தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பொது மொழிபெயர்ப்பு வெளியீடு
சங்கீதம்
1. {பாவ மன்னிப்புக்காக மன்றாடல்[BR](பாடகர் தலைவர்க்கு: தாவீதின் புகழ்ப்பா. தாவீது பத்சேபாவிடம் முறைதவறி நடந்தபின் இறைவாக்கினர் நாத்தான் அவரிடம் வந்தபோது அவர் பாடியது)} [PS] [QS][SS] கடவுளே! உமது பேரன்புகேற்ப[SE][SS] எனக்கு இரங்கும்;[SE][SS] உமது அளவற்ற இரக்கத்திற்கேற்ப[SE][SS] என் குற்றங்களைத் துடைத்தருளும்.[SE][QE]
2. [QS][SS] என் தீவினை முற்றிலும் நீங்கும்படி[SE][SS] என்னைக் கழுவியருளும்;[SE][SS] என் பாவம் அற்றுப்போகும்படி[SE][SS] என்னைத் தூய்மைப்படுத்தியருளும்; [* 51 தலைப்பு: 2 சாமு ] [SE][QE]
3. [QS][SS] ஏனெனில், என் குற்றங்களை[SE][SS] நான் உணர்கின்றேன்;[SE][SS] என் பாவம் எப்போதும்[SE][SS] என் மனக்கண்முன் நிற்கின்றது. [* 51 தலைப்பு: 2 சாமு ] [SE][QE]
4. [QS][SS] உமக்கு எதிராக நான் பாவம் செய்தேன்;[SE][SS] உம் பார்வையில் தீயது செய்தேன்;[SE][SS] எனவே, உம் தீர்ப்பினால்[SE][SS] உம் நீதியை வெளிப்படுத்தியுள்ளீர்;[SE][SS] உம் தண்டனைத் தீர்ப்பில்[SE][SS] நீர் மாசற்றவராய் விளங்குகின்றீர். [* 51 தலைப்பு: 2 சாமு ] [SE][QE]
5. [QS][SS] இதோ! தீவினையோடு[SE][SS] என் வாழ்வைத் தொடங்கினேன்;[SE][SS] பாவத்தோடே என் அன்னை[SE][SS] என்னைக் கருத்தாங்கினாள். [* 51 தலைப்பு: 2 சாமு ; உரோ 3:4.[QE] ] [SE][QE]
6. [QS][SS] இதோ! நீர் விரும்புவது[SE][SS] உள்ளத்து உண்மையையே;[SE][SS] மெய்ஞானத்தால் என் மனத்தை நிரப்பும். [* 51 தலைப்பு: 2 சாமு ] [SE][QE]
7. [QS][SS] ஈசோப்பினால் என்னைக் கழுவியருளும்;[SE][SS] நான் தூய்மையாவேன்.[SE][SS] என்னைக் கழுவியருளும்;[SE][SS] உறைபனியிலும் வெண்மையாவேன். [* 51 தலைப்பு: 2 சாமு ] [SE][QE]
8. [QS][SS] மகிழ்வொலியும் களிப்போசையும்[SE][SS] நான் கேட்கும்படி செய்யும்;[SE][SS] நீர் நொறுக்கிய என் எலும்புகள்[SE][SS] களிகூர்வனவாக! [* 51 தலைப்பு: 2 சாமு ] [SE][QE]
9. [QS][SS] என் பாவங்களைப் பாராதபடி[SE][SS] உம்முகத்தை மறைத்துக்கொள்ளும்;[SE][SS] என் பாவக்கறைகளை எல்லாம்[SE][SS] துடைத்தருளும். [* 51 தலைப்பு: 2 சாமு ] [SE][QE]
10. [QS][SS] கடவுளே! தூயதோர் உள்ளத்தை[SE][SS] என்னுள்ளே படைத்தருளும்;[SE][SS] உறுதிதரும் ஆவியை,[SE][SS] புதுப்பிக்கும் ஆவியை,[SE][SS] என்னுள்ளே உருவாக்கியருளும்.[SE][QE]
