தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பொது மொழிபெயர்ப்பு வெளியீடு
சங்கீதம்
1. {உண்மை வழிபாடு[BR](ஆசாபின் புகழ்ப்பா)} [PS] [QS][SS] தெய்வங்களுக்கெல்லாம்[SE][SS] இறைவனாம்[SE][SS] ஆண்டவர் பேசினார்;[SE][SS] கதிரவன் எழும் முனையினின்று[SE][SS] மறையும் முனைவரை பரந்துள்ள[SE][SS] உலகைத் தீர்ப்புப் பெற அழைத்தார்.[SE][QE]
2. [QS][SS] எழிலின் நிறைவாம் சீயோனின்று,[SE][SS] ஒளிவீசி மிளிர்கின்றார் கடவுள்.[SE][QE]
3. [QS][SS] நம் கடவுள் வருகின்றார்;[SE][SS] மௌனமாய் இருக்கமாட்டார்;[SE][SS] அவருக்கு முன்னே,[SE][SS] சுட்டெரிக்கும் தழல் நெருப்பு![SE][SS] அவரைச் சுற்றிலும்,[SE][SS] கடுமையான புயற்காற்று![SE][QE]
4. [QS][SS] உயர் வானங்களையும் பூவுலகையும்[SE][SS] அவர் அழைத்து,[SE][SS] தம் மக்களுக்குத் தீர்ப்பு வழங்குகின்றார்.[SE][QE]
5. [QS][SS] ‛பலியிட்டு என்னோடு[SE][SS] உடன்படிக்கை செய்துகொண்ட[SE][SS] என் அடியார்களை[SE][SS] என்முன் ஒன்று கூட்டுங்கள்.’[SE][QE]
6. [QS][SS] வான்வெளி அவரது நீதியை[SE][SS] எடுத்தியம்பும்;[SE][SS] ஏனெனில், கடவுள்தாமே[SE][SS] நீதிபதியாய் வருகின்றார்! (சேலா)[SE][QE]
7. [QS][SS] என் மக்களே, கேளுங்கள்;[SE][SS] நான் பேசுகின்றேன்;[SE][SS] இஸ்ரயேலே! உனக்கு எதிராய்ச்[SE][SS] சான்றுகூறப் போகின்றேன்;[SE][SS] கடவுளாகிய நானே உன் இறைவன்;[SE][QE]
8. [QS][SS] நீங்கள் கொண்டுவரும்[SE][SS] பலிகளை முன்னிட்டு[SE][SS] நான் உங்களைக் கண்டிக்கவில்லை;[SE][SS] உங்கள் எரிபலிகள் எப்போதும்[SE][SS] என் முன்னிலையில் உள்ளன.[SE][QE]
9. [QS][SS] உங்கள் வீட்டின் காளைகளையோ,[SE][SS] உங்கள் தொழுவத்தின்[SE][SS] ஆட்டுக்கிடாய்களையோ,[SE][SS] நான் ஏற்றுக்கொள்வதில்லை.[SE][QE]
10. [QS][SS] ஏனெனில், காட்டு விலங்குகளெல்லாம்[SE][SS] என் உடைமைகள்;[SE][SS] ஓராயிரம் குன்றுகளில் மேயும்[SE][SS] கால்நடைகளும் என்னுடையவை.[SE][QE]
11. [QS][SS] குன்றத்துப் பறவை அனைத்தையும்[SE][SS] நான் அறிவேன்;[SE][SS] சமவெளியில் நடமாடும் யாவும்[SE][SS] என்னுடையவை.[SE][QE]
12. [QS][SS] எனக்குப் பசியெடுத்தால்[SE][SS] நான் உங்களைக் கேட்கப் போவதில்லை;[SE][SS] ஏனெனில், உலகும்[SE][SS] அதில் நிறைந்துள்ள யாவும்[SE][SS] என்னுடையவையே. [* * ‘உள்ளுறுப்புகளே’ என்பது எபிரேய பாடம் ] [SE][QE]
13. [QS][SS] எருதுகளின் இறைச்சியை[SE][SS] நான் உண்பேனோ?[SE][SS] ஆட்டுக்கிடாய்களின்[SE][SS] குருதியைக் குடிப்பேனோ?[SE][QE]
14. [QS][SS] கடவுளுக்கு நன்றிப்பலி செலுத்துங்கள்;[SE][SS] உன்னதர்க்கு உங்கள்[SE][SS] நேர்ச்சைகளை நிறைவேற்றுங்கள்.[SE][QE]
