தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பொது மொழிபெயர்ப்பு வெளியீடு
சங்கீதம்
1. {அரசரின் திருமணப்பாடல்[BR](பாடகர் தலைவர்க்கு: ‘லீலிமலர்கள்’ என்ற மெட்டு; கோராகியரின் அறப்பாடல்; காதல் பாடல்)} [PS] [QS][SS] மன்னரைக் குறித்து யான்[SE][SS] கவிதை புனைகின்ற போழ்து,[SE][SS] இனியதொரு செய்தியால்[SE][SS] என் நெஞ்சம் ததும்பி வழிகின்றது;[SE][SS] திறன்மிகு கவிஞரின் எழுதுகோலென[SE][SS] என் நாவும் ஆகிடுமே![SE][QE]
2. [QS][SS] மானிட மைந்தருள்[SE][SS] பேரழகுப் பெருமகன் நீர்;[SE][SS] உம் இதழினின்று அருள் வெள்ளம்[SE][SS] பாய்ந்துவரும்;[SE][SS] கடவுள் உமக்கு என்றென்றும்[SE][SS] ஆசி வழங்குகின்றார்.[SE][QE]
3. [QS][SS] வீரமிகு மன்னா! மாட்சியொடு[SE][SS] உம் மாண்பும் துலங்கிடவே,[SE][SS] உம் இடையினிலே வீரவாள் தாங்கி வாரும்![SE][QE]
4. [QS][SS] உண்மையைக் காத்திட,[SE][SS] நீதியை நிலைநாட்டிட,[SE][SS] மாண்புடன் வெற்றிவாகை சூடி வாரும்![SE][SS] உம் வலக்கை[SE][SS] அச்சமிகு செயல்களை ஆற்றுவதாக![SE][QE]
5. [QS][SS] உம்முடைய கணைகள் கூரியன;[SE][SS] மன்னர்தம் மாற்றாரின்[SE][SS] நெஞ்சினிலே பாய்வன; மக்களெல்லாம்[SE][SS] உம் காலடியில் வீழ்ந்திடுவர்.[SE][QE]
6. [QS][SS] இறைவனே, என்றுமுளது[SE][SS] உமது அரியணை;[SE][SS] உமது ஆட்சியின் செங்கோல்[SE][SS] வளையாத செங்கோல்.[SE][QE]
7. [QS][SS] நீதியே உமது விருப்பம்;[SE][SS] அநீதி உமக்கு வெறுப்பு;[SE][SS] எனவே கடவுள், உமக்கே உரிய கடவுள்,[SE][SS] மகிழ்ச்சியின் நெய்யால்[SE][SS] உமக்குத் திருப்பொழிவு செய்து,[SE][SS] உம் அரசத் தோழரினும் மேலாய்[SE][SS] உம்மை உயர்த்தினார். [* எபி 1:8-9.[QE] ] [SE][QE]
8. [QS][SS] நறுமணத் துகள், அகிலொடு[SE][SS] இலவங்கத்தின் மணங்கமழும்[SE][SS] உம் ஆடையெலாம்;[SE][SS] தந்தம் இழைத்த மாளிகைதனிலே[SE][SS] யாழிசை உம்மை மகிழ்விக்கும். [* எபி 1:8-9.[QE] ] [SE][QE]
9. [QS][SS] அருமைமிகு அரசிள மகளிர்[SE][SS] உம்மை எதிர்கொள்வர்;[SE][SS] ஓபீரின் பொன் அணிந்து[SE][SS] வடிவாக வலப்புறம் நிற்கின்றாள் [BR] பட்டத்து அரசி![SE][QE]
10. [QS][SS] கேளாய் மகளே! கருத்தாய்க்[SE][SS] காதுகொடுத்துக் கேள்![SE][SS] உன் இனத்தாரை மறந்துவிடு;[SE][SS] பிறந்தகம் மறந்துவிடு.[SE][QE]
11. [QS][SS] உனது எழிலில்[SE][SS] நாட்டங்கொள்வார் மன்னர்;[SE][SS] உன் தலைவர் அவரே;[SE][SS] அவரைப் பணிந்திடு![SE][QE]
12. [QS][SS] தீர் நகர மக்கள் பரிசில் பல ஏந்தி நிற்பர்;[SE][SS] செல்வமிகு சீமான்கள்[SE][SS] உன்னருள் வேண்டி நிற்பர்.[SE][QE]
13. [QS][SS] அந்தப்புரத்தினிலே மாண்புமிகு இளவரசி[SE][SS] தங்கமிழைத்த உடையணிந்து[SE][SS] தோன்றிடுவாள்.[SE][QE]
14. [QS][SS] பலவண்ணப் பட்டுடுத்தி[SE][SS] மன்னரிடம் அவளை அழைத்து வருவர்;[SE][SS] கன்னித் தோழியர் புடைசூழ[SE][SS] அவள் அடியெடுத்து வந்திடுவாள்.[SE][QE]
15. [QS][SS] மன்னவரின் மாளிகைக்குள்[SE][SS] நுழையும்போது அவர்கள்[SE][SS] மகிழ்ச்சியோடும் அக்களிப்போடும்[SE][SS] அழைத்து வரப்படுவர்.[SE][QE]
