1. {இறைவனின் நம்பிக்கை[BR](பாடகர் தலைவர்க்கு: தாவீதின் புகழ்ப்பா)} [PS] [QS][SS] ஆண்டவரே, உம்மிடம் நான்[SE][SS] அடைக்கலம் புகுந்துள்ளேன்;[SE][SS] நான் ஒருபோதும்[SE][SS] வெட்கமடைய விடாதேயும்;[SE][SS] உமது நீதிக்கேற்ப[SE][SS] என்னை விடுவித்தருளும்;[SE][QE]
2. [QS][SS] உம் செவிகளை[SE][SS] என் பக்கம் திருப்பியருளும்;[SE][SS] விரைவில் என்னை மீட்டருளும்;[SE][SS] எனக்கு அடைக்கலம் தரும்[SE][SS] கற்பாறையாய் இரும்;[SE][SS] என்னைப் பாதுகாக்கும்[SE][SS] வலிமைமிகு கோட்டையாய் இரும்.[SE][QE]
3. [QS][SS] ஆம், என் கற்பாறையும் கோட்டையும் நீரே;[SE][SS] உமது பெயரின் பொருட்டு[SE][SS] எனக்கு வழிகாட்டி என்னை நடத்தியருளும்.[SE][QE]
4. [QS][SS] அவர்கள் எனக்கென விரித்து வைத்துள்ள[SE][SS] வலையிலிருந்து என்னை விடுவித்தருளும்;[SE][SS] ஏனெனில், நீரே எனக்கு அடைக்கலம்.[SE][QE]
5. [QS][SS] உமது கையில்[SE][SS] என் உயிரை ஒப்படைக்கின்றேன்;[SE][SS] வாக்குப் பிறழாத இறைவனாகிய[SE][SS] ஆண்டவரே, நீர் என்னை மீட்டருளினீர். [* லூக் 23:46.[QE]. ] [SE][QE]
6. [QS][SS] நானோ, பயனற்ற சிலைகளில்[SE][SS] பற்றுடையோரை வெறுத்து,[SE][SS] ஆண்டவர்மீது நம்பிக்கை வைக்கின்றேன்.[SE][QE]
7. [QS][SS] உமது பேரன்பில் நான் களிகூர்வேன்;[SE][SS] அக்களிப்பேன்;[SE][SS] என் துன்பத்தை நீர் பார்த்திருக்கின்றீர்;[SE][SS] என் இக்கட்டுகளையும்[SE][SS] நீர் அறிந்துள்ளீர்.[SE][QE]
8. [QS][SS] என் எதிரியின் கையில்[SE][SS] என்னை நீர் விட்டுவிடவில்லை;[SE][SS] அகன்ற இடத்தில் என்னைக்[SE][SS] காலூன்றி நிற்கவைத்தீர்.[SE][QE]
9. [QS][SS] ஆண்டவரே, எனக்கு இரங்கும்;[SE][SS] ஏனெனில் நான்[SE][SS] இக்கட்டான நிலையில் உள்ளேன்;[SE][SS] துயரத்தால் என் கண்ணும் என் உயிரும்[SE][SS] என் உடலும் தளர்ந்து போயின.[SE][QE]
10. [QS][SS] என் வாழ்க்கை[SE][SS] வருத்தத்திலேயே கடந்து செல்கின்றது;[SE][SS] ஆம், என் வாழ்நாள்[SE][SS] புலம்புவதிலேயே கழிகின்றது;[SE][SS] துயரத்தால் என் வலிமை[SE][SS] குறைந்து போகின்றது;[SE][SS] என் எலும்புகள் தளர்ந்து போகின்றன.[SE][QE]
11. [QS][SS] என் பகைவர் அனைவரின்[SE][SS] இகழ்ச்சிக்கு உள்ளானேன்;[SE][SS] என்னை அடுத்திருப்போரின்[SE][SS] பேரிழிவுக்கு ஆளானேன்;[SE][SS] என் நண்பர்களுக்குப் பேரச்சம் வருவித்தேன்;[SE][SS] என்னைத் தெருவில் பார்ப்போர்[SE][SS] என்னிடமிருந்து விலகி ஓடுகின்றனர்.[SE][QE]
12. [QS][SS] இறந்தோர் போல் நினைவினின்று[SE][SS] நான் அகற்றப்பட்டேன்;[SE][SS] உடைந்துபோன மட்கலம்போல் ஆனேன்.[SE][QE]