15. [QS][SS] துன்ப வேளையில் என்னைக் கூப்பிடுங்கள்;[SE][SS] உங்களைக் காத்திடுவேன்;[SE][SS] அப்போது, நீங்கள் என்னை[SE][SS] மேன்மைப்படுத்துவீர்கள். [* *…* ‘நீதிமான்கள் வைகறையில் அவர்கள்மேல் வெற்றி கொள்வர்’ என்பது எபிரேய பாடம்.[QE] ] [SE][QE]
16. [QS][SS] ஆனால், கடவுள் பொல்லாரைப் பார்த்து[SE][SS] இவ்வாறு கூறுகின்றார்;[SE][SS] ‛என் விதிமுறைகளை ஓதுவதற்கு[SE][SS] உங்களுக்கு என்ன தகுதி?[SE][SS] என் உடன்படிக்கை பற்றிப் பேசுவதற்கு[SE][SS] உங்களுக்கு என்ன அருகதை?[SE][QE]
17. [QS][SS] நீங்களோ ஒழுங்குமுறையை[SE][SS] வெறுக்கின்றீர்கள்;[SE][SS] என் கட்டளைகளைத்[SE][SS] தூக்கியெறிந்து விடுகின்றீர்கள்.[SE][QE]
18. [QS][SS] திருடர்களைக் கண்டால்[SE][SS] அவர்களோடு விருப்புடன்[SE][SS] சேர்ந்து கொள்கின்றீர்கள்;[SE][SS] கற்பு நெறி தவறியவர்களோடும்[SE][SS] உங்களுக்கு உறவு உண்டு.[SE][QE]
19. [QS][SS] உங்கள் வாய் உரைப்பது தீமையே; [BR] உங்கள் நா புனைவதும் பொய்ம்மையே.[SE][QE]
20. [QS][SS] உங்கள் சகோதரரைப் பற்றி[SE][SS] இழிவாகப் பேசுகின்றீர்கள்;[SE][SS] உங்கள் தாயின் மக்களைப்பற்றி[SE][SS] அவதூறு பேசுகின்றீர்கள்.[SE][QE]
21. [QS][SS] இவ்வாறெல்லாம் நீங்கள் செய்தும்,[SE][SS] நான் மௌனமாய் இருந்தேன்;[SE][SS] நானும் உங்களைப் போன்றவர் என[SE][SS] எண்ணிக் கொண்டீர்கள்;[SE][SS] ஆனால், இப்பொழுது[SE][SS] உங்களைக் கண்டிக்கின்றேன்;[SE][SS] உங்கள் குற்றங்களை உங்கள் கண்முன்[SE][SS] ஒவ்வொன்றாய் எடுத்துரைக்கின்றேன்.[SE][QE]
22. [QS][SS] கடவுளை மறந்தோரே![SE][SS] இதைக் கண்டுணருங்கள்;[SE][SS] இல்லையேல், நான் உங்களைப்[SE][SS] பீறிப் போடுவேன்;[SE][SS] உங்களை விடுவிக்க யாரும் இரார்.[SE][QE]
23. [QS][SS] நன்றிப்பலி செலுத்துவோர்[SE][SS] என்னை மேன்மைப்படுத்துவர்.[SE][SS] தம் வழியைச் செம்மைப்படுத்துவோர்[SE][SS] கடவுளாம் நான் அருளும்[SE][SS] மீட்பைக் கண்டடைவர்.[SE][PE][QE]

குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 50 / 150
சங்கீதம் 50:131
உண்மை வழிபாடு
(ஆசாபின் புகழ்ப்பா)

1 தெய்வங்களுக்கெல்லாம் இறைவனாம் ஆண்டவர் பேசினார்; கதிரவன் எழும் முனையினின்று மறையும் முனைவரை பரந்துள்ள உலகைத் தீர்ப்புப் பெற அழைத்தார். 2 எழிலின் நிறைவாம் சீயோனின்று, ஒளிவீசி மிளிர்கின்றார் கடவுள். 3 நம் கடவுள் வருகின்றார்; மௌனமாய் இருக்கமாட்டார்; அவருக்கு முன்னே, சுட்டெரிக்கும் தழல் நெருப்பு! அவரைச் சுற்றிலும், கடுமையான புயற்காற்று! 4 உயர் வானங்களையும் பூவுலகையும் அவர் அழைத்து, தம் மக்களுக்குத் தீர்ப்பு வழங்குகின்றார். 5 ‛பலியிட்டு என்னோடு உடன்படிக்கை செய்துகொண்ட என் அடியார்களை என்முன் ஒன்று கூட்டுங்கள்.’ 