தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பொது மொழிபெயர்ப்பு வெளியீடு
சங்கீதம்
1. {புகழ்ச்சிப் பாடல்[BR](தாவீதுக்கு உரியது)} [PS] [QS][SS] ஆண்டவரே என் ஒளி;[SE][SS] அவரே என் மீட்பு;[SE][SS] யாருக்கு நான் அஞ்சவேண்டும்?[SE][SS] ஆண்டவரே என் உயிருக்கு அடைக்கலம்;[SE][SS] யாருக்கு நான் அஞ்சி நடுங்க வேண்டும்?[SE][QE]
2. [QS][SS] தீயவர் என் உடலை விழுங்க[SE][SS] என்னை நெருங்குகையில்,[SE][SS] என் பகைவரும் எதிரிகளுமான அவர்களே[SE][SS] இடறி விழுந்தார்கள்.[SE][QE]
3. [QS][SS] எனக்கெதிராக ஒரு படையே[SE][SS] பாளையமிறங்கினும்,[SE][SS] என் உள்ளம் அஞ்சாது;[SE][SS] எனக்கெதிராகப் போர் எழுந்தாலும்,[SE][SS] நான் நம்பிக்கையோடிருப்பேன்.[SE][QE]
4. [QS][SS] நான் ஆண்டவரிடம்[SE][SS] ஒரு விண்ணப்பம் செய்தேன்;[SE][SS] அதையே நான் நாடித் தேடுவேன்;[SE][SS] ஆண்டவரின் இல்லத்தில்[SE][SS] என் வாழ்நாள் எல்லாம்[SE][SS] நான் குடியிருக்க வேண்டும்,[SE][SS] ஆண்டவரின் அழகை நான் காண வேண்டும்; [BR] அவரது கோவிலில் அவரது[SE][SS] திருவுளத்தைக் கண்டறிய வேண்டும்.[SE][QE]
5. [QS][SS] ஏனெனில், கேடுவரும் நாளில்[SE][SS] அவர் என்னைத்[SE][SS] தம் கூடாரத்தில் மறைத்து வைப்பார்;[SE][SS] தம் கூடாரத்தினுள்ளே[SE][SS] என்னை ஒளித்து வைப்பார்;[SE][SS] குன்றின்மேல் என்னைப்[SE][SS] பாதுகாப்பாய் வைப்பார். [* மத் 5:8 ] [SE][QE]
6. [QS][SS] அப்பொழுது, என்னைச் சுற்றிலுமுள்ள[SE][SS] என் எதிரிகளுக்கு எதிரில்[SE][SS] நான் தலைநிமிரச் செய்வார்;[SE][SS] அவரது கூடாரத்தில் ஆர்ப்பரிப்புடன்[SE][SS] பலிகளைச் செலுத்துவேன்;[SE][SS] ஆண்டவரைப் புகழ்ந்து பாடல் பாடுவேன்.[SE][QE]
7. [QS][SS] ஆண்டவரே, நான் மன்றாடும்போது[SE][SS] என் குரலைக் கேட்டருளும்;[SE][SS] என்மீது இரக்கங்கொண்டு[SE][SS] எனக்குப் பதிலளித்தருளும்.[SE][QE]
8. [QS][SS] ‛புறப்படு, அவரது முகத்தை நாடு’ என்றது[SE][SS] என் உள்ளம்; ஆண்டவரே,[SE][SS] உமது முகத்தையே நாடுவேன்.[SE][QE]
9. [QS][SS] உமது முகத்தை எனக்கு மறைக்காதிரும்;[SE][SS] நீர் சினங்கொண்டு[SE][SS] அடியேனை விலக்கிவிடாதிரும்; [BR] நீரே எனக்குத் துணை;[SE][SS] என் மீட்பராகிய கடவுளே,[SE][SS] என்னைத் தள்ளிவிடாதிரும்;[SE][SS] என்னைக் கைவிடாதிரும்.[SE][QE]
10. [QS][SS] என் தந்தையும் தாயும்[SE][SS] என்னைக் கைவிட்டாலும்[SE][SS] ஆண்டவர் என்னை ஏற்றுக்கொள்வார்.[SE][QE]
11. [QS][SS] ஆண்டவரே, உமது வழியை[SE][SS] எனக்குக் கற்பித்தருளும்;[SE][SS] என் எதிரிகளை முன்னிட்டு, என்னைச்[SE][SS] செம்மையான பாதையில் நடத்தும்.[SE][QE]
12. [QS][SS] என் பகைவரின் விருப்பத்திற்கு[SE][SS] என்னைக் கையளித்துவிடாதிரும்;[SE][SS] ஏனெனில், பொய்ச்சாட்சிகளும்[SE][SS] வன்முறையை மூச்சாகக் கொண்டவர்களும்[SE][SS] எனக்கெதிராய்க் கிளம்பியுள்ளனர்.[SE][QE]
