தமிழ் சத்தியவேதம்

தமிழ் வேதாகமத்தில் உள்ள அனைத்து வார்த்தைகளின் தொகுப்புகள்
சங்கீதம்
1. தீமை செய்வோரைக் கண்டு மனம் புழுங்காதே; பொல்லாங்கு செய்வாரைக் கண்டு பொறாமைப்படாதே;
2. ஏனெனில், அவர்கள் புல்லைப் போல் விரைவில் உலர்ந்து போவர்; பசும் பூண்டைப்போல் வாடிப்போவர்.
3. ஆண்டவரை நம்பு; நலமானதைச் செய்; நாட்டிலேயே குடியிரு; நம்பத் தக்கவராய் வாழ்.
4. ஆண்டவரிலேயே மகிழ்ச்சி கொள்; உன் உள்ளத்து விருப்பங்களை அவர் நிறைவேற்றுவார்.
5. உன் வழியை ஆண்டவரிடம் ஒப்படைத்துவிடு; அவரையே நம்பியிரு; அவரே உன் சார்பில் செயலாற்றுவார்.
6. உன் நேர்மையைக் கதிரொளி போலும், உன் நாணயத்தை நண்பகல் போலும் அவர் விளங்கச் செய்வார்.
7. ஆண்டவர்முன் அமைதியுடன் காத்திரு; தம் வழியில் வெற்றி காண்போரையும் சூழ்ச்சிகள் செய்வோரையும் பார்த்து எரிச்சல் கொள்ளாதே.
8. வெஞ்சினம் கொள்ளாதே; வெகுண்டெழுவதை விட்டுவிடு; எரிச்சலடையாதே; அதனால் தீமைதான் விளையும்.
9. தீமை செய்வோர் வேரறுக்கப்படுவர்; ஆண்டவருக்காகக் காத்திருப்போரே நிலத்தை உடைமையாக்கிக் கொள்வர்.
10. இன்னும் சிறிதுகாலம்தான்; பிறகு பொல்லார் இரார்; அவர்கள் இருந்த இடத்தில் நீ அவர்களைத் தேடினால் அவர்கள் அங்கே இரார்.
11. எளியோர் நிலத்தை உடைமையாகப் பெறுவர்; அவர்கள் வளமிகு வாழ்க்கையில் இன்பம் காண்பர்.
12. பொல்லார் நேர்மையாளருக்குத் தீங்கிழைக்கத் திட்டமிடுகின்றனர்; அவர்களைப் பார்த்துப் பல்லை நெரிக்கின்றனர்.
13. என் தலைவர் அவர்களைப் பார்த்து எள்ளி நகைக்கின்றார்; அவர்களது முடிவுகாலம் நெருங்குவதை அவர் காண்கின்றார்.
14. எளியோரையும் வறியோரையும் வீழ்த்தவும், நேர்மையான வழியில் நடப்போரைக் கொல்லவும் பொல்லார் வாளை உருவுகின்றனர்; வில்லை நாணேற்றுகின்றனர்.
15. ஆனால், அவர்கள் வாள் அவர்கள் நெஞ்சிலேயே பாயும்; அவர்கள் வில்லும் முறிக்கப்படும்.
16. பொல்லாரின் திரளான செல்வத்தைவிட நல்லாரின் சிறிதளவு பொருளே சிறந்தது.
17. பொல்லாரின் தோள்வலிமை முறிக்கப்படும்; ஆனால் நேர்மையாளரை ஆண்டவர் தாங்கிடுவார்.
18. சான்றோரின் வாழ்நாள்களை ஆண்டவர் அறிவார்; அவர்கள் உரிமைச் சொத்து என்றும் நிலைத்திருக்கும்.
19. கேடுகாலத்தில் அவர்கள் இகழ்ச்சி அடைவதில்லை; பஞ்ச காலத்திலும் அவர்கள் நிறைவடைவார்கள்.
20. ஆனால், பொல்லார் அழிவுக்கு ஆளாவர்; ஆண்டவரின் எதிரிகள் கொழுத்த பலியாடுகளுக்கு ஒப்பாவர். அவர்கள் எரியுண்டு புகையென மறைவர்.
21. பொல்லார் வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்க மாட்டார்; நேர்மையாளரோ மனமிரங்கிப் பிறருக்குக் கொடுப்பர்.
