தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பொது மொழிபெயர்ப்பு வெளியீடு
சங்கீதம்
1. {ஆண்டவரே உலகின் அரசர்[BR](பாடகர் தலைவர்க்கு: கோராகியரின் புகழ்ப்பா)} [PS] [QS][SS] மக்களினங்களே,[SE][SS] களிப்புடன் கைகொட்டுங்கள்;[SE][SS] ஆர்ப்பரித்துக் கடவுளைப்[SE][SS] புகழ்ந்து பாடுங்கள்.[SE][QE]
2. [QS][SS] ஏனெனில், உன்னதராகிய ஆண்டவர்[SE][SS] அஞ்சுதற்கு உரியவர்;[SE][SS] உலகனைத்தையும் ஆளும்[SE][SS] மாவேந்தர் அவரே;[SE][QE]
3. [QS][SS] வேற்று மக்களை[SE][SS] நமக்கு அடிபணியச் செய்தவர்;[SE][SS] அன்னிய நாடுகளை[SE][SS] நம் தாள் பணிய வைத்தார்.[SE][QE]
4. [QS][SS] நம் உரிமைச் சொத்தை[SE][SS] அவர் நமக்குத் தேர்ந்து அளித்தார்;[SE][SS] அது அவர் அன்புகூரும்[SE][SS] யாக்கோபின் பெருமை ஆகும். (சேலா)[SE][QE]
5. [QS][SS] ஆரவார ஒலியிடையே[SE][SS] பவனி செல்கின்றார் கடவுள்;[SE][SS] எக்காளம் முழங்கிடவே[SE][SS] உயரே ஏறுகின்றார் ஆண்டவர்.[SE][QE]
6. [QS][SS] பாடுங்கள்;[SE][SS] கடவுளுக்குப் புகழ் பாடுங்கள்;[SE][SS] பாடுங்கள், நம் அரசருக்குப் புகழ் பாடுங்கள். [* எபி 1:8-9.[QE]. ] [SE][QE]
7. [QS][SS] ஏனெனில், கடவுளே[SE][SS] அனைத்து உலகின் வேந்தர்;[SE][SS] அருட்பா தொடுத்துப் புகழ் பாடுங்கள். [* எபி 1:8-9.[QE]. ] [SE][QE]
8. [QS][SS] கடவுள் பிறஇனத்தார் மீது[SE][SS] ஆட்சி செய்கின்றார்;[SE][SS] அவர்தம் திரு அரியணையில்[SE][SS] வீற்றிருக்கின்றார்.[SE][QE]
9. [QS][SS] மக்களினங்களின் தலைவர்கள்[SE][SS] ஆபிரகாமின் கடவுளுடைய மக்களோடு[SE][SS] ஒன்றுகூடுவர்; ஏனெனில்,[SE][SS] மண்ணுலகின் மன்னர் அனைவரும்[SE][SS] கடவுளின் கொற்றத்திற்கு உட்பட்டவர்;[SE][SS] கடவுளே அனைத்திற்கும் மேலானவர்.[SE][PE][QE]
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 47 / 150
ஆண்டவரே உலகின் அரசர்
(பாடகர் தலைவர்க்கு: கோராகியரின் புகழ்ப்பா)

1 மக்களினங்களே, களிப்புடன் கைகொட்டுங்கள்; ஆர்ப்பரித்துக் கடவுளைப் புகழ்ந்து பாடுங்கள். 2 ஏனெனில், உன்னதராகிய ஆண்டவர் அஞ்சுதற்கு உரியவர்; உலகனைத்தையும் ஆளும் மாவேந்தர் அவரே; 3 வேற்று மக்களை நமக்கு அடிபணியச் செய்தவர்; அன்னிய நாடுகளை நம் தாள் பணிய வைத்தார். 4 நம் உரிமைச் சொத்தை அவர் நமக்குத் தேர்ந்து அளித்தார்; அது அவர் அன்புகூரும் யாக்கோபின் பெருமை ஆகும். (சேலா) 5 ஆரவார ஒலியிடையே பவனி செல்கின்றார் கடவுள்; எக்காளம் முழங்கிடவே உயரே ஏறுகின்றார் ஆண்டவர். 6 பாடுங்கள்; கடவுளுக்குப் புகழ் பாடுங்கள்; பாடுங்கள், நம் அரசருக்குப் புகழ் பாடுங்கள். [* எபி 1:8-9.. ] 7 ஏனெனில், கடவுளே அனைத்து உலகின் வேந்தர்; அருட்பா தொடுத்துப் புகழ் பாடுங்கள். [* எபி 1:8-9.. ] 8 கடவுள் பிறஇனத்தார் மீது ஆட்சி செய்கின்றார்; அவர்தம் திரு அரியணையில் வீற்றிருக்கின்றார். 9 மக்களினங்களின் தலைவர்கள் ஆபிரகாமின் கடவுளுடைய மக்களோடு ஒன்றுகூடுவர்; ஏனெனில், மண்ணுலகின் மன்னர் அனைவரும் கடவுளின் கொற்றத்திற்கு உட்பட்டவர்; கடவுளே அனைத்திற்கும் மேலானவர்.
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 47 / 150
×

Alert

×

Tamil Letters Keypad References