13. [QS][SS] வாழ்வோரின் நாட்டினிலே[SE][SS] ஆண்டவரின் நலன்களைக்[SE][SS] காண்பேன் என்று[SE][SS] நான் இன்னும் நம்புகின்றேன்.[SE][QE]
14. [QS][SS] நெஞ்சே! ஆண்டவருக்காகக் காத்திரு;[SE][SS] மன உறுதிகொள்;[SE][SS] உன் உள்ளம் வலிமை பெறட்டும்;[SE][SS] ஆண்டவருக்காகக் காத்திரு.[SE][PE][QE]

குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 27 / 150
சங்கீதம் 27:56
புகழ்ச்சிப் பாடல்
(தாவீதுக்கு உரியது)

1 ஆண்டவரே என் ஒளி; அவரே என் மீட்பு; யாருக்கு நான் அஞ்சவேண்டும்? ஆண்டவரே என் உயிருக்கு அடைக்கலம்; யாருக்கு நான் அஞ்சி நடுங்க வேண்டும்? 2 தீயவர் என் உடலை விழுங்க என்னை நெருங்குகையில், என் பகைவரும் எதிரிகளுமான அவர்களே இடறி விழுந்தார்கள். 3 எனக்கெதிராக ஒரு படையே பாளையமிறங்கினும், என் உள்ளம் அஞ்சாது; எனக்கெதிராகப் போர் எழுந்தாலும், நான் நம்பிக்கையோடிருப்பேன். 4 நான் ஆண்டவரிடம் ஒரு விண்ணப்பம் செய்தேன்; அதையே நான் நாடித் தேடுவேன்; ஆண்டவரின் இல்லத்தில் என் வாழ்நாள் எல்லாம் நான் குடியிருக்க வேண்டும், ஆண்டவரின் அழகை நான் காண வேண்டும்;
அவரது கோவிலில் அவரது
திருவுளத்தைக் கண்டறிய வேண்டும்.
5 ஏனெனில், கேடுவரும் நாளில் அவர் என்னைத் தம் கூடாரத்தில் மறைத்து வைப்பார்; தம் கூடாரத்தினுள்ளே என்னை ஒளித்து வைப்பார்; குன்றின்மேல் என்னைப் பாதுகாப்பாய் வைப்பார். * மத் 5:8 6 அப்பொழுது, என்னைச் சுற்றிலுமுள்ள என் எதிரிகளுக்கு எதிரில் நான் தலைநிமிரச் செய்வார்; அவரது கூடாரத்தில் ஆர்ப்பரிப்புடன் பலிகளைச் செலுத்துவேன்; ஆண்டவரைப் புகழ்ந்து பாடல் பாடுவேன். 7 ஆண்டவரே, நான் மன்றாடும்போது என் குரலைக் கேட்டருளும்; என்மீது இரக்கங்கொண்டு எனக்குப் பதிலளித்தருளும். 8 ‛புறப்படு, அவரது முகத்தை நாடு’ என்றது என் உள்ளம்; ஆண்டவரே, உமது முகத்தையே நாடுவேன். 9 உமது முகத்தை எனக்கு மறைக்காதிரும்; நீர் சினங்கொண்டு அடியேனை விலக்கிவிடாதிரும்;
நீரே எனக்குத் துணை;
என் மீட்பராகிய கடவுளே, என்னைத் தள்ளிவிடாதிரும்; என்னைக் கைவிடாதிரும்.
10 என் தந்தையும் தாயும் என்னைக் கைவிட்டாலும் ஆண்டவர் என்னை ஏற்றுக்கொள்வார். 11 ஆண்டவரே, உமது வழியை எனக்குக் கற்பித்தருளும்; என் எதிரிகளை முன்னிட்டு, என்னைச் செம்மையான பாதையில் நடத்தும். 12 என் பகைவரின் விருப்பத்திற்கு என்னைக் கையளித்துவிடாதிரும்; ஏனெனில், பொய்ச்சாட்சிகளும் வன்முறையை மூச்சாகக் கொண்டவர்களும் எனக்கெதிராய்க் கிளம்பியுள்ளனர். 13 வாழ்வோரின் நாட்டினிலே ஆண்டவரின் நலன்களைக் காண்பேன் என்று நான் இன்னும் நம்புகின்றேன். 14 நெஞ்சே! ஆண்டவருக்காகக் காத்திரு; மன உறுதிகொள்; உன் உள்ளம் வலிமை பெறட்டும்; ஆண்டவருக்காகக் காத்திரு.
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 27 / 150
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References