தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பொது மொழிபெயர்ப்பு வெளியீடு
சங்கீதம்
1. {பொல்லார், நல்லார் முடிவுகள்[BR](தாவீதுக்கு உரியது)} [PS] [QS][SS] தீமை செய்வோரைக் கண்டு[SE][SS] மனம் புழுங்காதே;[SE][SS] பொல்லாங்கு செய்வோரைக் கண்டு[SE][SS] பொறாமைப்படாதே;[SE][QE]
2. [QS][SS] ஏனெனில், அவர்கள் புல்லைப் போல்[SE][SS] விரைவில் உலர்ந்து போவர்;[SE][SS] பசும் பூண்டைப்போல் வாடிப்போவர்.[SE][QE]
3. [QS][SS] ஆண்டவரை நம்பு; நலமானதைச் செய்;[SE][SS] நாட்டிலேயே குடியிரு;[SE][SS] நம்பத் தக்கவராய் வாழ்.[SE][QE]
4. [QS][SS] ஆண்டவரிலேயே மகிழ்ச்சி கொள்;[SE][SS] உன் உள்ளத்து விருப்பங்களை[SE][SS] அவர் நிறைவேற்றுவார்.[SE][QE]
5. [QS][SS] உன் வழியை ஆண்டவரிடம் ஒப்படைத்துவிடு;[SE][SS] அவரையே நம்பியிரு;[SE][SS] அவரே உன் சார்பில் செயலாற்றுவார்.[SE][QE]
6. [QS][SS] உன் நேர்மையைக் கதிரொளி போலும்,[SE][SS] உன் நாணயத்தை நண்பகல் போலும்[SE][SS] அவர் விளங்கச் செய்வார்.[SE][QE]
7. [QS][SS] ஆண்டவர்முன் அமைதியுடன் காத்திரு;[SE][SS] தம் வழியில் வெற்றி காண்போரையும்[SE][SS] சூழ்ச்சிகள் செய்வோரையும் பார்த்து[SE][SS] எரிச்சல் கொள்ளாதே.[SE][QE]
8. [QS][SS] வெஞ்சினம் கொள்ளாதே;[SE][SS] வெகுண்டெழுவதை விட்டுவிடு;[SE][SS] எரிச்சலடையாதே;[SE][SS] அதனால் தீமைதான் விளையும்.[SE][QE]
9. [QS][SS] தீமை செய்வோர் வேரறுக்கப்படுவர்;[SE][SS] ஆண்டவருக்காகக் காத்திருப்போரே[SE][SS] நிலத்தை உடைமையாக்கிக் கொள்வர்.[SE][QE]
10. [QS][SS] இன்னும் சிறிதுகாலம்தான்;[SE][SS] பிறகு பொல்லார் இரார்;[SE][SS] அவர்கள் இருந்த இடத்தில்[SE][SS] நீ அவர்களைத் தேடினால்[SE][SS] அவர்கள் அங்கே இரார்.[SE][QE]
11. [QS][SS] எளியோர் நிலத்தை[SE][SS] உடைமையாகப் பெறுவர்;[SE][SS] அவர்கள் வளமிகு வாழ்க்கையில்[SE][SS] இன்பம் காண்பர். [* மத் 5:5.[QE]. ] [SE][QE]
12. [QS][SS] பொல்லார் நேர்மையாளருக்குத்[SE][SS] தீங்கிழைக்கத் திட்டமிடுகின்றனர்;[SE][SS] அவர்களைப் பார்த்துப்[SE][SS] பல்லை நெரிக்கின்றனர்.[SE][QE]
13. [QS][SS] என் தலைவர் அவர்களைப் பார்த்து[SE][SS] எள்ளி நகைக்கின்றார்;[SE][SS] அவர்களது முடிவுகாலம் நெருங்குவதை[SE][SS] அவர் காண்கின்றார்.[SE][QE]
14. [QS][SS] எளியோரையும் வறியோரையும் வீழ்த்தவும்,[SE][SS] நேர்மையான வழியில் நடப்போரைக்[SE][SS] கொல்லவும் பொல்லார்[SE][SS] வாளை உருவுகின்றனர்;[SE][SS] வில்லை நாணேற்றுகின்றனர்.[SE][QE]
