1. {நாடு கடத்தப்பட்டோர் மன்றாட்டு[BR](திபா 42 இன் தொடர்ச்சி)} [PS] [QS][SS] கடவுளே, என் நேர்மையை [BR] நிலைநாட்டும்;[SE][SS] இறைப்பற்றில்லா இனத்தோடு[SE][SS] என் வழக்குக்காக வாதிடும்;[SE][SS] வஞ்சகமும் கொடுமையும் நிறைந்த[SE][SS] மனிதர் கையினின்று[SE][SS] என்னை விடுவித்தருளும்.[SE][QE]
2. [QS][SS] ஏனெனில் கடவுளே! நீரே என் ஆற்றல்;[SE][SS] ஏன் என்னை ஒதுக்கித் தள்ளிவிட்டீர்?[SE][SS] எதிரியால் ஒடுக்கப்பட்டு,[SE][SS] நான் ஏன் துயருடன் நடமாடவேண்டும்?[SE][QE]
3. [QS][SS] உம் ஒளியையும் உண்மையையும்[SE][SS] அனுப்பியருளும்;[SE][SS] அவை என்னை வழி நடத்தி,[SE][SS] உமது திருமலைக்கும்[SE][SS] உமது உறைவிடத்திற்கும்[SE][SS] கொண்டுபோய்ச் சேர்க்கும்.[SE][QE]
4. [QS][SS] அப்பொழுது, நான்[SE][SS] கடவுளின் பீடம் செல்வேன்;[SE][SS] என் மன மகிழ்ச்சியாகிய[SE][SS] இறைவனிடம் செல்வேன்;[SE][SS] கடவுளே! என் கடவுளே![SE][SS] யாழிசைத்து ஆர்ப்பரித்து[SE][SS] உம்மைப் புகழ்ந்திடுவேன்.[SE][QE]
5. [QS][SS] என் நெஞ்சே! நீ நம்பிக்கை இழப்பது ஏன்?[SE][SS] நீ கலக்கமுறுவது ஏன்?[SE][SS] கடவுளையே நம்பியிரு;[SE][SS] என் கடவுளின் மீட்புச் செயல்களை முன்னிட்டு[SE][SS] இன்னும் நான் அவருக்கு[SE][SS] நன்றி செலுத்துவேன்.[SE][PE]