1. {நன்றி செலுத்தல்[BR](புகழ்ப்பா; திருக்கோவில் அர்ப்பணப்பா; தாவீதுக்கு உரியது)} [PS] [QS][SS] ஆண்டவரே, உம்மை ஏத்திப்[SE][SS] புகழ்வேன்; ஏனெனில்,[SE][SS] நீர் என்னைக் கைதூக்கி விட்டீர்;[SE][SS] என்னைக் கண்டு என் பகைவர்[SE][SS] மகிழ நீர் விடவில்லை.[SE][QE]
2. [QS][SS] என் கடவுளாகிய ஆண்டவரே,[SE][SS] உம்மிடம் உதவி வேண்டினேன்;[SE][SS] என்னை நீர் குணப்படுத்துவீர்.[SE][QE]
3. [QS][SS] ஆண்டவரே, நீர் என்னைப்[SE][SS] பாதாளத்திலிருந்து ஏறிவரச் செய்தீர்;[SE][SS] சாவுக்குழியில் இறங்கிய[SE][SS] எனது உயிரைக் காத்தீர்.[SE][QE]
4. [QS][SS] இறையன்பரே, ஆண்டவரைப்[SE][SS] புகழ்ந்து பாடுங்கள்;[SE][SS] தூயவராம் அவரை நினைந்து[SE][SS] நன்றி கூறுங்கள்.[SE][QE]
5. [QS][SS] அவரது சினம் ஒரு நொடிப் பொழுதுதான்[SE][SS] இருக்கும்; அவரது கருணையோ[SE][SS] வாழ்நாள் முழுதும் நீடிக்கும்;[SE][SS] மாலையில் அழுகை;[SE][SS] காலையிலோ ஆர்ப்பரிப்பு.[SE][QE]
6. [QS][SS] நான் வளமுடன் வாழ்ந்தபோது,[SE][SS] ‛என்னை ஒருபோதும்[SE][SS] அசைக்க முடியாது’ என்றேன்.[SE][QE]
7. [QS][SS] ஆனால், ஆண்டவரே![SE][SS] உமது கருணையினால்[SE][SS] மலையென உறுதியாக என்னை[SE][SS] நிலைநிற்கச் செய்தீர்;[SE][SS] உம் முகத்தை மறைத்துக்கொண்டீர்;[SE][SS] நான் நிலைகலங்கிப் போனேன்.[SE][QE]
8. [QS][SS] ஆண்டவரே, உம்மை நோக்கி[SE][SS] மன்றாடினேன்;[SE][SS] என் தலைவரிடம்[SE][SS] எனக்கு இரங்குமாறு வேண்டினேன்.[SE][QE]
9. [QS][SS] நான் சாவதால், படுகுழிக்குப் போவதால்,[SE][SS] உமக்கு என்ன பயன்?[SE][SS] புழுதியால் உம்மைப் புகழ முடியுமா?[SE][SS] உமது வாக்குப் பிறழாமையை[SE][SS] அறிவிக்க இயலுமா?[SE][QE]
10. [QS][SS] ஆண்டவரே, எனக்குச் செவிசாயும்;[SE][SS] என்மீது இரங்கும்;[SE][SS] ஆண்டவரே, எனக்குத் துணையாய் இரும்.[SE][QE]
11. [QS][SS] நீர் என் புலம்பலைக்[SE][SS] களிநடனமாக மாற்றிவிட்டீர்;[SE][SS] என் சாக்குத் துணியைக் களைந்துவிட்டு[SE][SS] எனை மகிழ்ச்சியால் உடுத்தினீர்.[SE][QE]
12. [QS][SS] ஆகவே என் உள்ளம்*[SE][SS] உம்மைப் புகழ்ந்து பாடும்;[SE][SS] மௌனமாய் இராது;[SE][SS] என் கடவுளாகிய ஆண்டவரே,[SE][SS] உமக்கு என்றென்றும் நன்றி செலுத்துவேன்.[SE][PE]