தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பொது மொழிபெயர்ப்பு வெளியீடு
சங்கீதம்
1. {உதவிக்காக மன்றாடல்[BR](தாவீதுக்கு உரியது)} [PS] [QS][SS] ஆண்டவரே, உம்மை நோக்கி[SE][SS] மன்றாடுகின்றேன்;[SE][SS] என் கற்பாறையே, என் குரலைக்[SE][SS] கேளாதவர்போல் இராதேயும்;[SE][SS] நீர் மௌனமாய் இருப்பீராகில்,[SE][SS] படுகுழியில் இறங்குவோருள்[SE][SS] நானும் ஒருவனாகிவிடுவேன்.[SE][QE]
2. [QS][SS] நான் உம்மிடம் உதவி வேண்டுகையில்,[SE][SS] உமது திருத்தூயகத்தை நோக்கி[SE][SS] நான் கையுயர்த்தி வேண்டுகையில்,[SE][SS] பதில் அளித்தருளும்.[SE][QE]
3. [QS][SS] பொல்லாரோடு என்னை[SE][SS] ஒழித்து விடாதேயும்![SE][SS] தீயவரோடு என்னை அழித்து விடாதேயும்![SE][SS] அவர்கள் தமக்கு அடுத்திருப்பாரோடு[SE][SS] பேசுவதோ சமாதானம்;[SE][SS] அவர்களது உள்ளத்தில் உள்ளதோ[SE][SS] நயவஞ்சகம்.[SE][QE]
4. [QS][SS] அவர்களின் செய்கைக்கேற்ப,[SE][SS] அவர்களின் தீச்செயலுக்கேற்ப,[SE][SS] அவர்களுக்குத் தண்டனை அளியும்;[SE][SS] அவர்கள் கைகள் செய்த[SE][SS] தீவினைகளுக்கேற்ப, அவர்களுக்குத்[SE][SS] தண்டனை வழங்கியருளும்,[SE][SS] அவர்களுக்குத் தகுந்த[SE][SS] கைம்மாறு அளித்தருளும்.[SE][QE]
5. [QS][SS] ஏனெனில், ஆண்டவரின் செயல்களையோ[SE][SS] அவர் கைகள் உருவாக்கியவற்றையோ[SE][SS] அவர்கள் மதிக்கவில்லை;[SE][SS] ஆகையால் அவர் அவர்களைத் [BR] தகர்த்தெறிவார்;[SE][SS] ஒருபோதும் மீண்டும் கட்டி எழுப்பார். [* திவெ 22:12.[QE] ] [SE][QE]
6. [QS][SS] ஆண்டவர் போற்றி! போற்றி![SE][SS] ஏனெனில், அவர் என்[SE][SS] கெஞ்சும் குரலுக்குச் செவிசாய்த்தார்.[SE][QE]
7. [QS][SS] ஆண்டவர் என் வலிமை, என் கேடயம்;[SE][SS] அவரை என் உள்ளம் நம்புகின்றது;[SE][SS] நான் உதவி பெற்றேன்; ஆகையால்[SE][SS] என் உள்ளம் களிகூர்கின்றது;[SE][SS] நான் இன்னிசைபாடி[SE][SS] அவருக்கு நன்றி கூறுவேன்.[SE][QE]
8. [QS][SS] ஆண்டவர் தாமே தம் மக்களின் வலிமை;[SE][SS] தாம் திருப்பொழிவு செய்தவர்க்கு[SE][SS] அவரே பாதுகாப்பான அரண்.[SE][QE]
9. [QS][SS] ஆண்டவரே, உம் மக்களுக்கு[SE][SS] விடுதலை அளித்தருளும்;[SE][SS] உமது உரிமைச் சொத்தான அவர்களுக்கு[SE][SS] ஆசி வழங்கும்;[SE][SS] அவர்களுக்கு ஆயராக இருந்து[SE][SS] என்றென்றும் அவர்களைத்[SE][SS] தாங்கிக்கொள்ளும்.[SE][PE]

குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 28 / 150
சங்கீதம் 28:86
உதவிக்காக மன்றாடல்
(தாவீதுக்கு உரியது)

1 ஆண்டவரே, உம்மை நோக்கி மன்றாடுகின்றேன்; என் கற்பாறையே, என் குரலைக் கேளாதவர்போல் இராதேயும்; நீர் மௌனமாய் இருப்பீராகில், படுகுழியில் இறங்குவோருள் நானும் ஒருவனாகிவிடுவேன். 2 நான் உம்மிடம் உதவி வேண்டுகையில், உமது திருத்தூயகத்தை நோக்கி நான் கையுயர்த்தி வேண்டுகையில், பதில் அளித்தருளும். 3 பொல்லாரோடு என்னை ஒழித்து விடாதேயும்! தீயவரோடு என்னை அழித்து விடாதேயும்! அவர்கள் தமக்கு அடுத்திருப்பாரோடு பேசுவதோ சமாதானம்; அவர்களது உள்ளத்தில் உள்ளதோ நயவஞ்சகம். 4 அவர்களின் செய்கைக்கேற்ப, அவர்களின் தீச்செயலுக்கேற்ப, அவர்களுக்குத் தண்டனை அளியும்; அவர்கள் கைகள் செய்த தீவினைகளுக்கேற்ப, அவர்களுக்குத் தண்டனை வழங்கியருளும், அவர்களுக்குத் தகுந்த கைம்மாறு அளித்தருளும். 5 ஏனெனில், ஆண்டவரின் செயல்களையோ அவர் கைகள் உருவாக்கியவற்றையோ அவர்கள் மதிக்கவில்லை; ஆகையால் அவர் அவர்களைத்
தகர்த்தெறிவார்;
ஒருபோதும் மீண்டும் கட்டி எழுப்பார். [* திவெ 22:12. ]
6 ஆண்டவர் போற்றி! போற்றி! ஏனெனில், அவர் என் கெஞ்சும் குரலுக்குச் செவிசாய்த்தார். 7 ஆண்டவர் என் வலிமை, என் கேடயம்; அவரை என் உள்ளம் நம்புகின்றது; நான் உதவி பெற்றேன்; ஆகையால் என் உள்ளம் களிகூர்கின்றது; நான் இன்னிசைபாடி அவருக்கு நன்றி கூறுவேன். 8 ஆண்டவர் தாமே தம் மக்களின் வலிமை; தாம் திருப்பொழிவு செய்தவர்க்கு அவரே பாதுகாப்பான அரண். 9 ஆண்டவரே, உம் மக்களுக்கு விடுதலை அளித்தருளும்; உமது உரிமைச் சொத்தான அவர்களுக்கு ஆசி வழங்கும்; அவர்களுக்கு ஆயராக இருந்து என்றென்றும் அவர்களைத் தாங்கிக்கொள்ளும்.
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 28 / 150
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References