1. {நம்மோடு வாழும் கடவுள்[BR](பாடகர் தலைவர்க்கு: கோராகியரின் பாடல்; ‘இளமகளிர்’ என்ற மெட்டு)} [PS] [QS][SS] கடவுள் நமக்கு அடைக்கலமும்[SE][SS] ஆற்றலுமாய் உள்ளார்;[SE][SS] இடுக்கணுற்ற வேளைகளில்[SE][SS] நமக்கு உற்ற துணையும் அவரே.[SE][QE]
2. [QS][SS] ஆகையால், நிலவுலகம்[SE][SS] நிலைகுலைந்தாலும்,[SE][SS] மலைகள் ஆழ்கடலில்[SE][SS] அதிர்ந்து நடுங்கினாலும்,[SE][QE]
3. [QS][SS] கடலின் அலைகள் கொந்தளித்துப்[SE][SS] பொங்கினாலும், அவற்றின் பெருக்கால்[SE][SS] குன்றுகள் அதிர்ந்து நடுங்கினாலும்[SE][SS] எங்களுக்கு அச்சமென்பதே இல்லை. (சேலா)[SE][QE]
4. [QS][SS] ஆறு ஒன்று உண்டு,[SE][SS] அதன் கால்வாய்கள்[SE][SS] உன்னதரான கடவுளின்[SE][SS] திரு உறைவிடமான நகருக்குப்[SE][SS] பேரின்பம் அளிக்கின்றன.[SE][QE]
5. [QS][SS] அந்நகரின் நடுவில்[SE][SS] கடவுள் இருக்கின்றார்;[SE][SS] அது ஒருபோதும் நிலைகுலையாது;[SE][SS] வைகறைதோறும் கடவுள் துணை[SE][SS] அதற்கு உண்டு.[SE][QE]
6. [QS][SS] வேற்றினத்தார் கலக்கமுற்றனர்;[SE][SS] அரசுகள் ஆட்டம் கண்டன;[SE][SS] கடவுளின் குரல் முழங்கிற்று;[SE][SS] பூவுலகம் கரைந்தது.[SE][QE]
7. [QS][SS] படைகளின் ஆண்டவர்[SE][SS] நம்மோடு இருக்கின்றார்;[SE][SS] யாக்கோபின் கடவுளே[SE][SS] நமக்கு அரண். (சேலா) [* எபி 1:8-9.[QE] ] [SE][QE]
8. [QS][SS] வாரீர்! ஆண்டவரின்[SE][SS] செயல்களைக் காணீர்![SE][SS] அவர் உலகில் ஆற்றியுள்ள[SE][SS] திகைப்பூட்டும் நிகழ்ச்சிகளைப் பாரீர்! [* எபி 1:8-9.[QE] ] [SE][QE]
9. [QS][SS] உலகின் கடையெல்லைவரை[SE][SS] போர்களைத் தடுத்து நிறுத்துகின்றார்;[SE][SS] வில்லை ஒடிக்கின்றார்;[SE][SS] ஈட்டியை முறிக்கின்றார்.[SE][SS] தேர்களைத் தீக்கு இரையாக்குகின்றார்.[SE][QE]
10. [QS][SS] அமைதி கொண்டு, நானே கடவுள் என[SE][SS] உணர்ந்து கொள்ளுங்கள்;[SE][SS] வேற்றினத்தாரிடையே நான்[SE][SS] உயர்ந்திருப்பேன்; பூவுலகில்[SE][SS] நானே மாட்சியுடன் விளங்குவேன்.[SE][QE]
11. [QS][SS] படைகளின் ஆண்டவர்[SE][SS] நம்மோடு இருக்கின்றார்;[SE][SS] யாக்கோபின் கடவுளே நமக்கு அரண். (சேலா)[SE][PE][QE]