1. {உதவிக்காக மன்றாடல்[BR](தாவீதுக்கு உரியது)} [PS] [QS][SS] ஆண்டவரே, எனக்கெதிராய்[SE][SS] வழக்காடுவோருடன் வழக்காடும்;[SE][SS] என்மீது போர் தொடுப்போரோடு[SE][SS] போர் புரியும்.[SE][QE]
2. [QS][SS] கேடயமும் படைக்கலமும் எடுத்துவாரும்;[SE][SS] எனக்குத் துணை செய்ய எழுந்து வாரும்.[SE][QE]
3. [QS][SS] என்னைத் துரத்திவரும் எதிரிகளைத்[SE][SS] தடுத்து நிறுத்தும்;[SE][SS] ஈட்டியையும் வேலையும் கையிலெடும்;[SE][SS] ‛நானே உன் மீட்பர்’ என்று[SE][SS] என் உள்ளத்திற்குச் சொல்லும்.[SE][QE]
4. [QS][SS] என் உயிரைக் குடிக்கத் தேடுவோர்,[SE][SS] மானக்கேடுற்று இழிவடையட்டும்;[SE][SS] எனக்குத் தீங்கிழைக்க நினைப்போர்,[SE][SS] புறமுதுகிட்டு ஓடட்டும்.[SE][QE]
5. [QS][SS] ஆண்டவரின் தூதர் அவர்களை[SE][SS] விரட்டியடிக்க,[SE][SS] காற்றில் பறக்கும் பதர்போல[SE][SS] அவர்கள் சிதறட்டும்.[SE][QE]
6. [QS][SS] ஆண்டவரின் தூதர் அவர்களைத் துரத்திட,[SE][SS] அவர்கள் வழி இருளும்[SE][SS] சறுக்கலும் ஆகட்டும்.[SE][QE]
7. [QS][SS] ஏனெனில், காரணமின்றி[SE][SS] எனக்குக் கண்ணி வைத்தனர்;[SE][SS] காரணமின்றி எனக்குக் குழி தோண்டினர்.[SE][QE]
8. [QS][SS] அவர்களுக்கு அழிவு எதிர்பாராமல் வரட்டும்;[SE][SS] அவர்களுக்கு வைத்த கண்ணியில்[SE][SS] அவர்களே சிக்கிக் கொள்ளட்டும்;[SE][SS] அவர்கள் தோண்டிய குழியில் [BR] அவர்களே விழட்டும்.[SE][QE]
9. [QS][SS] என் உள்ளம்[SE][SS] ஆண்டவரை முன்னிட்டுக் களிகூரும்;[SE][SS] அவர் அளிக்கும் மீட்பில் அகமகிழும்.[SE][QE]
10. [QS][SS] ‟ஆண்டவரே, உமக்கு நிகரானவர் யார்?[SE][SS] எளியோரை வலியோரின் கையினின்றும்[SE][SS] எளியோரையும் வறியோரையும்[SE][SS] கொள்ளையடிப்போர் கையினின்றும்[SE][SS] விடுவிப்பவர் நீரே” என்று[SE][SS] என் எலும்புகள் எல்லாம் சொல்லும்.[SE][QE]
11. [QS][SS] பொய்ச்சான்று சொல்வோர்[SE][SS] எனக்கெதிராய் எழுகின்றனர்;[SE][SS] எனக்குத் தெரியாதவற்றைப் பற்றி[SE][SS] என்னிடம் வினவுகின்றனர்.[SE][QE]
12. [QS][SS] நான் அவர்களுக்கு நன்மையே செய்தேன்;[SE][SS] அவர்களோ, அதற்குப் பதிலாக[SE][SS] எனக்குத் தீங்கிழைத்தனர்.[SE][SS] என் நெஞ்சைத் துயரில் ஆழ்த்தினர்.[SE][QE]
13. [QS][SS] நானோ, அவர்கள் நோயுற்றிருந்தபோது,[SE][SS] சாக்கு உடுத்திக் கொண்டேன்;[SE][SS] நோன்பிருந்து என்னை[SE][SS] வருத்திக் கொண்டேன்;[SE][SS] முகம் குப்புற வீழ்ந்து மன்றாடினேன்.[SE][QE]
14. [QS][SS] நண்பர்போலும் உடன்பிறந்தோர் போலும்[SE][SS] அவர்களுக்காய் மன்றாடினேன்;[SE][SS] தாய்க்காகத் துக்கம்[SE][SS] கொண்டாடுவோரைப்போல[SE][SS] வாட்டமுற்றுத் துயரத்தோடு நடமாடினேன்.[SE][QE]