11. [QS][SS] உமது முன்னிலையிலிருந்து[SE][SS] என்னைத் தள்ளிவிடாதேயும்;[SE][SS] உமது தூய ஆவியை[SE][SS] என்னிடமிருந்து எடுத்துவிடாதேயும்.[SE][QE]
12. [QS][SS] உம் மீட்பின் மகிழ்ச்சியை[SE][SS] மீண்டும் எனக்கு அளித்தருளும்;[SE][SS] தன்னார்வ மனம் தந்து[SE][SS] என்னைத் தாங்கியருளும்.[SE][QE]
13. [QS][SS] அப்பொழுது, குற்றம் செய்தோர்க்கு[SE][SS] உம் வழிகளைக் கற்பிப்பேன்;[SE][SS] பாவிகள் உம்மை நோக்கித் திரும்புவர்.[SE][QE]
14. [QS][SS] கடவுளே! எனது மீட்பின் கடவுளே![SE][SS] இரத்தப் பழியினின்று[SE][SS] என்னை விடுவித்தருளும்;[SE][SS] அப்பொழுது, என் நா[SE][SS] உமது நீதியை முன்னிட்டுப் பாடும்.[SE][QE]
15. [QS][SS] என் தலைவரே![SE][SS] என் இதழ்களைத் திறந்தருளும்;[SE][SS] அப்பொழுது, என் வாய்[SE][SS] உமக்குப் புகழ் சாற்றிடும்.[SE][QE]
16. [QS][SS] ஏனெனில், பலியினால்[SE][SS] உம்மை மகிழ்விக்க முடியாது;[SE][SS] நான் எரிபலி செலுத்தினாலும்[SE][SS] நீர் அதில் நாட்டங்கொள்வதில்லை.[SE][QE]
17. [QS][SS] கடவுளுக்கேற்ற பலி[SE][SS] நொறுங்கிய நெஞ்சமே;[SE][SS] கடவுளே! நொறுங்கிய, குற்றமுணர்ந்த[SE][SS] உளத்தை நீர் அவமதிப்பதில்லை.[SE][QE]
18. [QS][SS] சீயோனுக்கு இன்முகம் காட்டி[SE][SS] நன்மை செய்யும்;[SE][SS] எருசலேமின் மதில்களை[SE][SS] மீண்டும் கட்டுவீராக![SE][QE]
19. [QS][SS] அப்பொழுது, எரிபலி, முழு எரிபலியெனும்[SE][SS] முறையான பலிகளை விரும்புவீர்;[SE][SS] மேலும், இளங்காளைகள் உமது பீடத்தில்[SE][SS] பலியாகச் செலுத்தப்படும்.[SE][PE]

குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 51 / 150
சங்கீதம் 51:77
பாவ மன்னிப்புக்காக மன்றாடல்
(பாடகர் தலைவர்க்கு: தாவீதின் புகழ்ப்பா. தாவீது பத்சேபாவிடம் முறைதவறி நடந்தபின் இறைவாக்கினர் நாத்தான் அவரிடம் வந்தபோது அவர் பாடியது)

1 கடவுளே! உமது பேரன்புகேற்ப எனக்கு இரங்கும்; உமது அளவற்ற இரக்கத்திற்கேற்ப என் குற்றங்களைத் துடைத்தருளும். 