தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பொது மொழிபெயர்ப்பு வெளியீடு
சங்கீதம்
1. {நோயுற்றவரின் மன்றாட்டு[BR](பாடகர் தலைவர்க்கு: தாவீதின் புகழ்ப்பா)} [PS] [QS][SS] எளியோரின் நலனில் அக்கறை[SE][SS] கொள்பவர் பேறுபெற்றவர்;[SE][SS] துன்ப நாளில் ஆண்டவர்[SE][SS] அவரை விடுவிப்பார்.[SE][QE]
2. [QS][SS] ஆண்டவர் அவரைப் பாதுகாப்பார்;[SE][SS] நெடுங்காலம் வாழவைப்பார்;[SE][SS] நாட்டில் பேறுபெற்றவராய்[SE][SS] விளங்கச் செய்வார்;[SE][SS] எதிரிகளின் விருப்பத்திற்கு[SE][SS] அவரைக் கையளிக்க மாட்டார்.[SE][QE]
3. [QS][SS] படுக்கையில் அவர் நோயுற்றுக் கிடக்கையில்[SE][SS] ஆண்டவர் அவருக்குத் துணை செய்வார்;[SE][SS] நோய் நீங்கிப் படுக்கையினின்று[SE][SS] அவர் எழும்பும்படிச் செய்வார்.[SE][QE]
4. [QS][SS] ‛ஆண்டவரே, எனக்கு இரங்கும்;[SE][SS] என்னைக் குணப்படுத்தும்;[SE][SS] உமக்கு எதிராகப் பாவம் செய்தேன்’[SE][SS] என்று மன்றாடினேன்.[SE][QE]
5. [QS][SS] என் எதிரிகள் என்னைப்பற்றித் தீயது பேசி,[SE][SS] ‛அவன் எப்போது சாவான்?[SE][SS] அவன் பெயர் எப்போது ஒழியும்?’[SE][SS] என்கின்றனர்.[SE][QE]
6. [QS][SS] ஒருவன் என்னைப் பார்க்க வந்தால்,[SE][SS] நயவஞ்சகமாகப் பேசுகின்றான்;[SE][SS] என்னைப் பற்றிய தவறான செய்திகளைச்[SE][SS] சேகரித்துக்கொண்டு,[SE][SS] வெளியே போய் அவற்றைப் பரப்புகின்றான்.[SE][QE]
7. [QS][SS] என்னை வெறுப்போர் அனைவரும்[SE][SS] ஒன்றுகூடி எனக்கு எதிராய்க்[SE][SS] காதோடு காதாய்ப் பேசுகின்றனர்.[SE][SS] எனக்குத் தீங்கிழைக்கத்[SE][SS] திட்டமிடுகின்றனர்.[SE][QE]
8. [QS][SS] ‛தீயது ஒன்று அவனை[SE][SS] உறுதியாய்ப் பற்றிக்கொண்டது;[SE][SS] படுக்கையில் கிடக்கின்ற அவன்[SE][SS] இனி எழவே மாட்டான்’ என்று[SE][SS] சொல்கின்றனர்.[SE][QE]
9. [QS][SS] என் உற்ற நண்பன்,[SE][SS] நான் பெரிதும் நம்பினவன்,[SE][SS] என் உணவை உண்டவன்,[SE][SS] எனக்கு இரண்டகமாகத்[SE][SS] தம் குதிகாலைத் தூக்குகின்றான்.[SE][QE]
10. [QS][SS] ஆண்டவரே! என் மீது இரங்கி,[SE][SS] நான் அவர்களுக்குப்[SE][SS] பதிலடி கொடுக்கும்படி தூக்கிவிடும். [* மத் 26:23; மாற் 14:18; லூக் 22:21; யோவா 13:18 ] [SE][QE]
11. [QS][SS] என் எதிரி என்னை வென்று[SE][SS] ஆர்ப்பரிக்கப் போவதில்லை;[SE][SS] இதனால், நீர் என்னில் மகிழ்வுறுகின்றீர்[SE][SS] என்பதை அறிந்து கொள்கின்றேன்.[SE][QE]