13. [QS][SS] பலர் என்மீது பழிசுமத்தியது[SE][SS] என் காதில் விழுந்தது;[SE][SS] எப்பக்கமும் பேரச்சம் சூழ்ந்தது.[SE][SS] அவர்கள் ஒன்றுகூடி[SE][SS] எனக்கெதிராய்ச் சூழ்ச்சி செய்தார்கள்;[SE][SS] என் உயிரைப் பறிக்கத்[SE][SS] திட்டம் தீட்டினார்கள்.[SE][QE]
14. [QS][SS] ஆண்டவரே, நான் உம்மீது[SE][SS] நம்பிக்கை வைத்துள்ளேன்;[SE][SS] ‛நீரே என் கடவுள்’ என்று சொன்னேன்.[SE][QE]
15. [QS][SS] என் வாழ்வின் ஒவ்வொரு கட்டமும்[SE][SS] உமது கையில் உள்ளது;[SE][SS] என் எதிரிகளின் கையினின்றும்[SE][SS] என்னைத் துன்புறுத்துவோரின்[SE][SS] கையினின்றும் என்னை விடுவித்தருளும்.[SE][QE]
16. [QS][SS] உமது முகத்தின் ஒளி[SE][SS] அடியேன் மீது வீசும்படி செய்யும்;[SE][SS] உமது பேரன்பால் என்னை விடுவித்தருளும்.[SE][QE]
17. [QS][SS] ஆண்டவரே, உம்மை நோக்கி மன்றாடினேன்;[SE][SS] என்னை வெட்கமுற விடாதேயும்;[SE][SS] பொல்லார் வெட்கிப்போவார்களாக![SE][SS] பாதாளத்தில் வாயடைத்துப் போவார்களாக![SE][QE]
18. [QS][SS] பொய்சொல்லும் வாய்[SE][SS] அடைபட்டுப் போவதாக![SE][SS] செருக்கும் பழிப்புரையும் கொண்டு,[SE][SS] நேர்மையாளருக்கு எதிராக[SE][SS] இறுமாப்புடன் பேசும் நா [BR] கட்டுண்டு கிடப்பதாக![SE][QE]
19. [QS][SS] உமக்கு அஞ்சி நடப்போர்க்கு[SE][SS] நீர் வைத்திருக்கும் நன்மை[SE][SS] எத்துணைப் பெரிது![SE][SS] உம்மிடம் அடைக்கலம் புகுவோர்க்கு[SE][SS] மானிடர் முன்னிலையில்[SE][SS] நீர் செய்யும் நன்மை எத்துணை மிகுதி![SE][QE]
20. [QS][SS] மனிதரின் சூழ்ச்சியினின்று[SE][SS] அவர்களைக் காப்பாற்றி[SE][SS] உமது முன்னிலையின்[SE][SS] மறைப்பினுள் வைத்துள்ளீர்![SE][SS] நாவுகள் கிளப்பும் பூசலினின்று[SE][SS] அவர்களைப் பாதுகாத்து[SE][SS] உமது கூடாரத்தினுள் வைத்துக் காக்கின்றீர்![SE][QE]
21. [QS][SS] ஆண்டவர் போற்றி! போற்றி![SE][SS] ஏனெனில், முற்றுகையிடப்பட்ட நகரினில்,[SE][SS] அவர் தம் பேரன்பை வியத்தகு முறையில்[SE][SS] எனக்கு விளங்கச் செய்தார்.[SE][QE]
22. [QS][SS] நானோ, கலக்கமுற்ற நிலையில்[SE][SS] ‛உமது பார்வையினின்று[SE][SS] விலக்கப்பட்டேன்’ என்று[SE][SS] சொல்லிக் கொண்டேன்;[SE][SS] ஆனால், நான் உம்மிடம்[SE][SS] உதவிக்காக வேண்டினபோது,[SE][SS] நீர் என் கெஞ்சும் குரலுக்குச் செவிசாய்த்தீர்.[SE][QE]
23. [QS][SS] ஆண்டவரின் அடியார்களே,[SE][SS] அவரிடம் அன்பு கொள்ளுங்கள்;[SE][SS] ஆண்டவர் பற்றுறுதியுடையோரைப்[SE][SS] பாதுகாக்கின்றார்; ஆனால்,[SE][SS] இறுமாப்புடன் நடப்போர்க்கு அவர்[SE][SS] முழுமையாய்ப் பதிலடி கொடுக்கின்றார்.[SE][QE]
24. [QS][SS] ஆண்டவருக்காக[SE][SS] நம்பிக்கையுடன் காத்திருப்போரே,[SE][SS] நீங்கள் அனைவரும் உள்ளத்தில்[SE][SS] வலிமையும் உறுதியும் கொண்டிருங்கள்.[SE][PE]