15. [QS][SS] ஆனால், அவர்கள் வாள்[SE][SS] அவர்கள் நெஞ்சிலேயே பாயும்;[SE][SS] அவர்கள் வில்லும் முறிக்கப்படும்.[SE][QE]
16. [QS][SS] பொல்லாரின் திரளான செல்வத்தைவிட[SE][SS] நல்லாரின் சிறிதளவு பொருளே சிறந்தது.[SE][QE]
17. [QS][SS] பொல்லாரின் தோள்வலிமை முறிக்கப்படும்;[SE][SS] ஆனால் நேர்மையாளரை[SE][SS] ஆண்டவர் தாங்கிடுவார்.[SE][QE]
18. [QS][SS] சான்றோரின் வாழ்நாள்களை[SE][SS] ஆண்டவர் அறிவார்;[SE][SS] அவர்கள் உரிமைச் சொத்து[SE][SS] என்றும் நிலைத்திருக்கும்.[SE][QE]
19. [QS][SS] கேடுகாலத்தில்[SE][SS] அவர்கள் இகழ்ச்சி அடைவதில்லை;[SE][SS] பஞ்ச காலத்திலும்[SE][SS] அவர்கள் நிறைவடைவார்கள்.[SE][QE]
20. [QS][SS] ஆனால், பொல்லார் அழிவுக்கு ஆளாவர்;[SE][SS] ஆண்டவரின் எதிரிகள்[SE][SS] கொழுத்த பலியாடுகளுக்கு ஒப்பாவர்.[SE][SS] அவர்கள் எரியுண்டு புகையென மறைவர்.[SE][QE]
21. [QS][SS] பொல்லார் வாங்கிய கடனைத்[SE][SS] திருப்பிக் கொடுக்க மாட்டார்;[SE][SS] நேர்மையாளரோ மனமிரங்கிப்[SE][SS] பிறருக்குக் கொடுப்பர்.[SE][QE]
22. [QS][SS] இறைவனின் ஆசி பெற்றோர்[SE][SS] நிலத்தை உடைமையாக்கிக் கொள்வர்;[SE][SS] அவரால் சபிக்கப்பட்டோர் வேரறுக்கப்படுவர்.[SE][QE]
23. [QS][SS] தாம் உவகைகொள்ளும்[SE][SS] நடத்தையைக் கொண்ட[SE][SS] மனிதரின் காலடிகளை[SE][SS] ஆண்டவர் உறுதிப்படுத்துகின்றார்.[SE][QE]
24. [QS][SS] அவர்கள் விழுந்தாலும்[SE][SS] வீழ்ந்து கிடக்கமாட்டார்கள்;[SE][SS] ஆண்டவர் அவர்களைத்[SE][SS] தம் கையால் தூக்கி நிறுத்துவார்.[SE][QE]
25. [QS][SS] இளைஞனாய் இருந்திருக்கிறேன்;[SE][SS] இதோ! முதியவன் ஆகிவிட்டேன்;[SE][SS] ஆனால், நேர்மையாளர் கைவிடப்பட்டதை[SE][SS] நான் கண்டதில்லை;[SE][SS] அவர்களுடைய மரபினர்[SE][SS] பிச்சை எடுப்பதை நான் பார்த்ததில்லை.[SE][QE]
26. [QS][SS] நேர்மையாளர் எப்போதும் மனமிரங்கிக்[SE][SS] கடன் கொடுப்பர்;[SE][SS] அவர்களின் மரபினர்[SE][SS] இறையாசி பெற்றவராய் இருப்பர்.[SE][QE]
27. [QS][SS] தீமையினின்று விலகு; நல்லது செய்;[SE][SS] எந்நாளும் நாட்டில் நிலைத்திருப்பாய்.[SE][QE]
28. [QS][SS] ஏனெனில், ஆண்டவர்[SE][SS] நேர்மையை விரும்புகின்றார்;[SE][SS] தம் அன்பரை அவர் கைவிடுவதில்லை;[SE][SS] அவர்களை என்றும் பாதுகாப்பார்.[SE][SS] பொல்லாரின் மரபினரோ[SE][SS] வேரறுக்கப்படுவர்.[SE][QE]