12. [QS][SS] நானோ நேர்மையில்[SE][SS] உறுதியாய் இருக்கின்றேன்;[SE][SS] நீர் எனக்கு ஆதரவளிக்கின்றீர்;[SE][SS] உமது முன்னிலையில் என்னை[SE][SS] என்றும் நிலைநிற்கச் செய்கின்றீர்.[SE][QE]
13. [QS][SS] இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர்[SE][SS] புகழப் பெறுவாராக![SE][SS] ஊழி ஊழியாய்ப் புகழப் பெறுவாராக![SE][SS] ஆமென்! ஆமென்![SE][PE]

குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 41 / 150
சங்கீதம் 41:35
நோயுற்றவரின் மன்றாட்டு
(பாடகர் தலைவர்க்கு: தாவீதின் புகழ்ப்பா)

1 எளியோரின் நலனில் அக்கறை கொள்பவர் பேறுபெற்றவர்; துன்ப நாளில் ஆண்டவர் அவரை விடுவிப்பார். 2 ஆண்டவர் அவரைப் பாதுகாப்பார்; நெடுங்காலம் வாழவைப்பார்; நாட்டில் பேறுபெற்றவராய் விளங்கச் செய்வார்; எதிரிகளின் விருப்பத்திற்கு அவரைக் கையளிக்க மாட்டார். 3 படுக்கையில் அவர் நோயுற்றுக் கிடக்கையில் ஆண்டவர் அவருக்குத் துணை செய்வார்; நோய் நீங்கிப் படுக்கையினின்று அவர் எழும்பும்படிச் செய்வார். 4 ‛ஆண்டவரே, எனக்கு இரங்கும்; என்னைக் குணப்படுத்தும்; உமக்கு எதிராகப் பாவம் செய்தேன்’ என்று மன்றாடினேன். 5 என் எதிரிகள் என்னைப்பற்றித் தீயது பேசி, ‛அவன் எப்போது சாவான்? அவன் பெயர் எப்போது ஒழியும்?’ என்கின்றனர். 6 ஒருவன் என்னைப் பார்க்க வந்தால், நயவஞ்சகமாகப் பேசுகின்றான்; என்னைப் பற்றிய தவறான செய்திகளைச் சேகரித்துக்கொண்டு, வெளியே போய் அவற்றைப் பரப்புகின்றான். 7 என்னை வெறுப்போர் அனைவரும் ஒன்றுகூடி எனக்கு எதிராய்க் காதோடு காதாய்ப் பேசுகின்றனர். எனக்குத் தீங்கிழைக்கத் திட்டமிடுகின்றனர். 8 ‛தீயது ஒன்று அவனை உறுதியாய்ப் பற்றிக்கொண்டது; படுக்கையில் கிடக்கின்ற அவன் இனி எழவே மாட்டான்’ என்று சொல்கின்றனர். 9 என் உற்ற நண்பன், நான் பெரிதும் நம்பினவன், என் உணவை உண்டவன், எனக்கு இரண்டகமாகத் தம் குதிகாலைத் தூக்குகின்றான். 10 ஆண்டவரே! என் மீது இரங்கி, நான் அவர்களுக்குப் பதிலடி கொடுக்கும்படி தூக்கிவிடும். * மத் 26:23; மாற் 14:18; லூக் 22:21; யோவா 13:18 11 என் எதிரி என்னை வென்று ஆர்ப்பரிக்கப் போவதில்லை; இதனால், நீர் என்னில் மகிழ்வுறுகின்றீர் என்பதை அறிந்து கொள்கின்றேன். 12 நானோ நேர்மையில் உறுதியாய் இருக்கின்றேன்; நீர் எனக்கு ஆதரவளிக்கின்றீர்; உமது முன்னிலையில் என்னை என்றும் நிலைநிற்கச் செய்கின்றீர். 13 இஸ்ரயேலின் கடவுளாகிய ஆண்டவர் புகழப் பெறுவாராக! ஊழி ஊழியாய்ப் புகழப் பெறுவாராக! ஆமென்! ஆமென்!
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 41 / 150
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References