16. [QS][SS] உம் தந்தையரின் அரியணையில்[SE][SS] உம் மைந்தரே வீற்றிருப்பர்;[SE][SS] அவர்களை நீர் உலகுக்கெலாம்[SE][SS] இளவரசர் ஆக்கிடுவீர்.[SE][QE]
17. [QS][SS] என் பாடல் வழிவழியாய்[SE][SS] உம் பெயரை நிலைக்கச் செய்யும்;[SE][SS] ஆகையால், எல்லா இனத்தாரும்[SE][SS] உமை வாழ்த்திடுவர்.[SE][PE]

குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 45 / 150
சங்கீதம் 45:76
அரசரின் திருமணப்பாடல்
(பாடகர் தலைவர்க்கு: ‘லீலிமலர்கள்’ என்ற மெட்டு; கோராகியரின் அறப்பாடல்; காதல் பாடல்)

1 மன்னரைக் குறித்து யான் கவிதை புனைகின்ற போழ்து, இனியதொரு செய்தியால் என் நெஞ்சம் ததும்பி வழிகின்றது; திறன்மிகு கவிஞரின் எழுதுகோலென என் நாவும் ஆகிடுமே! 2 மானிட மைந்தருள் பேரழகுப் பெருமகன் நீர்; உம் இதழினின்று அருள் வெள்ளம் பாய்ந்துவரும்; கடவுள் உமக்கு என்றென்றும் ஆசி வழங்குகின்றார். 3 வீரமிகு மன்னா! மாட்சியொடு உம் மாண்பும் துலங்கிடவே, உம் இடையினிலே வீரவாள் தாங்கி வாரும்! 4 உண்மையைக் காத்திட, நீதியை நிலைநாட்டிட, மாண்புடன் வெற்றிவாகை சூடி வாரும்! உம் வலக்கை அச்சமிகு செயல்களை ஆற்றுவதாக! 5 உம்முடைய கணைகள் கூரியன; மன்னர்தம் மாற்றாரின் நெஞ்சினிலே பாய்வன; மக்களெல்லாம் உம் காலடியில் வீழ்ந்திடுவர். 6 இறைவனே, என்றுமுளது உமது அரியணை; உமது ஆட்சியின் செங்கோல் வளையாத செங்கோல். 7 நீதியே உமது விருப்பம்; அநீதி உமக்கு வெறுப்பு; எனவே கடவுள், உமக்கே உரிய கடவுள், மகிழ்ச்சியின் நெய்யால் உமக்குத் திருப்பொழிவு செய்து, உம் அரசத் தோழரினும் மேலாய் உம்மை உயர்த்தினார். [* எபி 1:8-9. ] 8 நறுமணத் துகள், அகிலொடு இலவங்கத்தின் மணங்கமழும் உம் ஆடையெலாம்; தந்தம் இழைத்த மாளிகைதனிலே யாழிசை உம்மை மகிழ்விக்கும். [* எபி 1:8-9. ] 9 அருமைமிகு அரசிள மகளிர் உம்மை எதிர்கொள்வர்; ஓபீரின் பொன் அணிந்து வடிவாக வலப்புறம் நிற்கின்றாள்
பட்டத்து அரசி!
10 கேளாய் மகளே! கருத்தாய்க் காதுகொடுத்துக் கேள்! உன் இனத்தாரை மறந்துவிடு; பிறந்தகம் மறந்துவிடு. 11 உனது எழிலில் நாட்டங்கொள்வார் மன்னர்; உன் தலைவர் அவரே; அவரைப் பணிந்திடு! 12 தீர் நகர மக்கள் பரிசில் பல ஏந்தி நிற்பர்; செல்வமிகு சீமான்கள் உன்னருள் வேண்டி நிற்பர். 13 அந்தப்புரத்தினிலே மாண்புமிகு இளவரசி தங்கமிழைத்த உடையணிந்து தோன்றிடுவாள். 14 பலவண்ணப் பட்டுடுத்தி மன்னரிடம் அவளை அழைத்து வருவர்; கன்னித் தோழியர் புடைசூழ அவள் அடியெடுத்து வந்திடுவாள். 15 மன்னவரின் மாளிகைக்குள் நுழையும்போது அவர்கள் மகிழ்ச்சியோடும் அக்களிப்போடும் அழைத்து வரப்படுவர். 16 உம் தந்தையரின் அரியணையில் உம் மைந்தரே வீற்றிருப்பர்; அவர்களை நீர் உலகுக்கெலாம் இளவரசர் ஆக்கிடுவீர். 17 என் பாடல் வழிவழியாய் உம் பெயரை நிலைக்கச் செய்யும்; ஆகையால், எல்லா இனத்தாரும் உமை வாழ்த்திடுவர்.
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 45 / 150
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References