29. [QS][SS] நேர்மையாளர்[SE][SS] நிலத்தை உடைமையாக்கிக் கொள்வர்;[SE][SS] அதிலேயே என்றென்றும் குடியிருப்பர்.[SE][QE]
30. [QS][SS] நேர்மையாளரின் வாய்[SE][SS] ஞானத்தை அறிவிக்கும்;[SE][SS] அவர்கள் நா[SE][SS] நீதிநெறியை எடுத்துரைக்கும்.[SE][QE]
31. [QS][SS] கடவுளின் திருச்சட்டம்[SE][SS] அவர்களது உள்ளத்தில் இருக்கின்றது;[SE][SS] அவர்களின் கால்கள் சறுக்குவதில்லை.[SE][QE]
32. [QS][SS] பொல்லார் நேர்மையாளரை[SE][SS] வேவு பார்த்துக் கொண்டிருப்பர்;[SE][SS] அவர்களைக் கொன்றுவிட வழிதேடுவர்.[SE][QE]
33. [QS][SS] ஆனால், ஆண்டவர் நேர்மையாளரை[SE][SS] அவர்களின் கையில் ஒப்புவிக்கமாட்டார்;[SE][SS] நீதி விசாரணையின்போது[SE][SS] அவர்களைத் தண்டனைத்தீர்ப்புக்கு[SE][SS] உள்ளாக்கமாட்டார்.[SE][QE]
34. [QS][SS] ஆண்டவருக்காகக் காத்திரு;[SE][SS] அவர்தம் வழியைப் பின்பற்று;[SE][SS] அப்பொழுது நீ நிலத்தை[SE][SS] உடைமையாக்கிக்கொள்ளும்படி[SE][SS] அவர் உன்னை உயர்த்துவார்.[SE][SS] பொல்லார் வேரறுக்கப்படுவதை[SE][SS] நீ காண்பாய்.[SE][QE]
35. [QS][SS] வளமான நிலத்தில்[SE][SS] தழைத்தோங்கும் மரம்போல்[SE][SS] கொடிய நெஞ்சங்கொண்ட பொல்லார்[SE][SS] செழித்திருக்கக் கண்டேன்.[SE][QE]
36. [QS][SS] ஆனால், அவர்கள்[SE][SS] மறைந்துவிட்டார்கள்;[SE][SS] அந்தோ! அவர்கள் அங்கில்லை;[SE][SS] தேடிப் பார்த்தேன்;[SE][SS] அவர்களைக் காணவில்லை.[SE][QE]
37. [QS][SS] சான்றோரைப் பார்;[SE][SS] நேர்மையானவரைக் கவனி;[SE][SS] அமைதியையே நாடும் அம்மனிதருக்கு[SE][SS] வழிமரபினர் இருப்பர்.[SE][QE]
38. [QS][SS] அநீதியாளர் அனைவரும்[SE][SS] ஒன்றாக அழிக்கப்படுவர்;[SE][SS] பொல்லாரின் வழிமரபினர்[SE][SS] வேரறுக்கப்படுவர்.[SE][QE]
39. [QS][SS] நேர்மையாளருக்கு மீட்பு[SE][SS] ஆண்டவரிடமிருந்து வருகின்றது;[SE][SS] நெருக்கடியான நேரத்தில்[SE][SS] அவர்களுக்கு வலிமையும் அவரே.[SE][QE]
40. [QS][SS] ஆண்டவர் துணைநின்று[SE][SS] அவர்களை விடுவிக்கின்றார்;[SE][SS] பொல்லாரிடமிருந்து[SE][SS] அவர்களை விடுவிக்கின்றார்;[SE][SS] அவரிடம் அடைக்கலம் புகுந்ததால்,[SE][SS] அவர்களை மீட்கின்றார்.[SE][PE]
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 37 / 150
பொல்லார், நல்லார் முடிவுகள்
(தாவீதுக்கு உரியது)

