1. {காலை மன்றாட்டு[BR] (தாவீதின் புகழ்ப்பா: தம் மகன் அப்சலோமிடமிருந்து தப்பியோடிய போது அவர் பாடியது)} [PS] [QS][SS] ஆண்டவரே, என் எதிரிகள்[SE][SS] எவ்வளவாய்ப் பெருகிவிட்டனர்![SE][SS] என்னை எதிர்த்து எழுவோர்[SE][SS] எத்தனை மிகுந்து விட்டனர்![SE][QE]
2. [QS][SS] ‛கடவுள் அவனை விடுவிக்கமாட்டார்’[SE][SS] என்று என்னைக் குறித்துச்[SE][SS] சொல்வோர் பலர். (சேலா)[SE][QE]
3. [QS][SS] ஆயினும், ஆண்டவரே,[SE][SS] நீரே எனைக் காக்கும் கேடயம்;[SE][SS] நீரே என் மாட்சி; என்னைத்[SE][SS] தலைநிமிரச் செய்பவரும் நீரே.[SE][QE]
4. [QS][SS] நான் உரத்த குரலில்[SE][SS] ஆண்டவரிடம் மன்றாடுகின்றேன்;[SE][SS] அவர் தமது திருமலையிலிருந்து[SE][SS] எனக்குப் பதிலளிப்பார். (சேலா)[SE][QE]
5. [QS][SS] நான் படுத்துறங்கி விழித்தெழுவேன்;[SE][SS] ஏனெனில்,[SE][SS] ஆண்டவரே எனக்கு ஆதரவு.[SE][QE]
6. [QS][SS] என்னைச் சூழ்ந்திருக்கும் பல்லாயிரம்[SE][SS] பகைவருக்கு நான் அஞ்சமாட்டேன்.[SE][QE]
7. [QS][SS] ஆண்டவரே, எழுந்தருளும்;[SE][SS] என் கடவுளே, என்னை மீட்டருளும்;[SE][SS] என் எதிரிகள் அனைவரையும்[SE][SS] கன்னத்தில் அறையும்![SE][SS] பொல்லாரின் பல்லை உடையும்![SE][QE]
8. [QS][SS] விடுதலை அளிப்பவர் ஆண்டவர்;[SE][SS] அவர்தம் மக்களுக்கு[SE][SS] ஆசி வழங்குவாராக! (சேலா)[SE][PE]