15. [QS][SS] நான் தடுக்கி விழுந்தபோது[SE][SS] அவர்கள் ஒன்றுகூடி மகிழ்ந்தனர்;[SE][SS] எனக்கெதிராய் ஒன்று சேர்ந்தனர்;[SE][SS] யாதொன்றும் அறியாத என்னைச்[SE][SS] சின்னாபின்னமாக்கி[SE][SS] ஓயாது பழித்துரைத்தனர்.[SE][QE]
16. [QS][SS] இறைப்பற்று இல்லாரோடு சேர்ந்து[SE][SS] அவர்கள் என்னை இகழ்ந்தனர்;[SE][SS] எள்ளி நகையாடினர்;[SE][SS] என்னைப் பார்த்துப்[SE][SS] பற்களை நறநறவென்று கடித்தனர்.[SE][QE]
17. [QS][SS] என் தலைவரே, இன்னும் எத்தனை நாள்[SE][SS] இதைப் பார்த்துக் கொண்டிருப்பீர்?;[SE][SS] என் உயிரை அவர்களது தாக்குதலினின்றும்[SE][SS] என் ஆருயிரைச்[SE][SS] சிங்கக் குட்டிகளினின்றும் மீட்டருளும்.[SE][QE]
18. [QS][SS] மாபெரும் சபையில்[SE][SS] உமக்கு நன்றி செலுத்துவேன்;[SE][SS] திரளான மக்களிடையே[SE][SS] உம்மைப் புகழ்வேன்.[SE][QE]
19. [QS][SS] வஞ்சகரான என் எதிரிகள்[SE][SS] என்னைப் பார்த்துக் களிக்க இடமளியாதீர்;[SE][SS] காரணமின்றி என்னை வெறுப்போர்[SE][SS] கண்சாடை காட்டி இகழவிடாதீர்.[SE][QE]
20. [QS][SS] ஏனெனில், அவர்களது பேச்சு[SE][SS] சமாதானத்தைப் பற்றியதன்று;[SE][SS] நாட்டில் அமைதியை நாடுவோர்க்கு எதிராக[SE][SS] அவர்கள் வஞ்சகமாய்ச் [BR] சூழ்ச்சி செய்கின்றனர். [* திபா 69:4; யோவா 16:25.[QE] ] [SE][QE]
21. [QS][SS] எனக்கெதிராக அவர்கள் வாய் திறந்து,[SE][SS] ‛ஆ! ஆ! நாங்களே எங்கள்[SE][SS] கண்ணால் கண்டோம்’ என்கின்றனர்.[SE][QE]
22. [QS][SS] ஆண்டவரே, நீர் இதைக் கண்டும்[SE][SS] மௌனமாய் இராதீர்;[SE][SS] என் தலைவரே, என்னைவிட்டுத்[SE][SS] தொலையில் போய்விடாதீர்.[SE][QE]
23. [QS][SS] என் கடவுளே, கிளர்ந்தெழும்![SE][SS] என் தலைவரே, விழித்தெழுந்து[SE][SS] என் வழக்குக்கு நீதி கிடைக்கச் செய்யும்.[SE][QE]
24. [QS][SS] என் கடவுளாகிய ஆண்டவரே,[SE][SS] உமது நீதிக்கேற்ப[SE][SS] என் நேர்மையை நிலைநாட்டும்![SE][SS] அவர்கள் என்னைப் பார்த்துக்[SE][SS] களிக்க இடமளியாதேயும்![SE][QE]
25. [QS][SS] அவர்கள் தங்கள் உள்ளத்தில்[SE][SS] ‛ஆம், நாம் விரும்பினது இதுவே’ எனச்[SE][SS] சொல்லாதபடி பாரும்![SE][SS] ‛அவனை விழுங்கிவிட்டோம்’ எனப்[SE][SS] பேசிக்கொள்ளாதபடி பாரும்![SE][QE]
26. [QS][SS] எனக்கு நேரிட்ட தீங்கைப் பார்த்து[SE][SS] மகிழ்ச்சி அடைவோர் எல்லாரும்[SE][SS] கலக்கமுறட்டும்! என்னைவிடத்[SE][SS] தம்மைச் சிறந்தோராய்க் கருதுவோர்க்கு[SE][SS] வெட்கமும் மானக்கேடும்[SE][SS] மேலாடை ஆகட்டும்![SE][QE]
27. [QS][SS] என் நேர்மை நிலைநாட்டப்படுவதை[SE][SS] விரும்புவோர் ஆரவாரத்துடன் அக்களிக்கட்டும்;[SE][SS] ‛ஆண்டவர் எத்துணைப் பெரியவர்![SE][SS] அவர் தம் அடியாரின் நல்வாழ்வைக்[SE][SS] காண விரும்புவார்’ என்று[SE][SS] எப்பொழுதும் சொல்லட்டும்.[SE][QE]
28. [QS][SS] அப்பொழுது, என் நா[SE][SS] உம் நீதியை எடுத்துரைத்து,[SE][SS] நாள் முழுதும் உம் புகழ் பாடும்.[SE][PE]