தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பொது மொழிபெயர்ப்பு வெளியீடு
சங்கீதம்
1. {காலை மன்றாட்டு[BR] (தாவீதின் புகழ்ப்பா: தம் மகன் அப்சலோமிடமிருந்து தப்பியோடிய போது அவர் பாடியது)} [PS] [QS][SS] ஆண்டவரே, என் எதிரிகள்[SE][SS] எவ்வளவாய்ப் பெருகிவிட்டனர்![SE][SS] என்னை எதிர்த்து எழுவோர்[SE][SS] எத்தனை மிகுந்து விட்டனர்![SE][QE]
2. [QS][SS] ‛கடவுள் அவனை விடுவிக்கமாட்டார்’[SE][SS] என்று என்னைக் குறித்துச்[SE][SS] சொல்வோர் பலர். (சேலா)[SE][QE]
3. [QS][SS] ஆயினும், ஆண்டவரே,[SE][SS] நீரே எனைக் காக்கும் கேடயம்;[SE][SS] நீரே என் மாட்சி; என்னைத்[SE][SS] தலைநிமிரச் செய்பவரும் நீரே.[SE][QE]
4. [QS][SS] நான் உரத்த குரலில்[SE][SS] ஆண்டவரிடம் மன்றாடுகின்றேன்;[SE][SS] அவர் தமது திருமலையிலிருந்து[SE][SS] எனக்குப் பதிலளிப்பார். (சேலா)[SE][QE]
5. [QS][SS] நான் படுத்துறங்கி விழித்தெழுவேன்;[SE][SS] ஏனெனில்,[SE][SS] ஆண்டவரே எனக்கு ஆதரவு.[SE][QE]
6. [QS][SS] என்னைச் சூழ்ந்திருக்கும் பல்லாயிரம்[SE][SS] பகைவருக்கு நான் அஞ்சமாட்டேன்.[SE][QE]
7. [QS][SS] ஆண்டவரே, எழுந்தருளும்;[SE][SS] என் கடவுளே, என்னை மீட்டருளும்;[SE][SS] என் எதிரிகள் அனைவரையும்[SE][SS] கன்னத்தில் அறையும்![SE][SS] பொல்லாரின் பல்லை உடையும்![SE][QE]
8. [QS][SS] விடுதலை அளிப்பவர் ஆண்டவர்;[SE][SS] அவர்தம் மக்களுக்கு[SE][SS] ஆசி வழங்குவாராக! (சேலா)[SE][PE]
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 3 / 150
காலை மன்றாட்டு
(தாவீதின் புகழ்ப்பா: தம் மகன் அப்சலோமிடமிருந்து தப்பியோடிய போது அவர் பாடியது)

1 ஆண்டவரே, என் எதிரிகள் எவ்வளவாய்ப் பெருகிவிட்டனர்! என்னை எதிர்த்து எழுவோர் எத்தனை மிகுந்து விட்டனர்! 2 ‛கடவுள் அவனை விடுவிக்கமாட்டார்’ என்று என்னைக் குறித்துச் சொல்வோர் பலர். (சேலா) 3 ஆயினும், ஆண்டவரே, நீரே எனைக் காக்கும் கேடயம்; நீரே என் மாட்சி; என்னைத் தலைநிமிரச் செய்பவரும் நீரே. 4 நான் உரத்த குரலில் ஆண்டவரிடம் மன்றாடுகின்றேன்; அவர் தமது திருமலையிலிருந்து எனக்குப் பதிலளிப்பார். (சேலா) 5 நான் படுத்துறங்கி விழித்தெழுவேன்; ஏனெனில், ஆண்டவரே எனக்கு ஆதரவு. 6 என்னைச் சூழ்ந்திருக்கும் பல்லாயிரம் பகைவருக்கு நான் அஞ்சமாட்டேன். 7 ஆண்டவரே, எழுந்தருளும்; என் கடவுளே, என்னை மீட்டருளும்; என் எதிரிகள் அனைவரையும் கன்னத்தில் அறையும்! பொல்லாரின் பல்லை உடையும்! 8 விடுதலை அளிப்பவர் ஆண்டவர்; அவர்தம் மக்களுக்கு ஆசி வழங்குவாராக! (சேலா)
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 3 / 150
×

Alert

×

Tamil Letters Keypad References