1. {மாலை மன்றாட்டு[BR](பாடகர் தலைவர்க்கு: நரம்பிசைக் கருவிகளுடன்; தாவீதின் புகழ்ப்பா)} [PS] [QS][SS] எனக்கு நீதி அருள்கின்ற கடவுளே,[SE][SS] நான் மன்றாடும்போது[SE][SS] எனக்குப் பதிலளித்தருளும்;[SE][SS] நான் நெருக்கடியில் இருந்தபோது,[SE][SS] நீர் எனக்குத் துணைபுரிந்தீர்;[SE][SS] இப்போதும் எனக்கு இரங்கி,[SE][SS] என் வேண்டுதலுக்குச் செவிசாய்த்தருளும்;[SE][QE]
2. [QS][SS] மானிடரே! எவ்வளவு காலம்[SE][SS] எனக்குரிய மாட்சிக்கு[SE][SS] இழுக்கைக் கொண்டு வருவீர்கள்?[SE][SS] எவ்வளவு காலம் வெறுமையை விரும்பிப்[SE][SS] பொய்யானதை நாடிச் செல்வீர்கள்? (சேலா)[SE][QE]
3. [QS][SS] ஆண்டவர் என்னைத் தம்[SE][SS] அன்பனாகத் தேர்ந்தெடுத்துள்ளார்;[SE][SS] நான் மன்றாடும் போது[SE][SS] அவர் எனக்குச் செவி சாய்க்கின்றார்;[SE][SS] – இதை அறிந்துகொள்ளுங்கள்.[SE][QE]
4. [QS][SS] சினமுற்றாலும் பாவம் செய்யாதிருங்கள்;[SE][SS] படுக்கையில் உங்கள் உள்ளத்தோடு பேசி[SE][SS] அமைதியாயிருங்கள். (சேலா)[SE][QE]
5. [QS][SS] முறையான பலிகளைச் செலுத்துங்கள்;[SE][SS] ஆண்டவரை நம்புங்கள். [* எபே 4:26.[QE] ] [SE][QE]
6. [QS][SS] ‛நலமானதை எங்களுக்கு அருள யார் உளர்?’[SE][SS] எனக் கேட்பவர் பலர்.[SE][SS] ஆண்டவரே, எங்கள்மீது உமது[SE][SS] முகத்தின் ஒளி வீசும்படிச் செய்தருளும்.[SE][QE]
7. [QS][SS] தானியமும் திராட்சையும்[SE][SS] நன்கு விளையும் காலத்தில் அடையும்[SE][SS] மகிழ்ச்சியைவிட மேலான மகிழ்ச்சியை[SE][SS] நீர் என் உள்ளத்திற்கு அளித்தீர்.[SE][QE]
8. [QS][SS] இனி, நான் மன அமைதியுடன்[SE][SS] படுத்துறங்குவேன்; ஏனெனில்,[SE][SS] ஆண்டவரே, நான் தனிமையாயிருந்தாலும்[SE][SS] நீரே என்னைப் பாதுகாப்புடன் [BR] வாழச் செய்கின்றீர்.[SE][PE]