1 தீமை செய்வோரைக் கண்டு மனம் புழுங்காதே; பொல்லாங்கு செய்வோரைக் கண்டு பொறாமைப்படாதே; 2 ஏனெனில், அவர்கள் புல்லைப் போல் விரைவில் உலர்ந்து போவர்; பசும் பூண்டைப்போல் வாடிப்போவர். 3 ஆண்டவரை நம்பு; நலமானதைச் செய்; நாட்டிலேயே குடியிரு; நம்பத் தக்கவராய் வாழ். 4 ஆண்டவரிலேயே மகிழ்ச்சி கொள்; உன் உள்ளத்து விருப்பங்களை அவர் நிறைவேற்றுவார். 5 உன் வழியை ஆண்டவரிடம் ஒப்படைத்துவிடு; அவரையே நம்பியிரு; அவரே உன் சார்பில் செயலாற்றுவார். 6 உன் நேர்மையைக் கதிரொளி போலும், உன் நாணயத்தை நண்பகல் போலும் அவர் விளங்கச் செய்வார். 7 ஆண்டவர்முன் அமைதியுடன் காத்திரு; தம் வழியில் வெற்றி காண்போரையும் சூழ்ச்சிகள் செய்வோரையும் பார்த்து எரிச்சல் கொள்ளாதே. 8 வெஞ்சினம் கொள்ளாதே; வெகுண்டெழுவதை விட்டுவிடு; எரிச்சலடையாதே; அதனால் தீமைதான் விளையும். 9 தீமை செய்வோர் வேரறுக்கப்படுவர்; ஆண்டவருக்காகக் காத்திருப்போரே நிலத்தை உடைமையாக்கிக் கொள்வர். 10 இன்னும் சிறிதுகாலம்தான்; பிறகு பொல்லார் இரார்; அவர்கள் இருந்த இடத்தில் நீ அவர்களைத் தேடினால் அவர்கள் அங்கே இரார். 11 எளியோர் நிலத்தை உடைமையாகப் பெறுவர்; அவர்கள் வளமிகு வாழ்க்கையில் இன்பம் காண்பர். [* மத் 5:5.. ] 12 பொல்லார் நேர்மையாளருக்குத் தீங்கிழைக்கத் திட்டமிடுகின்றனர்; அவர்களைப் பார்த்துப் பல்லை நெரிக்கின்றனர். 13 என் தலைவர் அவர்களைப் பார்த்து எள்ளி நகைக்கின்றார்; அவர்களது முடிவுகாலம் நெருங்குவதை அவர் காண்கின்றார். 14 எளியோரையும் வறியோரையும் வீழ்த்தவும், நேர்மையான வழியில் நடப்போரைக் கொல்லவும் பொல்லார் வாளை உருவுகின்றனர்; வில்லை நாணேற்றுகின்றனர். 15 ஆனால், அவர்கள் வாள் அவர்கள் நெஞ்சிலேயே பாயும்; அவர்கள் வில்லும் முறிக்கப்படும். 16 பொல்லாரின் திரளான செல்வத்தைவிட நல்லாரின் சிறிதளவு பொருளே சிறந்தது. 17 பொல்லாரின் தோள்வலிமை முறிக்கப்படும்; ஆனால் நேர்மையாளரை ஆண்டவர் தாங்கிடுவார். 18 சான்றோரின் வாழ்நாள்களை ஆண்டவர் அறிவார்; அவர்கள் உரிமைச் சொத்து என்றும் நிலைத்திருக்கும். 19 கேடுகாலத்தில் அவர்கள் இகழ்ச்சி அடைவதில்லை; பஞ்ச காலத்திலும் அவர்கள் நிறைவடைவார்கள். 20 ஆனால், பொல்லார் அழிவுக்கு ஆளாவர்; ஆண்டவரின் எதிரிகள் கொழுத்த பலியாடுகளுக்கு ஒப்பாவர். அவர்கள் எரியுண்டு புகையென மறைவர். 21 பொல்லார் வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்க மாட்டார்; நேர்மையாளரோ மனமிரங்கிப் பிறருக்குக் கொடுப்பர். 22 இறைவனின் ஆசி பெற்றோர் நிலத்தை உடைமையாக்கிக் கொள்வர்; அவரால் சபிக்கப்பட்டோர் வேரறுக்கப்படுவர். 