தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பொது மொழிபெயர்ப்பு வெளியீடு
சங்கீதம்
1. {பாதுகாப்புக்காக மன்றாடல்[BR](பாடகர் தலைவர்க்கு: குழல்களுடன்; தாவீதின் புகழ்ப்பா)} [PS] [QS][SS] ஆண்டவரே, என் விண்ணப்பத்திற்குச்[SE][SS] செவிசாய்த்தருளும்;[SE][SS] என் பெருமூச்சைக் கவனித்தருளும்.[SE][QE]
2. [QS][SS] என் அரசரே, என் கடவுளே,[SE][SS] என் கெஞ்சும் குரலை உற்றுக்கேளும்;[SE][SS] ஏனெனில் நான் உம்மை நோக்கியே[SE][SS] மன்றாடுகின்றேன்.[SE][QE]
3. [QS][SS] ஆண்டவரே, விடியற்காலையில்[SE][SS] என் குரலைக் கேட்டருளும்;[SE][SS] வைகறையில் உமக்காக வழிமேல்[SE][SS] விழிவைத்துக் காத்திருப்பேன்.[SE][QE]
4. [QS][SS] ஏனெனில், நீர் பொல்லாங்கைப் பார்த்து[SE][SS] மகிழும் இறைவன் இல்லை;[SE][SS] உமது முன்னிலையில் தீமைக்கு இடமில்லை.[SE][QE]
5. [QS][SS] ஆணவமிக்கோர்[SE][SS] உமது கண்முன் நிற்க மாட்டார்;[SE][SS] தீங்கிழைக்கும் அனைவரையும்[SE][SS] நீர் வெறுக்கின்றீர்.[SE][QE]
6. [QS][SS] பொய் பேசுவோரை நீர் அழித்திடுவீர்;[SE][SS] கொலை வெறியரையும் வஞ்சகரையும்[SE][SS] அருவருக்கின்றீர்.[SE][QE]
7. [QS][SS] நானோ உம் பேரருளால்[SE][SS] உமது இல்லம் சென்றிடுவேன்;[SE][SS] உம் திருத்தூயகத்தை நோக்கி[SE][SS] இறையச்சத்துடன்[SE][SS] உம்மைப் பணிந்திடுவேன்;[SE][QE]
8. [QS][SS] ஆண்டவரே, எனக்குப் பகைவர்[SE][SS] பலர் இருப்பதால்,[SE][SS] உமது நீதியின் பாதையில்[SE][SS] என்னை நடத்தும்;[SE][SS] உமது செம்மையான வழியை[SE][SS] எனக்குக் காட்டியருளும்.[SE][QE]
9. [QS][SS] ஏனெனில், அவர்கள் வாயில்[SE][SS] உண்மை இல்லை; அவர்கள் உள்ளம் [BR] அழிவை உண்டாக்கும்;[SE][SS] அவர்கள் தொண்டை திறந்த பிணக்குழி;[SE][SS] அவர்கள் நா வஞ்சகம் பேசும்.[SE][QE]
10. [QS][SS] கடவுளே, அவர்களின் குற்றங்களுக்குரிய[SE][SS] தண்டனையை அவர்களுக்கு அளியும்;[SE][SS] அவர்கள் தங்கள் சூழ்ச்சிகளாலேயே[SE][SS] வீழ்ச்சியுறட்டும்;[SE][SS] அவர்களுடைய ஏராளமான[SE][SS] தீச்செயல்களை முன்னிட்டு,[SE][SS] அவர்களைப் புறம்பே தள்ளிவிடும்.[SE][SS] ஏனெனில், அவர்கள்[SE][SS] உம்மை எதிர்த்துள்ளார்கள். [* உரோ 3:13.[QE] ] [SE][QE]
11. [QS][SS] ஆனால், உம்மிடம் அடைக்கலம் புகுவோர்[SE][SS] அனைவரும் மகிழ்வர்;[SE][SS] அவர்கள் எந்நாளும் களித்து ஆர்ப்பரிப்பர்;[SE][SS] நீர் அவர்களைப் பாதுகாப்பீர்;[SE][SS] உமது பெயரில் பற்றுடையோர்[SE][SS] உம்மில் அக்களிப்பர்.[SE][QE]
