தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பொது மொழிபெயர்ப்பு வெளியீடு
சங்கீதம்
1. {எதிரியிடமிருந்து காக்க வேண்டுதல்[BR](பாடகர் தலைவர்க்கு: நரம்பிசைக் கருவிகளுடன்; தாவீது தங்களிடம் ஒளிந்து கொண்டிருப்பதாகச் சிப்பியர் சவுலிடம் தெரிவித்தபோது, தாவீது பாடிய அறப்பாடல்)} [PS] [QS][SS] கடவுளே, உமது பெயரின்[SE][SS] வல்லமையால்[SE][SS] என்னைக் காப்பாற்றும்;[SE][SS] உமது ஆற்றலினால் எனது[SE][SS] நேர்மையை நிலைநாட்டும்.[SE][QE]
2. [QS][SS] கடவுளே, என் விண்ணப்பத்தைக்[SE][SS] கேட்டருளும்;[SE][SS] என் வாயின் சொற்களுக்குச்[SE][SS] செவிகொடுத்தருளும்.[SE][QE]
3. [QS][SS] ஏனெனில், செருக்குற்றோர்[SE][SS] எனக்கு எதிராய் எழுந்துள்ளனர்;[SE][SS] கொடியவர் என் உயிரைப்[SE][SS] பறிக்கப் பார்க்கின்றனர்;[SE][SS] அவர்கள் கடவுளை[SE][SS] அறவே நினைப்பதில்லை. (சேலா)[SE][QE]
4. [QS][SS] இதோ! கடவுள் எனக்குத்[SE][SS] துணைவராய் இருக்கின்றார்;[SE][SS] என் தலைவர் என் வாழ்வுக்கு[SE][SS] ஆதரவாய் உள்ளோருடன் இருக்கின்றார்;[SE][QE]
5. [QS][SS] என் எதிரிகள் எனக்குச் செய்ய விரும்பும்[SE][SS] தீமையை அவர்கள் மேலேயே அவர் [BR] திருப்பிவிடுவாராக![SE][SS] ‛உம் வாக்குப் பிறழாமைக்கு ஏற்ப[SE][SS] அவர்களை அழித்தொழியும்![SE][QE]
6. [QS][SS] தன்னார்வத்தோடு உமக்குப்[SE][SS] பலி செலுத்துவேன்;[SE][SS] ஆண்டவரே, உமது பெயருக்கு[SE][SS] நன்றி செலுத்துவேன்; இதுவே நன்று.’[SE][QE]
7. [QS][SS] ஏனெனில், அவர் என்னை[SE][SS] எல்லா இன்னல்களினின்றும்[SE][SS] விடுவித்துள்ளார்;[SE][SS] என் எதிரிகளின் வீழ்ச்சியை நான்[SE][SS] கண்ணாரக் கண்டுள்ளேன்.[SE][PE]
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 54 / 150
எதிரியிடமிருந்து காக்க வேண்டுதல்
(பாடகர் தலைவர்க்கு: நரம்பிசைக் கருவிகளுடன்; தாவீது தங்களிடம் ஒளிந்து கொண்டிருப்பதாகச் சிப்பியர் சவுலிடம் தெரிவித்தபோது, தாவீது பாடிய அறப்பாடல்)

1 கடவுளே, உமது பெயரின் வல்லமையால் என்னைக் காப்பாற்றும்; உமது ஆற்றலினால் எனது நேர்மையை நிலைநாட்டும். 2 கடவுளே, என் விண்ணப்பத்தைக் கேட்டருளும்; என் வாயின் சொற்களுக்குச் செவிகொடுத்தருளும். 3 ஏனெனில், செருக்குற்றோர் எனக்கு எதிராய் எழுந்துள்ளனர்; கொடியவர் என் உயிரைப் பறிக்கப் பார்க்கின்றனர்; அவர்கள் கடவுளை அறவே நினைப்பதில்லை. (சேலா) 4 இதோ! கடவுள் எனக்குத் துணைவராய் இருக்கின்றார்; என் தலைவர் என் வாழ்வுக்கு ஆதரவாய் உள்ளோருடன் இருக்கின்றார்; 5 என் எதிரிகள் எனக்குச் செய்ய விரும்பும் தீமையை அவர்கள் மேலேயே அவர்
திருப்பிவிடுவாராக!
‛உம் வாக்குப் பிறழாமைக்கு ஏற்ப அவர்களை அழித்தொழியும்!
6 தன்னார்வத்தோடு உமக்குப் பலி செலுத்துவேன்; ஆண்டவரே, உமது பெயருக்கு நன்றி செலுத்துவேன்; இதுவே நன்று.’ 7 ஏனெனில், அவர் என்னை எல்லா இன்னல்களினின்றும் விடுவித்துள்ளார்; என் எதிரிகளின் வீழ்ச்சியை நான் கண்ணாரக் கண்டுள்ளேன்.
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 54 / 150
×

Alert

×

Tamil Letters Keypad References