2 என் தீவினை முற்றிலும் நீங்கும்படி என்னைக் கழுவியருளும்; என் பாவம் அற்றுப்போகும்படி என்னைத் தூய்மைப்படுத்தியருளும்; * 51 தலைப்பு: 2 சாமு 3 ஏனெனில், என் குற்றங்களை நான் உணர்கின்றேன்; என் பாவம் எப்போதும் என் மனக்கண்முன் நிற்கின்றது. * 51 தலைப்பு: 2 சாமு 4 உமக்கு எதிராக நான் பாவம் செய்தேன்; உம் பார்வையில் தீயது செய்தேன்; எனவே, உம் தீர்ப்பினால் உம் நீதியை வெளிப்படுத்தியுள்ளீர்; உம் தண்டனைத் தீர்ப்பில் நீர் மாசற்றவராய் விளங்குகின்றீர். * 51 தலைப்பு: 2 சாமு 5 இதோ! தீவினையோடு என் வாழ்வைத் தொடங்கினேன்; பாவத்தோடே என் அன்னை என்னைக் கருத்தாங்கினாள். [* 51 தலைப்பு: 2 சாமு ; உரோ 3:4. ] 6 இதோ! நீர் விரும்புவது உள்ளத்து உண்மையையே; மெய்ஞானத்தால் என் மனத்தை நிரப்பும். * 51 தலைப்பு: 2 சாமு 7 ஈசோப்பினால் என்னைக் கழுவியருளும்; நான் தூய்மையாவேன். என்னைக் கழுவியருளும்; உறைபனியிலும் வெண்மையாவேன். * 51 தலைப்பு: 2 சாமு 8 மகிழ்வொலியும் களிப்போசையும் நான் கேட்கும்படி செய்யும்; நீர் நொறுக்கிய என் எலும்புகள் களிகூர்வனவாக! * 51 தலைப்பு: 2 சாமு 9 என் பாவங்களைப் பாராதபடி உம்முகத்தை மறைத்துக்கொள்ளும்; என் பாவக்கறைகளை எல்லாம் துடைத்தருளும். * 51 தலைப்பு: 2 சாமு 10 கடவுளே! தூயதோர் உள்ளத்தை என்னுள்ளே படைத்தருளும்; உறுதிதரும் ஆவியை, புதுப்பிக்கும் ஆவியை, என்னுள்ளே உருவாக்கியருளும். 11 உமது முன்னிலையிலிருந்து என்னைத் தள்ளிவிடாதேயும்; உமது தூய ஆவியை என்னிடமிருந்து எடுத்துவிடாதேயும். 12 உம் மீட்பின் மகிழ்ச்சியை மீண்டும் எனக்கு அளித்தருளும்; தன்னார்வ மனம் தந்து என்னைத் தாங்கியருளும். 13 அப்பொழுது, குற்றம் செய்தோர்க்கு உம் வழிகளைக் கற்பிப்பேன்; பாவிகள் உம்மை நோக்கித் திரும்புவர். 14 கடவுளே! எனது மீட்பின் கடவுளே! இரத்தப் பழியினின்று என்னை விடுவித்தருளும்; அப்பொழுது, என் நா உமது நீதியை முன்னிட்டுப் பாடும். 15 என் தலைவரே! என் இதழ்களைத் திறந்தருளும்; அப்பொழுது, என் வாய் உமக்குப் புகழ் சாற்றிடும். 16 ஏனெனில், பலியினால் உம்மை மகிழ்விக்க முடியாது; நான் எரிபலி செலுத்தினாலும் நீர் அதில் நாட்டங்கொள்வதில்லை. 17 கடவுளுக்கேற்ற பலி நொறுங்கிய நெஞ்சமே; கடவுளே! நொறுங்கிய, குற்றமுணர்ந்த உளத்தை நீர் அவமதிப்பதில்லை. 18 சீயோனுக்கு இன்முகம் காட்டி நன்மை செய்யும்; எருசலேமின் மதில்களை மீண்டும் கட்டுவீராக! 19 அப்பொழுது, எரிபலி, முழு எரிபலியெனும் முறையான பலிகளை விரும்புவீர்; மேலும், இளங்காளைகள் உமது பீடத்தில் பலியாகச் செலுத்தப்படும்.
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 51 / 150
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References