தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பொது மொழிபெயர்ப்பு வெளியீடு
சங்கீதம்
1. {கடவுளின் திரு நகர்[BR](கோராகியரின் புகழ்ப்பாடல்)} [PS] [QS][SS] ஆண்டவர் மாண்பு மிக்கவர்;[SE][SS] நம் கடவுளின் நகரில்,[SE][SS] அவரது திருமலையில்[SE][SS] மிகுந்த புகழுக்கு உரியவர்.[SE][QE]
2. [QS][SS] அழகும் உயரமுமாய் தொலை வடக்கில் திகழும்[SE][SS] சீயோன் மலை அனைத்து உலகிற்கும்[SE][SS] மகிழ்ச்சியால் இலங்குகின்றது;[SE][SS] மாவேந்தரின் நகரும் அதுவே. [* மத் 5:35.[QE]. ] [SE][QE]
3. [QS][SS] அதன் அரண்மனைகளில்[SE][SS] கடவுள் வீற்றிருந்து, தம்மையே[SE][SS] அதன் கோட்டை எனக் காட்டியுள்ளார்.[SE][QE]
4. [QS][SS] இதோ! அரசர் அனைவரும் ஒன்று கூடினர்;[SE][SS] அணிவகுத்து ஒன்றாக வந்தனர்;[SE][QE]
5. [QS][SS] அந்தோ! பார்த்ததும் திகைத்தனர்;[SE][SS] திகிலடைந்து ஓட்டம் பிடித்தனர்.[SE][QE]
6. [QS][SS] அங்கே அச்சம் அவர்களை ஆட்கொண்டது;[SE][SS] பேறுகாலப் பெண்போல்[SE][SS] அவர்கள் துடிதுடித்தனர்.[SE][QE]
7. [QS][SS] தர்சீசுக் கப்பல்களைக்[SE][SS] கீழைக் காற்றினால்[SE][SS] நீர் தகர்த்தெறிகின்றீர்.[SE][QE]
8. [QS][SS] கேள்விப்பட்டவாறே[SE][SS] நேரில் யாம் கண்டோம்;[SE][SS] படைகளின் ஆண்டவரது நகரில்,[SE][SS] ஆம், கடவுளின் நகரினில் கண்டோம்;[SE][SS] கடவுள் அந்நகரை எந்நாளும்[SE][SS] நிலைத்திருக்கச் செய்வார். (சேலா)[SE][QE]
9. [QS][SS] கடவுளே! உமது கோவிலின் நடுவில்[SE][SS] உம் பேரன்பை நினைந்து உருகினோம்.[SE][QE]
10. [QS][SS] கடவுளே! உமது பெயரைப் போலவே,[SE][SS] உமது புகழும் பூவுலகின்[SE][SS] கடை எல்லைவரை எட்டுகின்றது;[SE][SS] உமது வலக்கை[SE][SS] நீதியை நிலைநாட்டுகின்றது.[SE][QE]
11. [QS][SS] சீயோன் மலை மகிழ்வதாக![SE][SS] யூதாவின் நகர்கள்[SE][SS] உம் நீதித்தீர்ப்புகளை முன்னிட்டு[SE][SS] அக்களிப்பனவாக![SE][QE]
12. [QS][SS] சீயோனை வலம் வாருங்கள்;[SE][SS] அதைச்சுற்றி நடைபோடுங்கள்;[SE][SS] அதன் காவல் மாடங்களை[SE][SS] எண்ணிக்கையிடுங்கள்.[SE][QE]
13. [QS][SS] அதன் மதில்களைக்[SE][SS] கவனித்துப் பாருங்கள்;[SE][SS] அதன் கோட்டைகளைச்[SE][SS] சுற்றிப் பாருங்கள்;[SE][SS] அப்பொழுது, இனிவரும் தலைமுறைக்கு[SE][SS] இதை உங்களால் விவரிக்க இயலும்.[SE][QE]
14. [QS][SS] இத்தகைய கடவுளே என்றென்றும்[SE][SS] நம் கடவுள்; அவரே நம்மை[SE][SS] இறுதிவரை வழி நடத்துவார்.[SE][PE]
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 48 / 150
கடவுளின் திரு நகர்
(கோராகியரின் புகழ்ப்பாடல்)

1 ஆண்டவர் மாண்பு மிக்கவர்; நம் கடவுளின் நகரில், அவரது திருமலையில் மிகுந்த புகழுக்கு உரியவர். 2 அழகும் உயரமுமாய் தொலை வடக்கில் திகழும் சீயோன் மலை அனைத்து உலகிற்கும் மகிழ்ச்சியால் இலங்குகின்றது; மாவேந்தரின் நகரும் அதுவே. [* மத் 5:35.. ] 3 அதன் அரண்மனைகளில் கடவுள் வீற்றிருந்து, தம்மையே அதன் கோட்டை எனக் காட்டியுள்ளார். 4 இதோ! அரசர் அனைவரும் ஒன்று கூடினர்; அணிவகுத்து ஒன்றாக வந்தனர்; 5 அந்தோ! பார்த்ததும் திகைத்தனர்; திகிலடைந்து ஓட்டம் பிடித்தனர். 6 அங்கே அச்சம் அவர்களை ஆட்கொண்டது; பேறுகாலப் பெண்போல் அவர்கள் துடிதுடித்தனர். 7 தர்சீசுக் கப்பல்களைக் கீழைக் காற்றினால் நீர் தகர்த்தெறிகின்றீர். 8 கேள்விப்பட்டவாறே நேரில் யாம் கண்டோம்; படைகளின் ஆண்டவரது நகரில், ஆம், கடவுளின் நகரினில் கண்டோம்; கடவுள் அந்நகரை எந்நாளும் நிலைத்திருக்கச் செய்வார். (சேலா) 9 கடவுளே! உமது கோவிலின் நடுவில் உம் பேரன்பை நினைந்து உருகினோம். 10 கடவுளே! உமது பெயரைப் போலவே, உமது புகழும் பூவுலகின் கடை எல்லைவரை எட்டுகின்றது; உமது வலக்கை நீதியை நிலைநாட்டுகின்றது. 11 சீயோன் மலை மகிழ்வதாக! யூதாவின் நகர்கள் உம் நீதித்தீர்ப்புகளை முன்னிட்டு அக்களிப்பனவாக! 12 சீயோனை வலம் வாருங்கள்; அதைச்சுற்றி நடைபோடுங்கள்; அதன் காவல் மாடங்களை எண்ணிக்கையிடுங்கள். 13 அதன் மதில்களைக் கவனித்துப் பாருங்கள்; அதன் கோட்டைகளைச் சுற்றிப் பாருங்கள்; அப்பொழுது, இனிவரும் தலைமுறைக்கு இதை உங்களால் விவரிக்க இயலும். 14 இத்தகைய கடவுளே என்றென்றும் நம் கடவுள்; அவரே நம்மை இறுதிவரை வழி நடத்துவார்.
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 48 / 150
×

Alert

×

Tamil Letters Keypad References