12. [QS][SS] ஏனெனில், ஆண்டவரே,[SE][SS] நேர்மையாளர்க்கு நீர் ஆசிவழங்குவீர்;[SE][SS] கருணை என்னும் கேடயத்தால்[SE][SS] அவரை மறைத்துக் காப்பீர்.[SE][PE]

குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 5 / 150
சங்கீதம் 5:96
பாதுகாப்புக்காக மன்றாடல்
(பாடகர் தலைவர்க்கு: குழல்களுடன்; தாவீதின் புகழ்ப்பா)

1 ஆண்டவரே, என் விண்ணப்பத்திற்குச் செவிசாய்த்தருளும்; என் பெருமூச்சைக் கவனித்தருளும். 2 என் அரசரே, என் கடவுளே, என் கெஞ்சும் குரலை உற்றுக்கேளும்; ஏனெனில் நான் உம்மை நோக்கியே மன்றாடுகின்றேன். 3 ஆண்டவரே, விடியற்காலையில் என் குரலைக் கேட்டருளும்; வைகறையில் உமக்காக வழிமேல் விழிவைத்துக் காத்திருப்பேன். 4 ஏனெனில், நீர் பொல்லாங்கைப் பார்த்து மகிழும் இறைவன் இல்லை; உமது முன்னிலையில் தீமைக்கு இடமில்லை. 5 ஆணவமிக்கோர் உமது கண்முன் நிற்க மாட்டார்; தீங்கிழைக்கும் அனைவரையும் நீர் வெறுக்கின்றீர். 6 பொய் பேசுவோரை நீர் அழித்திடுவீர்; கொலை வெறியரையும் வஞ்சகரையும் அருவருக்கின்றீர். 7 நானோ உம் பேரருளால் உமது இல்லம் சென்றிடுவேன்; உம் திருத்தூயகத்தை நோக்கி இறையச்சத்துடன் உம்மைப் பணிந்திடுவேன்; 8 ஆண்டவரே, எனக்குப் பகைவர் பலர் இருப்பதால், உமது நீதியின் பாதையில் என்னை நடத்தும்; உமது செம்மையான வழியை எனக்குக் காட்டியருளும். 9 ஏனெனில், அவர்கள் வாயில் உண்மை இல்லை; அவர்கள் உள்ளம்
அழிவை உண்டாக்கும்;
அவர்கள் தொண்டை திறந்த பிணக்குழி; அவர்கள் நா வஞ்சகம் பேசும்.
10 கடவுளே, அவர்களின் குற்றங்களுக்குரிய தண்டனையை அவர்களுக்கு அளியும்; அவர்கள் தங்கள் சூழ்ச்சிகளாலேயே வீழ்ச்சியுறட்டும்; அவர்களுடைய ஏராளமான தீச்செயல்களை முன்னிட்டு, அவர்களைப் புறம்பே தள்ளிவிடும். ஏனெனில், அவர்கள் உம்மை எதிர்த்துள்ளார்கள். [* உரோ 3:13. ] 11 ஆனால், உம்மிடம் அடைக்கலம் புகுவோர் அனைவரும் மகிழ்வர்; அவர்கள் எந்நாளும் களித்து ஆர்ப்பரிப்பர்; நீர் அவர்களைப் பாதுகாப்பீர்; உமது பெயரில் பற்றுடையோர் உம்மில் அக்களிப்பர். 12 ஏனெனில், ஆண்டவரே, நேர்மையாளர்க்கு நீர் ஆசிவழங்குவீர்; கருணை என்னும் கேடயத்தால் அவரை மறைத்துக் காப்பீர்.
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 5 / 150
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References