தமிழ் சத்தியவேதம்

திருவிவிலியம் - பொது மொழிபெயர்ப்பு வெளியீடு
சங்கீதம்
1. {நேர்மையாளரின் விண்ணப்பம்[BR](தாவீதுக்கு உரியது)} [PS] [QS][SS] ஆண்டவரே, நான் குற்றமற்றவன்[SE][SS] என்பதை அறிவியும்;[SE][SS] ஏனெனில், என் நடத்தை நேர்மையானது;[SE][SS] நான் ஆண்டவரை நம்பினேன்;[SE][SS] நான் தடுமாறவில்லை.[SE][QE]
2. [QS][SS] ஆண்டவரே, என்னைச் சோதித்து[SE][SS] ஆராய்ந்து பாரும்;[SE][SS] என் மனத்தையும் உள்ளத்தையும்[SE][SS] புடமிட்டுப் பாரும்;[SE][QE]
3. [QS][SS] ஏனெனில், உமது பேரன்பு[SE][SS] என் கண்முன் இருக்கின்றது;[SE][SS] உமக்கு உண்மையாக நடந்து வருகிறேன்.[SE][QE]
4. [QS][SS] பொய்யரின் நடுவில்[SE][SS] நான் அமர்வதில்லை;[SE][SS] வஞ்சகரோடு நான் சேர்வதில்லை. [* மத் 5:8. ] [SE][QE]
5. [QS][SS] தீயோரின் மன்றத்தை[SE][SS] நான் வெறுக்கின்றேன்;[SE][SS] பொல்லாரின் நடுவில்[SE][SS] நான் அமர்வதில்லை.[SE][QE]
6. [QS][SS] மாசற்றவனாய்[SE][SS] என் கைகளைக் கழுவுகின்றேன்;[SE][SS] ஆண்டவரே, உம் பலிபீடத்தை[SE][SS] வலம் வருவேன். [* *…* ‘யாக்கோபே! உனது முகத்தை’ என்பது எபிரேய பாடம்.[QE]. ] [SE][QE]
7. [QS][SS] உரத்த குரலில் உமக்கு[SE][SS] நன்றிப்பா பாடுகின்றேன்;[SE][SS] வியத்தகு உம் செயல்களை எல்லாம்[SE][SS] எடுத்துரைக்கின்றேன்;[SE][QE]
8. [QS][SS] ஆண்டவரே,[SE][SS] நீர் குடிகொள்ளும் இல்லத்தை[SE][SS] நான் விரும்புகின்றேன்;[SE][SS] உமது மாட்சி தங்கியுள்ள இடத்தை[SE][SS] நான் விரும்புகின்றேன்;[SE][QE]
9. [QS][SS] பாவிகளுக்குச் செய்வதுபோல்[SE][SS] என் உயிரைப் பறித்து விடாதீர்![SE][SS] கொலை வெறியர்களுக்குச் செய்வதுபோல்[SE][SS] என் வாழ்வை அழித்து விடாதீர்![SE][QE]
10. [QS][SS] அவர்கள் கைகளில் தீச்செயல்கள்;[SE][SS] அவர்கள் வலக்கையில் [BR] நிறையக் கையூட்டு.[SE][QE]
11. [QS][SS] நானோ மாசற்றவனாய்[SE][SS] நடந்து கொள்கின்றேன்;[SE][SS] என்னை மீட்டருளும்;[SE][SS] எனக்கு இரங்கியருளும்.[SE][QE]
12. [QS][SS] என் கால்கள்[SE][SS] சமமான தளத்தில் நிற்கின்றன;[SE][SS] மாபெரும் சபையில்[SE][SS] ஆண்டவரைப் புகழ்ந்திடுவேன்.[SE][PE][QE]
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 26 / 150
நேர்மையாளரின் விண்ணப்பம்
(தாவீதுக்கு உரியது)

1 ஆண்டவரே, நான் குற்றமற்றவன் என்பதை அறிவியும்; ஏனெனில், என் நடத்தை நேர்மையானது; நான் ஆண்டவரை நம்பினேன்; நான் தடுமாறவில்லை. 2 ஆண்டவரே, என்னைச் சோதித்து ஆராய்ந்து பாரும்; என் மனத்தையும் உள்ளத்தையும் புடமிட்டுப் பாரும்; 3 ஏனெனில், உமது பேரன்பு என் கண்முன் இருக்கின்றது; உமக்கு உண்மையாக நடந்து வருகிறேன். 4 பொய்யரின் நடுவில் நான் அமர்வதில்லை; வஞ்சகரோடு நான் சேர்வதில்லை. * மத் 5: 8. 5 தீயோரின் மன்றத்தை நான் வெறுக்கின்றேன்; பொல்லாரின் நடுவில் நான் அமர்வதில்லை. 6 மாசற்றவனாய் என் கைகளைக் கழுவுகின்றேன்; ஆண்டவரே, உம் பலிபீடத்தை வலம் வருவேன். [ …* ‘யாக்கோபே! உனது முகத்தை’ என்பது எபிரேய பாடம்.. ] 7 உரத்த குரலில் உமக்கு நன்றிப்பா பாடுகின்றேன்; வியத்தகு உம் செயல்களை எல்லாம் எடுத்துரைக்கின்றேன்; 8 ஆண்டவரே, நீர் குடிகொள்ளும் இல்லத்தை நான் விரும்புகின்றேன்; உமது மாட்சி தங்கியுள்ள இடத்தை நான் விரும்புகின்றேன்; 9 பாவிகளுக்குச் செய்வதுபோல் என் உயிரைப் பறித்து விடாதீர்! கொலை வெறியர்களுக்குச் செய்வதுபோல் என் வாழ்வை அழித்து விடாதீர்! 10 அவர்கள் கைகளில் தீச்செயல்கள்; அவர்கள் வலக்கையில்
நிறையக் கையூட்டு.
11 நானோ மாசற்றவனாய் நடந்து கொள்கின்றேன்; என்னை மீட்டருளும்; எனக்கு இரங்கியருளும். 12 என் கால்கள் சமமான தளத்தில் நிற்கின்றன; மாபெரும் சபையில் ஆண்டவரைப் புகழ்ந்திடுவேன்.
மொத்தம் 150 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 26 / 150
×

Alert

×

Tamil Letters Keypad References