கடவுளுக்கு அஞ்சுவதும் இல்லை.
20. தன்னோடு நட்புறவில் இருந்தவர்களை எதிர்த்து அந்த நண்பன் தன் கையை ஓங்கினான்; தன் உடன்படிக்கையையும் மீறினான்.
21. அவன் பேச்சு வெண்ணெயிலும் மிருதுவானது; அவன் உள்ளத்திலோ போர்வெறி; அவன் சொற்கள் எண்ணெயிலும் மென்மையானவை; அவையோ உருவிய வாள்கள்.
22. ஆண்டவர் மேல் உன் கவலையைப் போட்டுவிடு; அவர் உனக்கு ஆதரவளிப்பார்; அவர் நேர்மையாளரை ஒருபோதும் வீழ்ச்சியுற விடமாட்டார்.
23. கடவுளே, நீர் அவர்களைப் படுகுழியில் விழச்செய்யும்; கொலைவெறியரும் வஞ்சகரும் தம் ஆயுள் காலத்தில் பாதிகூடத் தாண்டமாட்டார்; ஆனால், நான் உம்மையே நம்பியிருக்கின்றேன்.

குறிப்பேடுகள்

No Verse Added

Total 150 Chapters, Current Chapter 55 of Total Chapters 150
சங்கீதம் 55:4

×

Alert

×

tamil Letters Keypad References