22. இறைவனின் ஆசி பெற்றோர் நிலத்தை உடைமையாக்கிக் கொள்வர்; அவரால் சபிக்கப்பட்டோர் வேரறுக்கப்படுவர்.
23. தாம் உவகைகொள்ளும் நடத்தையைக் கொண்ட மனிதரின் காலடிகளை ஆண்டவர் உறுதிப்படுத்துகின்றார்.
24. அவர்கள் விழுந்தாலும் வீழ்ந்து கிடக்கமாட்டார்கள்; ஆண்டவர் அவர்களைத் தம் கையால் தூக்கி நிறுத்துவார்.
25. இளைஞனாய் இருந்திருக்கிறேன்; இதோ! முதியவன் ஆகிவிட்டேன்; ஆனால், நேர்மையாளர் கைவிடப்பட்டதை நான் கண்டதில்லை; அவர்களுடைய மரபினர் பிச்சை எடுப்பதை நான் பார்த்ததில்லை.
26. நேர்மையாளர் எப்போதும் மனமிரங்கிக் கடன் கொடுப்பர்; அவர்களின் மரபினர் இறையாசி பெற்றவராய் இருப்பர்.
27. தீமையினின்று விலகு; நல்லது செய்; எந்நாளும் நாட்டில் நிலைத்திருப்பாய்.
28. ஏனெனில், ஆண்டவர் நேர்மையை விரும்புகின்றார்; தம் அன்பரை அவர் கைவிடுவதில்லை; அவர்களை என்றும் பாதுகாப்பார். பொல்லாரின் மரபினரோ வேரறுக்கப்படுவர்.
29. நேர்மையாளர் நிலத்தை உடைமையாக்கிக் கொள்வர்; அதிலேயே என்றென்றும் குடியிருப்பர்.
30. நேர்மையாளரின் வாய் ஞானத்தை அறிவிக்கும்; அவர்கள் நா நீதிநெறியை எடுத்துரைக்கும்.
31. கடவுளின் திருச்சட்டம் அவர்களது உள்ளத்தில் இருக்கின்றது; அவர்களின் கால்கள் சறுக்குவதில்லை.
32. பொல்லார் நேர்மையாளரை வேவு பார்த்துக் கொண்டிருப்பர்; அவர்களைக் கொன்றுவிட வழிதேடுவர்.
33. ஆனால், ஆண்டவர் நேர்மையாளரை அவர்களின் கையில் ஒப்புவிக்கமாட்டார்; நீதி விசாரணையின்போது அவர்களைத் தண்டனைத்தீர்ப்புக்கு உள்ளாக்கமாட்டார்.
34. ஆண்டவருக்காகக் காத்திரு; அவர்தம் வழியைப் பின்பற்று; அப்பொழுது நீ நிலத்தை உடைமையாக்கிக்கொள்ளும்படி அவர் உன்னை உயர்த்துவார். பொல்லார் வேரறுக்கப்படுவதை நீ காண்பாய்.
35. வளமான நிலத்தில் தழைத்தோங்கும் மரம்போல் கொடிய நெஞ்சங்கொண்ட பொல்லார் செழித்திருக்கக் கண்டேன்.
36. ஆனால், அவர்கள் மறைந்துவிட்டார்கள்; அந்தோ! அவர்கள் அங்கில்லை; தேடிப் பார்த்தேன்; அவர்களைக் காணவில்லை.
37. சான்றோரைப் பார்; நேர்மையானவரைக் கவனி; அமைதியையே நாடும் அம்மனிதருக்கு வழிமரபினர் இருப்பர்.
38. அநீதியாளர் அனைவரும் ஒன்றாக அழிக்கப்படுவர்; பொல்லாரின் வழிமரபினர் வேரறுக்கப்படுவர்.
39. நேர்மையாளருக்கு மீட்பு ஆண்டவரிடமிருந்து வருகின்றது, நெருக்கடியான நேரத்தில் அவர்களுக்கு வலிமையும் அவரே.
40. ஆண்டவர் துணைநின்று அவர்களை விடுவிக்கின்றார்; பொல்லாரிடமிருந்து அவர்களை விடுவிக்கின்றார்; அவரிடம் அடைக்கலம் புகுந்ததால், அவர்களை மீட்கின்றார்.

குறிப்பேடுகள்

No Verse Added

Total 150 Chapters, Current Chapter 37 of Total Chapters 150
சங்கீதம் 37:24

×

Alert

×

tamil Letters Keypad References