தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பொது மொழிபெயர்ப்பு வெளியீடு
சங்கீதம்
1. {பாவ அறிக்கையும் மன்னிப்பும்[BR](தாவீதின் அறப்பாடல்)} [PS] [QS][SS] எவரது குற்றம் மன்னிக்கப்பட்டதோ,[SE][SS] எவரது பாவம் மறைக்கப்பட்டதோ,[SE][SS] அவர் பேறு பெற்றவர். [* உரோ 4:7-8.[QE]. ] [SE][QE]
2. [QS][SS] ஆண்டவர் எந்த மனிதரின்[SE][SS] தீச்செயலை எண்ணவில்லையோ,[SE][SS] எவரது மனத்தில் வஞ்சம் இல்லையோ,[SE][SS] அவர் பேறுபெற்றவர். [* உரோ 4:7-8.[QE]. ] [SE][QE]
3. [QS][SS] என் பாவத்தை அறிக்கையிடாதவரை,[SE][SS] நாள்முழுவதும் நான் கதறி அழுததால்,[SE][SS] என் எலும்புகள் கழன்று போயின.[SE][QE]
4. [QS][SS] ஏனெனில், இரவும் பகலும் உம் கை[SE][SS] எனக்கு எதிராக ஓங்கி நின்றது;[SE][SS] கோடையின் வறட்சிபோல[SE][SS] என் வலிமை வறண்டுபோயிற்று. (சேலா)[SE][QE]
5. [QS][SS] ‛என் பாவத்தை உம்மிடம் அறிக்கையிட்டேன்;[SE][SS] என் தீச்செயலை நான் மறைத்ததில்லை;[SE][SS] ஆண்டவரிடம் என் குற்றங்களை[SE][SS] ஒப்புக்கொள்வேன்’ என்று சொன்னேன்.[SE][SS] நீரும் என் நெறிகேட்டையும்[SE][SS] பாவத்தையும் போக்கினீர். (சேலா)[SE][QE]
6. [QS][SS] ஆகவே, துன்ப வேளையில்[SE][SS] உம் அன்பர் அனைவரும்[SE][SS] உம்மை நோக்கி மன்றாடுவர்;[SE][SS] பெருவெள்ளம் பாய்ந்து வந்தாலும்[SE][SS] அவர்களை அது அணுகாது.[SE][QE]
7. [QS][SS] நீரே எனக்குப் புகலிடம்;[SE][SS] இன்னலினின்று என்னை நீர்[SE][SS] பாதுகாக்கின்றீர்;[SE][SS] உம் மீட்பினால் எழும் ஆரவாரம்[SE][SS] என்னைச் சூழ்ந்தொலிக்கச் செய்கின்றீர். (சேலா)[SE][QE]
8. [QS][SS] நான் உனக்கு அறிவு புகட்டுவேன்;[SE][SS] நீ நடக்க வேண்டிய வழியை[SE][SS] உனக்குக் காட்டுவேன்;[SE][SS] உன்னைக் கண்ணோக்கி,[SE][SS] உனக்கு அறிவுரை கூறுவேன்.[SE][QE]
9. [QS][SS] கடிவாளம் பூட்டி வாரினால் இழுத்தாலன்றி[SE][SS] உன்னைப் பின்தொடர்ந்து வராத[SE][SS] குதிரை போன்றோ கோவேறு[SE][SS] கழுதை போன்றோ அறிவிலியாய் இராதே![SE][QE]
10. [QS][SS] பொல்லாருக்கு வரும் துன்பங்கள் பல;[SE][SS] ஆண்டவரில் நம்பிக்கை கொள்வோரை[SE][SS] அவரது பேரன்பு சூழ்ந்து நிற்கும்.[SE][QE]
11. [QS][SS] நீதிமான்களே, ஆண்டவரை முன்னிட்டு[SE][SS] அகமகிழுங்கள்; நேரிய உள்ளத்தோரே,[SE][SS] நீங்கள் அனைவரும் மகிழ்ந்து பாடுங்கள்.[SE][PE]
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 32 / 150
பாவ அறிக்கையும் மன்னிப்பும்
(தாவீதின் அறப்பாடல்)

1 எவரது குற்றம் மன்னிக்கப்பட்டதோ, எவரது பாவம் மறைக்கப்பட்டதோ, அவர் பேறு பெற்றவர். [* உரோ 4:7-8.. ] 2 ஆண்டவர் எந்த மனிதரின் தீச்செயலை எண்ணவில்லையோ, எவரது மனத்தில் வஞ்சம் இல்லையோ, அவர் பேறுபெற்றவர். [* உரோ 4:7-8.. ] 3 என் பாவத்தை அறிக்கையிடாதவரை, நாள்முழுவதும் நான் கதறி அழுததால், என் எலும்புகள் கழன்று போயின. 4 ஏனெனில், இரவும் பகலும் உம் கை எனக்கு எதிராக ஓங்கி நின்றது; கோடையின் வறட்சிபோல என் வலிமை வறண்டுபோயிற்று. (சேலா) 5 ‛என் பாவத்தை உம்மிடம் அறிக்கையிட்டேன்; என் தீச்செயலை நான் மறைத்ததில்லை; ஆண்டவரிடம் என் குற்றங்களை ஒப்புக்கொள்வேன்’ என்று சொன்னேன். நீரும் என் நெறிகேட்டையும் பாவத்தையும் போக்கினீர். (சேலா) 6 ஆகவே, துன்ப வேளையில் உம் அன்பர் அனைவரும் உம்மை நோக்கி மன்றாடுவர்; பெருவெள்ளம் பாய்ந்து வந்தாலும் அவர்களை அது அணுகாது. 7 நீரே எனக்குப் புகலிடம்; இன்னலினின்று என்னை நீர் பாதுகாக்கின்றீர்; உம் மீட்பினால் எழும் ஆரவாரம் என்னைச் சூழ்ந்தொலிக்கச் செய்கின்றீர். (சேலா) 8 நான் உனக்கு அறிவு புகட்டுவேன்; நீ நடக்க வேண்டிய வழியை உனக்குக் காட்டுவேன்; உன்னைக் கண்ணோக்கி, உனக்கு அறிவுரை கூறுவேன். 9 கடிவாளம் பூட்டி வாரினால் இழுத்தாலன்றி உன்னைப் பின்தொடர்ந்து வராத குதிரை போன்றோ கோவேறு கழுதை போன்றோ அறிவிலியாய் இராதே! 10 பொல்லாருக்கு வரும் துன்பங்கள் பல; ஆண்டவரில் நம்பிக்கை கொள்வோரை அவரது பேரன்பு சூழ்ந்து நிற்கும். 11 நீதிமான்களே, ஆண்டவரை முன்னிட்டு அகமகிழுங்கள்; நேரிய உள்ளத்தோரே, நீங்கள் அனைவரும் மகிழ்ந்து பாடுங்கள்.
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 32 / 150
×

Alert

×

Tamil Letters Keypad References