6 வான்வெளி அவரது நீதியை எடுத்தியம்பும்; ஏனெனில், கடவுள்தாமே நீதிபதியாய் வருகின்றார்! (சேலா) 7 என் மக்களே, கேளுங்கள்; நான் பேசுகின்றேன்; இஸ்ரயேலே! உனக்கு எதிராய்ச் சான்றுகூறப் போகின்றேன்; கடவுளாகிய நானே உன் இறைவன்; 8 நீங்கள் கொண்டுவரும் பலிகளை முன்னிட்டு நான் உங்களைக் கண்டிக்கவில்லை; உங்கள் எரிபலிகள் எப்போதும் என் முன்னிலையில் உள்ளன. 9 உங்கள் வீட்டின் காளைகளையோ, உங்கள் தொழுவத்தின் ஆட்டுக்கிடாய்களையோ, நான் ஏற்றுக்கொள்வதில்லை. 10 ஏனெனில், காட்டு விலங்குகளெல்லாம் என் உடைமைகள்; ஓராயிரம் குன்றுகளில் மேயும் கால்நடைகளும் என்னுடையவை. 11 குன்றத்துப் பறவை அனைத்தையும் நான் அறிவேன்; சமவெளியில் நடமாடும் யாவும் என்னுடையவை. 12 எனக்குப் பசியெடுத்தால் நான் உங்களைக் கேட்கப் போவதில்லை; ஏனெனில், உலகும் அதில் நிறைந்துள்ள யாவும் என்னுடையவையே. * ‘உள்ளுறுப்புகளே’ என்பது எபிரேய பாடம் 13 எருதுகளின் இறைச்சியை நான் உண்பேனோ? ஆட்டுக்கிடாய்களின் குருதியைக் குடிப்பேனோ? 14 கடவுளுக்கு நன்றிப்பலி செலுத்துங்கள்; உன்னதர்க்கு உங்கள் நேர்ச்சைகளை நிறைவேற்றுங்கள். 15 துன்ப வேளையில் என்னைக் கூப்பிடுங்கள்; உங்களைக் காத்திடுவேன்; அப்போது, நீங்கள் என்னை மேன்மைப்படுத்துவீர்கள். [* *…* ‘நீதிமான்கள் வைகறையில் அவர்கள்மேல் வெற்றி கொள்வர்’ என்பது எபிரேய பாடம். ] 16 ஆனால், கடவுள் பொல்லாரைப் பார்த்து இவ்வாறு கூறுகின்றார்; ‛என் விதிமுறைகளை ஓதுவதற்கு உங்களுக்கு என்ன தகுதி? என் உடன்படிக்கை பற்றிப் பேசுவதற்கு உங்களுக்கு என்ன அருகதை? 17 நீங்களோ ஒழுங்குமுறையை வெறுக்கின்றீர்கள்; என் கட்டளைகளைத் தூக்கியெறிந்து விடுகின்றீர்கள். 18 திருடர்களைக் கண்டால் அவர்களோடு விருப்புடன் சேர்ந்து கொள்கின்றீர்கள்; கற்பு நெறி தவறியவர்களோடும் உங்களுக்கு உறவு உண்டு. 19 உங்கள் வாய் உரைப்பது தீமையே;
உங்கள் நா புனைவதும் பொய்ம்மையே.
20 உங்கள் சகோதரரைப் பற்றி இழிவாகப் பேசுகின்றீர்கள்; உங்கள் தாயின் மக்களைப்பற்றி அவதூறு பேசுகின்றீர்கள். 21 இவ்வாறெல்லாம் நீங்கள் செய்தும், நான் மௌனமாய் இருந்தேன்; நானும் உங்களைப் போன்றவர் என எண்ணிக் கொண்டீர்கள்; ஆனால், இப்பொழுது உங்களைக் கண்டிக்கின்றேன்; உங்கள் குற்றங்களை உங்கள் கண்முன் ஒவ்வொன்றாய் எடுத்துரைக்கின்றேன். 22 கடவுளை மறந்தோரே! இதைக் கண்டுணருங்கள்; இல்லையேல், நான் உங்களைப் பீறிப் போடுவேன்; உங்களை விடுவிக்க யாரும் இரார். 23 நன்றிப்பலி செலுத்துவோர் என்னை மேன்மைப்படுத்துவர். தம் வழியைச் செம்மைப்படுத்துவோர் கடவுளாம் நான் அருளும் மீட்பைக் கண்டடைவர்.
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 50 / 150
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References