23 தாம் உவகைகொள்ளும் நடத்தையைக் கொண்ட மனிதரின் காலடிகளை ஆண்டவர் உறுதிப்படுத்துகின்றார். 24 அவர்கள் விழுந்தாலும் வீழ்ந்து கிடக்கமாட்டார்கள்; ஆண்டவர் அவர்களைத் தம் கையால் தூக்கி நிறுத்துவார். 25 இளைஞனாய் இருந்திருக்கிறேன்; இதோ! முதியவன் ஆகிவிட்டேன்; ஆனால், நேர்மையாளர் கைவிடப்பட்டதை நான் கண்டதில்லை; அவர்களுடைய மரபினர் பிச்சை எடுப்பதை நான் பார்த்ததில்லை. 26 நேர்மையாளர் எப்போதும் மனமிரங்கிக் கடன் கொடுப்பர்; அவர்களின் மரபினர் இறையாசி பெற்றவராய் இருப்பர். 27 தீமையினின்று விலகு; நல்லது செய்; எந்நாளும் நாட்டில் நிலைத்திருப்பாய். 28 ஏனெனில், ஆண்டவர் நேர்மையை விரும்புகின்றார்; தம் அன்பரை அவர் கைவிடுவதில்லை; அவர்களை என்றும் பாதுகாப்பார். பொல்லாரின் மரபினரோ வேரறுக்கப்படுவர். 29 நேர்மையாளர் நிலத்தை உடைமையாக்கிக் கொள்வர்; அதிலேயே என்றென்றும் குடியிருப்பர். 30 நேர்மையாளரின் வாய் ஞானத்தை அறிவிக்கும்; அவர்கள் நா நீதிநெறியை எடுத்துரைக்கும். 31 கடவுளின் திருச்சட்டம் அவர்களது உள்ளத்தில் இருக்கின்றது; அவர்களின் கால்கள் சறுக்குவதில்லை. 32 பொல்லார் நேர்மையாளரை வேவு பார்த்துக் கொண்டிருப்பர்; அவர்களைக் கொன்றுவிட வழிதேடுவர். 33 ஆனால், ஆண்டவர் நேர்மையாளரை அவர்களின் கையில் ஒப்புவிக்கமாட்டார்; நீதி விசாரணையின்போது அவர்களைத் தண்டனைத்தீர்ப்புக்கு உள்ளாக்கமாட்டார். 34 ஆண்டவருக்காகக் காத்திரு; அவர்தம் வழியைப் பின்பற்று; அப்பொழுது நீ நிலத்தை உடைமையாக்கிக்கொள்ளும்படி அவர் உன்னை உயர்த்துவார். பொல்லார் வேரறுக்கப்படுவதை நீ காண்பாய். 35 வளமான நிலத்தில் தழைத்தோங்கும் மரம்போல் கொடிய நெஞ்சங்கொண்ட பொல்லார் செழித்திருக்கக் கண்டேன். 36 ஆனால், அவர்கள் மறைந்துவிட்டார்கள்; அந்தோ! அவர்கள் அங்கில்லை; தேடிப் பார்த்தேன்; அவர்களைக் காணவில்லை. 37 சான்றோரைப் பார்; நேர்மையானவரைக் கவனி; அமைதியையே நாடும் அம்மனிதருக்கு வழிமரபினர் இருப்பர். 38 அநீதியாளர் அனைவரும் ஒன்றாக அழிக்கப்படுவர்; பொல்லாரின் வழிமரபினர் வேரறுக்கப்படுவர். 39 நேர்மையாளருக்கு மீட்பு ஆண்டவரிடமிருந்து வருகின்றது; நெருக்கடியான நேரத்தில் அவர்களுக்கு வலிமையும் அவரே. 40 ஆண்டவர் துணைநின்று அவர்களை விடுவிக்கின்றார்; பொல்லாரிடமிருந்து அவர்களை விடுவிக்கின்றார்; அவரிடம் அடைக்கலம் புகுந்ததால், அவர்களை மீட்கின்றார்.
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 37 / 150
×

Alert

×

Tamil Letters Keypad References